#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

23 பிப்ரவரி, 2012

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய கோரிக்கை!


10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய கோரிக்கை!

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், அவரது பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை சாதி, மத, வழக்கு வேறுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மதுரை பிரசிடெண்ட் ஓட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் குறிப்பிட்டதாவது:


"தமிழக முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா அவர்களின் 64-வது பிறந்த நாள் வரும் 24-ம் தேதி வருகிறது. அவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நான் ஒரு கோரிக்கை விடுப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். நீண்ட காலம் சிறையில் தண்டனை அனுபவிக்கின்றவர்கள் தமிழகத்தின் மத்திய சிறைகளில் ஆயிரக்கணக்கில் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவிப்பவர்கள் 400 பேருக்கு மேல் உள்ளனர். 12 ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம் அனுபவிப்பவர்கள் 250 பேருக்குமேல் உள்ளனர். 14 ஆண்டுகளையும் தாண்டி இன்று பலர் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர்களையெல்லாம் விடுதலை செய்ய வேண்டும். அதில் சாதி, சமயம், வழக்குகள் என்ற வித்தியாசமெல்லாம் பார்க்காமல் இந்த விடுதலை அமைய வேண்டும்.

கடந்த காலங்களில் செல்வி ஜெயலலிதா அம்மையார் முதல்வராக பொறுப்பேற்ற போது, பலமுறை தனது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறை வாசிகளை விடுதலை செய்திருக்கிறார். அவரது 64-வது பிறந்த நாளிலும் விடுதலை செய்ய வேண்டும் என்ற அவாவை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.

அரசியல் நாகரீகத்தோடு பிரச்சினைகளை அணுகக் கூடியவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்கள். நன்மைகளை பாராட்டுவதும், குறைகளை சுட்டிக் காட்டுவதும், சமுதாயத் தேவைகளுக்கு குரல் கொடுப்பதும் எங்கள் கடமை.

அண்மையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலாஸ் மாளிகை தீப்பிடித்து சேதம் அடைந்த போது அதை இடித்து தரை மட்டமாக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதைப் பாதுகாத்து புதுப்பித்து கலாச்சார சின்னத்தை காப்பாற்ற வேண்டும் என ஆற்காடு இளவரசரும், நாங்களும் கோரிக்கை வைத்தோம். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தோம்.

அதேபோன்று தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக் குழு கூட்டத்தில், பள்ளிவாசல்கள், கபரஸ்தான்கள், தர்காக்களுக்கு இதுவரை பட்டா வழங்காமல் இருந்தால் உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.

எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு தமிழக அரசு நில நிர்வாக ஆணையர் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு இதுபற்றி தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதற்கு எங்களுடைய நன்றியை தெரிவித்தோம்.
அரசியல் நாகரீகம் கருதி பிறந்த நாள்வாழ்த்தும், கோரிக்கைகளும் தெரிவிப்பது எங்களது கடமை.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அமோக ஆதரவுடன் அவர் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தார். அவரை ஆதரித்த மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமாக பால் விலை, பேருந்து கட்டண உயர்வுகள், வரலாறு காணாத மின்வெட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்குபிரச்சினைகள் இன்று தமிழகத்தை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கின்றன.

சிறந்த நிர்வாகி அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பான் என்பதும், சிறந்த அரசியல்வாதி அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பான் என்றும் சொல்லப்படும். இப்போது நம்முடைய தமிழக முதல்வர் அடுத்த தலை முறையை பற்றி சிந்திக்காமல் அடுத்த தேர்தலை பற்றி சிந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என்று சொல்லி வருகிறார். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிற வகையில் அவரது ஆட்சி அமைய வேண்டும்.

தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் மார்ச் 1 முதல் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு 11 மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தனி மனித உரிமை, மாநில உரிமை என மக்கள் விழிப்படைந்துள்ள இக்காலகட்டத்தில், அதிலும் குறிப்பாக தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் தங்களுடைய உரிமைகளை மக்கள் நிலைநாட்டி வரும் காலச் சூழ்நிலையில் மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் அதன் உரிமைகளில் தலையிடக் கூடிய சட்டங்களை அறிமுகப்படுத்தக் கூடாது என்பதே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப் பாடு.

திருமண பதிவில் மதம் கட்டாயம் வேண்டும்; திருமண பதிவின் போது மதம் என்பது இனி குறிப்பிடப்பட மாட்டாது என அறிவிக்க சட்ட அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக டெக்கான் கிரானிக்கல் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு திருமணத்திலும் மணமகன், மணமகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பது நிச்சயம் குறிப்பிடப் பட்டே ஆக வேண்டும். மதம் குறிப்பிடக்கூடாது என்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிப்பது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முடிவெடுத்துள்ளது. 15-ம் தேதி கலைஞர் பங்கேற்கின்ற கூட்டத்தில் நானும் பங்கேற்க உள்ளேன். அதற்கு முன்னதாக தலைமை நிலையத்திலிருந்து எங்களுடைய நிர்வாகிகள் பரப்புரை செய்ய இருக்கிறார்கள்.

தி.மு.க.வை நாங்கள் ஆதரிப்பதற்கான காரணம் அரசியல்ரீதியானது அல்ல; அது கொள்கை ரீதியானது. பல விஷயங்களில் எங்களோடு தி.மு.கழகம் ஒத்து போகிறது. ஆகவேதான் இந்த கூட்டணி தொடர்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய அளவில் இன்று மிகச் சிறப்பாக செயல்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஒரே பெயரில் இது இயங்கும். இதற்கான தேசிய நிர்வாகிகள் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

வடஇந்திய தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் தனித்து போட்டியிடுகிறது. அண்மையில் நடைபெற்ற மகாராஷ்டிர மாநில உள்ளாட்சித் தேர்தலில் நாக்பூர், அமராவதி ஆகிய மாநகராட்சிகளில் 4 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு மாணவர் பேரவை, யூத் லீக், மகளிர் அணி, தொழிலாளர் அணி ஆகியவை அமைக்கப் பட்டு தமிழகம் முழுவதும் அதன் அமைப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
வரும் 27-ம் தேதி திருப்பூரில் நடைபெறும் ஆலோசனை சுதந்திர தொழிலாளர் யூனியன் ஆலோசனை கூட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன்."

மேற்கண்டவாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.
பேட்டியின் போது, மாநில துணைத் தலைவரும், மதுரை புறநகர் மாவட்டத் தலைவரு மான டாக்டர் ஏ.கே. முகைதீன், செயலாளர் எஸ். ஜாகீர் உசைன், பொருளாளர் எம். சலீம் சேட் மற்றும் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மவ்லவி பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம், செயலாளர் ஏ. இக்பால் பாஷா, பொருளாளர் இ.முஹம்மது நஜீப் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். 


 நன்றி.இந்நேரம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக