#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

20 பிப்ரவரி, 2012

சொகுசு ஓட்டலாக மாறிய ரஷ்ய விமானத்தாங்கி போர்க்கப்பல்


பொட்டல் காட்டையும், பொன் விளையும் பூமியாக்கும் வல்லமை படைத்தவர்கள் சீனர்கள். ரஷ்ய கடற்படையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை புரிந்த கியேவ் என்ற விமானத்தாங்கி போர்க்கப்பல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்து ஓய்வு பெற்றது.


கப்பலின் பல பகுதிகள் போரில் ஈடுபடுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்து விட்டதால் சீனாவை சேர்ந்த வர்த்தக நிறுவனத்துக்கு விலைக்கு விற்கப்பட்டது. அந்த நிறுவனம் இந்த கப்பலை காட்சி பொருளாக மாற்றாமல் உருப்படியான ஒரு வேலையை செய்தது. இந்த கப்பலை ஆடம்பர ஓட்டலாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக 70 கோடி ரூபாயை அந்த நிறுவனம் செலவிட்டது.


கப்பலின் கீழ் தளங்களில் வெடி மருந்துகள், துப்பாக்கிகள், ஏவுகணைகள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவற்றை வைத்திருந்த அறைகள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் தங்கும் ஆடம்பர அறைகளாக மாற்றப்பட்டன. 


இந்த கப்பலில் மொத்தம் 148 அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட விலை உயர்ந்த மரங்களை இழைத்து நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடியவையாக ஒவ்வொரு அறையும் மாற்றப்பட்டுள்ளது.


இந்த கப்பலின் குளியல் அறை, கழிப்பறை ஆகியவையும் பல கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப் பட்டுள்ளன. சிறுவர்கள் விளையாடுவதற்கு வசதியாக ஏற்கனவே பயன்படுத்தப் பட்ட சில போர் விமானங்கள், பீரங்கிகள், கப்பலின் மேல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் தியான்ஜின் நகர கடற்கரைக்கு சிறிது தூரத்தில் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இந்த கப்பல்.


கடற்கரை அழகை காண வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வழக்கமான ஓட்டல்களில் தங்குவதை விட கடலுக்குள் வண்ண விளக்குகளுடன் மிதந்து கொண்டிருக்கும் இந்த கப்பல் ஓட்டலில் தங்குவதை பெரிதும் விரும்புகின்றனர்.



இந்த கப்பலில் ஒரு சில நாட்கள் தங்குவதற்கு மட்டும் சில லட்சங்கள்  கட்டணமாக பெறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக