
நாம் தமிழர் கட்சியின் தர்மபுரி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் தர்மபுரி ரோட்டரி அரங்கில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் சீமான் பேசுகையில், "தமிழர்கள் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் பா.ஜ.க. போன்ற தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. இதனால் தமிழர்களின் உரிமைகளை அந்த கட்சிகளால் மீட்டு தர முடியாது. திராவிட கட்சிகள் கொள்கைகளை மறந்து விட்டன.
தமிழகத்தில் சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் பிரிந்து வாழ்கின்றனர். சாதிகளை அடிப்படையாக கொண்டு பல கட்சிகள் உருவாகி உள்ளன. இந்த கட்சிகளால் எந்த வித மாற்றமும் ஏற்படாது.
தமிழ்நாட்டில் தமிழை பற்றி பேசினால் தீவிரவாதம் என்று சொல்கிறார்கள். தமிழர்கள் பிரிந்து கிடப்பதாலேயே காவிரி பிரச்சினை மற்றும் முல்லை பெரியார் பிரச்சினை ஆகியற்றில் உரிய தீர்வுகளை பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலை மாறவேண்டுமெனில் நாம் தமிழர் கட்சியை அனைவரும் ஆதரிக்க வேண்டும்." என்றார்.
நன்றி.இந்நேரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக