
இதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மோதலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
சிதறி ஓடியவர்கள் அங்கு நின்ற கார் உள்ளிட்ட வாகனங்களை கல்வீசி தாக்கினர். இரு தரப்பினரும் பெட்ரோல் குண்டுகளை வீசினர். கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதையடுத்து கலவரம் கட்டுக்குள் வந்தது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு 1500-க்கும்மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான் பாண்டியன், செய்தியாளர்களிடம் பேசுகையில், "இடைத்தேர்தல் நேரத்தில் தேவேந்திர குல சமுதாயம், முஸ்லிம்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு சதி செய்துள்ளனர். தேவேந்திரகுல மக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக உள்ளனர். சங்கரன்கோவிலில் கலவரத்தை தூண்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறை பாதுகாப்பை மீறி இச்சம்பவம் நடந்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினருக்கு நன்கு தெரியும். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்திருந்தால் மோதலை தடுத்திருக்க முடியும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. பரமக்குடி துப்பாக்கிச்சூடு, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் காவல்துறை தடியடி என தாக்குதல் தொடர்கிறது. தென் மண்டல ஐ.ஜி., ராஜேஸ்தாஸ் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
நன்றி.இந்நேரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக