கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ., முருகுமாறன். அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவர் நேற்று காலை, டி.நெடுஞ்சேரியில் கிளைச் செயலர் மாசிலாமணி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க, காரில் புறப்பட்டார். அவருடன் காட்டுமன்னார்கோவில் ஒன்றியத் தலைவர் மணிகண்டன் சென்றார். காரை டிரைவர் கல்வி பிரபு ஓட்டினார்.
சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரம் அடுத்த வானமாதேவி கிராமம் அருகே சென்றபோது, திடீரென முதியவர் ஒருவர் சைக்கிளில் குறுக்கே வந்தார். இதை சற்றும் எதிர்பாராத டிரைவர் கல்வி பிரபு, முதியவர் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார்.

கார் நிலை தடுமாறி, அருகில் உள்ள பள்ளத்தில் உருண்டது. இந்த விபத்தில், காரில் இருந்த முருகுமாறன் எம்.எல்.ஏ., காட்டுமன்னார்கோவில் ஒன்றியத் தலைவர் மணிகண்டன், டிரைவர் கல்வி பிரபு ஆகியோர் காயமடைந்தனர். மூவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தோள்பட்டையில் பலத்த காயமடைந்த முருகுமாறன் எம்.எல்.ஏ., மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக