
டெல்லி உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பி.பி. சிங்கால் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் முறையீடு செய்தனர். பி.பி.சிங்கால் தனது முறையீட்டில், ``ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது, ஒழுக்கக்கேடானது, இந்திய கலாசாரத்துக்கு எதிரானது'' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குழந்தைகள் உரிமைக்கான டெல்லி ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அமரேந்திர சரண் வாதிடும்போது, ``ஹோமோ செக்ஸ், லெஸ்பியன் ஆகிய ஓரினச்சேர்க்கைகளை இயற்கை அங்கீகரிக்கவில்லை. இவை இயற்கையின் ஒழுங்குக்கு எதிரானவை'' என்று கூறினார்.
அதற்கு நீதிபதிகள், ``ஓரினச்சேர்க்கை என்றால் என்ன? இது இயற்கைக்கு எதிரானதா? இயற்கையின் ஒழுங்குமுறையை விளக்கக்கூடிய வல்லுனர் யார் இருக்கிறார்கள்? வாடகைத்தாய், சோதனைக்குழாய் குழந்தையும் கூட இயற்கைக்கு எதிரானவர்கள்தானா?'' என தொடர்சியாக கேள்விகள் எழுப்பினர். வழக்கு விசாரணை தொடர்ந்து இன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக