அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
25 செப்டம்பர், 2011
நேபாள விமான விபத்து: பலியான 8 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள்!
நேபாள விமான விபத்தில் பலியானோரில் 8 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இருவர் முன்னாள் அமைச்சர்களின் உறவினர்கள் தகவல்கள் கூறுகின்றன.
நேபாளத்தில் இன்று காலையில் இமய மலையின் மீது விமானம் மோதியதில் 19 பேர் பலியானார்கள். பலியானவர்களில் 8 பேர் திருச்சியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. விபத்தில் பலியான மீனாட்சி சுந்தரம் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் உறவினர் ஆவார். மற்றொருவர் முன்னாள் அமைச்சர் செல்வராஜின் உறவினர் ஆவார்.
மீனாட்சி சுந்தரத்துடன் சென்ற மணிமாறன், மருதாச்சலம், புகழேந்தி, கனகசபேசன், தியாகராஜன், காட்டூர் மகாலிங்கம்,ஆகியோரும் சென்று இருந்தனர். அவர்களும் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது.
இமயமலையை சுற்றிப் பார்க்க திருச்சியில் இருந்து இவர்கள் நேபாளத்துக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள். அனைவரும் திருச்சி கட்டுமான சங்க உறுப்பினர்கள் ஆவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக