#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

30 செப்டம்பர், 2011

மனிதநேய மக்கள் கட்சி: உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டி ஏன்?

 கடந்த சட்டமன்ற தேர்தலில் மிகவும் பலகீனமான நிலையில் அ.இ.அதிமுக&வின் அரசியல் களம் இருந்தது. அப்போது செல்வி.ஜெயலலிதா அவர்கள் அதிமுக சார்பில் மனிதநேய மக்கள் கட்சிக்கு அழைப்பு விடுத்தார். ஒன்றல்ல. இரண்டுமுறை!

திருமங்கலம், பெண்ணாசரம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக டெபாஸிட் இழந்திருந்த நிலையில், அதிமுக இனி தேறாது என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்று மு.க.அழகிரி கர்ஜித்தார். அதிமுகவின் பல இரண்டாம் கட்டத் தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிமுகவிலிருந்து விலக திமுகவல் ஐக்கியமாகிக் கொண்டிருந்தனர்.


இச்சூழலில்தான், ஆட்சிமாற்றம் ஏற்பட வேண்டும் என்ற ஒரே பொதுநோக்கில் அதிமுகவின் அழைப்பை ஏற்று மமக ஜெயலலிதாவை சந்தித்து, அக்கூட்டணியில் முதல் பெரும் கட்சியாக இணைந்தது. பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் என அடுத்தடுத்த கட்சிகள் கூட்டணிக்குள் வந்தன. கூட்டணி கட்சிகளை மிகுந்த மரியாதையுடன் ஜெயலலிதா நடத்தினார். புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, மூவேந்தர் முன்னனி கழகம் என கூட்டணி பலம் பெற்றது.

திமுகவின் ஊழல், குடும்ப சர்வாதிகாரம், ஆகியவற்றுக்கு எதிரான மக்கள் கோபமும், வலுவான கூட்டணியும் அதிமுக அணியை வெற்றிபெற வைத்தது.இதே கூட்டணி, உள்ளாட்சி தேர்தலிலும் தொடர வேண்டும் என அனைவரும் விரும்பினர். ஆனால், கூட்டணி கட்சிகள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் 10 மேயர் தொகுதிகளுக்கும் மேயர் வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இது குறித்து அதிமுக தலைமையிடம் கேட்டப்போது, எப்போதும் எங்கள் விருப்பத்திற்கேற்ப முதலில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதும், பிறகு கூட்டணி கட்சிகளின் விருப்பங்களை ஏற்று, அதில் பலவற்றை வாபஸ் பெற்று, அனைவருக்கும் ஏற்புடைய புதிய பட்டியலை வெளியிடுவதும் சகஜம் என்று விளக்கமளித்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலிலும் இப்படித்தான் நடந்தது என்பதால் கூட்டணி கட்சிகள் அதை பொருட்படுத்தவில்லை. ஆனால், தேமுதிகவை கழற்றிவிடத்தான் ஜெயலலிதா காய் நகர்த்துகிறார் என சந்தேகம் வலுத்தது. அது உண்மையல்ல என்பதும், யாரும் தேவையில்லை என்ற மன நிலையில்தான் ஜெயலலிதா மமதையில் இருக்கிறார் என்பதும் அடுத்தடுத்த நிகழ்வுகளில் தெரிய வந்தது. ஆயினும் இக்கூட்டணி உடைபட்டு விடக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி செய்தது.

நமது சார்பில் மமக பொதுச்செயலாளர் பி.அப்துல் சமது, பொருளாளர் ஹாரூண் ரஷீது ஆகியோர் இருவர் குழு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி வைக்கப்பட்டது. ஒ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், விஸ்வநாதன் ஆகிய மூவர் குழு அதிமுக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியது.
முதல் பேச்சுவார்த்தையில் மமக சார்பில் கேட்கும் இடங்கள் அவர்களிடம் அளிக்கப்பட்டது.

முதல் பட்டியலை முதல் சுற்றில் கையளித்தப்போது 2 துணை மேயர்களையும், 4 நகராட்சி துணைத் தலைவர்களையும், 7 பேரூராட்சி துணைத் தலைவர்களையும் தவிர்க்குமாறும், அதை தேர்தலுக்கு பிறகு பேசுமாறும் அதிமுக குழு கேட்டுக் கொண்டது. மற்றவற்றை பரீசீலிக்கலாம் என்றனர்.
பிறகு ஞாயிறு இரவு 10 மணிக்கு பொருளாளர் ஹாரூன் ரஷீதை தொடர்புக் கொண்ட செங்கோட்டையன் போயஸ் தோட்டம் வருமாறு அழைக்க அவரும், பொதுச்செயலாளர் அப்துல் சமதும் சென்றனர்.

முந்தைய பட்டியலிருந்து மீண்டும் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டனர். பிறகு அதிலிருந்து 20 சதவீதம் கழித்து புதிய பட்டியல் கொடுக்கப்பட்டது. நாளை காலை, அதை அம்மாவிடம் கொடுப்பதாக அவர்கள் கூறினர்.

பிறகு திங்கள்கிழமை அன்று பேரா.ஜவாஹிருல்லாஹ்விடம் போனில் பேசிய பன்னீர் செல்வம் இன்று இரவு பேசுவோம் என்றும், பெரும்பாலும் நீங்கள் கேட்ட இடங்கள் ஒகே&யாகி விடும் என்றும் கூறினார். அன்று இரவு மீண்டும் தொடர்பு கொண்டவர் செவ்வாய்கிழமை காலை பேசலாம் என்றனர்.

செவ்வாய்கிழமை காலையில் அப்துல்சமதும், ஹாரூண் ரஷீதும் போயஸ் தோட்டம் சென்றனர். சுமூக முடிவு ஏற்படவில்லை. பிறகு வேட்பாளர் இறுதி தேர்வில் இருந்த தமுமுக, மமக தலைமை நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.

இறுதியாக மொத்த பட்டியலிருந்து 50 சதவீத இடங்களை: அதாவது பாதிக்குப்பாதி குறைத்துக் கொண்டு இறுதிப்பட்டியலை செவ்வாய் அன்று கொடுத்தனர்.

மாநகராட்சி துணைமேயர் 2, நராட்சி துணைத் தலைவர் 4, பேரூராட்சி துணைத் தலைவர் 7 ஆகியவற்றை தேர்தலுக்கு பிறகு பேசிக்கொள்வது என்பதாலும் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை மாவட்ட அளவில் பேசிக்கொள்வது என்பதாலும் கடைசி பட்டியலில் இவை அனைத்தையும் தவிர்த்து விட்டு தமிழக முழுக்க மொத்தமாக கீழ்க்கண்ட அளவிலான ஒதுக்கீட்டை மட்டுமே அதிமுகவிடம் கேட்டோம்.

அதன் விபரம்:
1) நகராட்சி தலைவர் - 5
2) பேரூராட்சி தலைவர் - 15
3) மாவட்ட கவுன்சிலர் - 4
4) ஒன்றிய கவுன்சிலர் - 20
5) மாநகராட்சி கவுன்சிலர் - 27
6) நகராட்சி கவுன்சிலர் - 150
7) பேரூராட்சி  கவுன்சிலர் - 175

இதில் மூன்றில் ஒரு பங்கு இடத்தை கூட தரும் மனநிலையில் அவர்கள் இல்லை என்பதும், கடந்த சட்டமன்ற தேர்தலில் வைகோவை வெறுப்பேற்றி அனுப்பி வைத்தது போல் நம்மையும் செய்கிறார்கள் என்பதையும் உணர முடிந்தது.

இதனிடையே ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்தாலும், மறுபுறம் நம் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது என்று முடிவு செய்து அதன்படி செவ்வாய் மதியம் வெளியிட்டோம்.

அதன் பிறகு அதிமுக தரப்பிலிருந்து வந்த தகவல்கள் திருப்திகரமாக இல்லை. நாம் கடைசியாக கொடுத்த பட்டியிலிருந்து 30 சதவீத இடங்களை கூட அவர்கள் தரத் தயாராக இல்லை என்பதை யூகிக்க முடிந்தது.

திமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் மற்றும் தேமுதிக தலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் என ஏழு முனை போட்டி உருவாகி களத்தில் எதிரணி வாக்குகள் பிரிவதால் அதிமுக தனித்தே வெல்லலாம் என ஜெயலலிதா கணக்கு போட்டு தன் கட்சியினருக்கு முழு வாய்ப்பையும் அளிக்கும் திட்டத்தில் இருக்கிறார் என்பதையும் புரிய முடிந்தது.

தேமுதிகவும், சி.பி.எம்மும் கூட்டணியிலிருந்து வெளியேறி திங்கள்கிழமை புதிய அணியை அறிவித்தன. எஞ்சிய இரண்டு முக்கிய கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மனிதநேய மக்கள் கட்சியும் என்ன செய்யப் போகின்றன? என்ற கேள்வி எழுந்தது. அவர்கள் எதைக் கொடுத்தாலும், கேள்வியின்றி பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பலகீனமான நிலையில் நாம் இல்லை.

செவ்வாய்கிழமை மதியம் 1 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டி என அறிவித்தது.
இந்நிலையில் மமகவின் அவசர உயர்நிலைக்குழு கூட்டம், செவ்வாய் மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தலைமையில் கூடியது.

. கூட்டணியில் தொடர்வதா?
. தனித்து போட்டியிடுவதா?
. புதிய கூட்டணியில் இணைவதா?
. தொடண்டர்களின் மனநிலை?
. சமுதாய மக்களின் உணர்வுகள்
. தனித்து போட்டியிடுவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள்.

இவை அனைத்தும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சமுதாய மக்களின் அரசியல் எதிர்பார்ப்பையும், வெற்றிடத்தையும் நிரப்புவதற்காகவே கட்சியை தொங்கினோம். தனிச்சின்னம், சட்டமன்றத்தில் கூடுதல் தொகுதிகள், நாடாளுமன்றத்தில் உரிய பங்கீடு, உள்ளாட்சிகளில் அதிக இடங்கள் ஆகியவை சிறுபான்மை மக்களின் விருப்பங்களாக இருக்கிறது.

இந்நிலையில்தான் அதிமுக நமது பட்டியலை ஏற்கும் மனநிலையில் இல்லை என்பதையும், அதை நிராகரித்து பகிரங்கமாக வெளிப்படுத்தும் துணிச்சலும் இல்லை என்பதையும் புரிந்துக்கொண்டோம்.
மமக கேட்ட இடங்களை கொடுக்கவில்லை என்ற கருத்து பரவினால், ஏற்கனவே மோடி- ஜெயலலிதா சினேகிதத்தால் கோபத்தில் உள்ள தமிழக முஸ்லிம்களை மேலும் கொந்தளிக்க வைக்கும் என்பதாலேயே, ஜெயலலிதா தரப்பு உறுதியாக எதையும் தெரிவிக்காமல் காலம் தள்ளியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே, ஒரு புறம் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கும்போதே மறுபுறம் செவ்வாய் மதியம் 1 மணிக்கு முதல் வேட்பாளர் பட்டியலை நமது இணைய தளத்தில் வெளியிட்டோம்.

நாம், சிறுபான்மை மக்கள் அதிக அளவில் உள்ளாட்சி, அதிகாரங்களில் அமர வேண்டும் என்பதற்காகவே பொறுமை காத்தோம். அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும் நிலையில் ஒரிரு பதவிகளுக்காகவோ, வாரியங்களுக்காகவோ அதிமுக அணியில் இடம் பெற வேண்டிய அடிமைத்தன அரசியல் நமக்கு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தோம்.

வீசி எரியும் ரொட்டிகளுக்காக கையேற்றும் அரசியலை வீழ்த்த வேண்டும் என்பதே நமது லட்சியம். அதிக அளவில் அதிகார அவைகளில் இடம்பெறவேண்டும் என்பதற்காகவே மமகவை தொடங்கிறோம்.

எனவே, ஏற்றுக் கொண்ட லட்சியங்களுக்காக உள்ளாட்சியில் குறைவான இடங்களோடு நம்மை முடக்க நினைத்த அதிமுகவின் அணுகுமுறையை ஏற்காமல், தனித்துப் போட்டி என்ற நிலையை எடுத்துள்ளோம்.

பெரிய களமான நாடாளுமன்ற தேர்தலையே தனித்து களம் கண்டவர்கள் நாம்!

தனித்து அதே போன்ற லட்சியத்துக்காக துணிச்சலுடன் மீண்டும் தனித்து களம் காண்கிறோம்.
தேமுதிக, சி.பி.எம், சி.பி.ஐ. அணியுடன் கூட்டணி வைக்கலாமே என்று பலரும் கேட்கிறார்கள். அவர்களுடன் கூட்டணி வைத்தால் அங்கு ஒதுக்கப்படும் இடங்களை விட அதிக இடங்களை மமக தனித்து போட்டியிட்டே வெல்லும் (இன்ஷா அல்லாஹ்...)

ஏற்கனவே உள்ளாட்சி இடைத்தேர்தல் தென்காசி நகராட்சியிலும், லால்பேட்டை பேரூராட்சிகளிலும் தனித்து நின்று ஆளுங்கட்சியை மூன்றாவது இடத்துக்கு தள்ளிய அனுபவம் நமக்குண்டு!
அதுபோல் 9 மேயர் பதவிகளுக்கு ஏன் ஆட்களை நிறுத்தவில்லை என கேட்கலாம். பெரிய அளவில் நம்மிடம் பணம் இல்லை. எனவே தான் 'அகல உழுவதை விட ஆழ உழுவது' நல்லது என்ற அடிப்படையில் களம் அமைத்திருக்கிறோம், நாம் போட்டியிடாத இடங்களில் கருத்து சொல்வதில்லை என்ற நிலையையும் எடுத்துள்ளோம்.

வழக்கம்போல் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளையும், இடையூறுகளையும் எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் எதிர்த்து நிற்போம்.

ஆதிக்க அரசியலை வேரறுப்போம்: ஒடுக்கப்பட்டோர் நலனை முன்னெடுப்போம்
என்ற அரசியல் முழக்கத்தையும்,
ஊழலற்ற உள்ளாட்சி: அதுவே மனிதநேய மக்கள் கட்சியின் மனசாட்சி
என்ற தேர்தல் முழக்கத்தையும் களத்தில் முழங்குகிறோம்.

நெருப்பில் வார்த்தெடுத்த ஈட்டி முனை போராளிகளே, தேர்தல் போட்டி முனையில் போராட புறப்படுங்கள்!

புறப்படுகிறோம்... முரசு கொட்டி! சொந்தங்களே வாருங்கள் ஆதரவு கரம் நீட்டி!

அன்புடன்...
எம்.தமிமுன் அன்சாரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக