கொள்ளுமேடு தமுமுக&மமக பொதுக்குழு கூட்டம்(17/09/2011) தமுமுகவின் மாவட்ட செயலாளர் சகோ.அமானுல்லாஹ் முன்னிலையிலும் ,கொள்ளுமேடு தமுமுககிளை மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.ஜாக்கிர் ஹுசைன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
17 செப்டம்பர், 2011
கொள்ளுமேடு தமுமுக&மமகவின் பொதுக்குழு
அஸ்ஸலாமு அழைக்கும்(வராஹ்)
கொள்ளுமேடு தமுமுக&மமக பொதுக்குழு கூட்டம்(17/09/2011) தமுமுகவின் மாவட்ட செயலாளர் சகோ.அமானுல்லாஹ் முன்னிலையிலும் ,கொள்ளுமேடு தமுமுககிளை மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.ஜாக்கிர் ஹுசைன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
பொதுக்குழு முதல் அமர்வாக பித்ரா விநியோகம் மற்றும் கண்சிகிச்சை முகாம் மற்றும் 01-07-11 முதல் 01-09-11 வரையில் உள்ள வரவு செலவு கணக்குகளை படிக்கப்பட்டது. இரண்டாம் அமர்வில் தமுமுகவின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் வருகின்ற ஊராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான விசயங்களை உறுப்பினர்களிடம் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்பம் மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் கொள்ளுமேடு ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு கொள்ளுமேடு தமுமுக கிளைத்தலைவர் ஷபிகுர்ரஹ்மான் விருப்ப மனு அளித்தார்.விருப்பமனுக்கான இரண்டாயிரம் கட்டணத்தையும் அளித்தார்.
மேலும் ஊராட்சிமன்ற ஒன்றிய குழு(கவுன்சிலர்) உறுப்பினர் பதவிக்கு விருப்பமனு தமுமுகவின் மாவட்ட செயலாளர் அமானுல்லாஹ் அளித்தார்.
மேலும் விருப்பம் உள்ளவர்கள் மனு அளிக்கலாம் என்று கேட்கப்பட்டது யாரும் முன்வரவில்லை.மனுவும் மனுவுக்கான கட்டணத்தைவும் மாவட்டத்தலைவர் மெஹ்ராஜுத்தினிடம் அளித்து மாநில தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மேலும் தேர்தல் நிதியும் கேட்கப்பட்டது கேட்கப்படவுடனே நல்லவுள்ளம் படைத்தவர்கள் நிதி வாரிவழங்கினர். ''அல்ஹம்துலில்லாஹ்'' நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு பொதுக்குழுவை சிறப்பித்தனர். எல்லாம் புகழும் இறைவனுக்கே''
இன்ஷா அல்லாஹ் முயற்சி உடையார் எழுச்சி அடைவார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக