அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
11 செப்டம்பர், 2011
உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் - சவுதி அரேபியாவில்
உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் சவுதி அரேபியாவின் ஜித்தாவில், ரெட் சீ சிட்டியில் இக்கட்டிடம் கட்டப்படவிருக்கிறது.2008 இல் இதற்கான திட்டப்பணிகள் தொடங்கப்பட்ட போதும், தற்போது இக்கட்டிடத்துக்கான முழு வடிவமைப்பும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் (852 மைல்) உயரத்தில் இந்த ஹோட்டல் உருவாக்கப்படவுள்ளது. சேவை நிறுவனங்கள், ஆடம்பர பங்களாக்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள இக்கட்டிடத்தின் அடியிலிருந்து மேல் உச்சிக்கு லிப்ஃட்டில் செல்லவே 12 நிமிடம் வேண்டுமாம்.
உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடமாகத் தற்போது துபாய் நகரின் பூர்ஜ் கலிஃபா கட்டிடம்.திகழ்ந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக