60 களில் புகழ்பெற்ற இந்திய சினிமா நடிகை ஷர்மிலா தாகூரை 1969ம் ஆண்டு மணம்முடித்தார். அந்நாளில் மிக பிரபலம் வாய்ந்த ஜோடியாக இவர்கள் திகழ்ந்தனர். 1993-96 வரையான காலப்பகுதியில் ஐசிசியின் போட்டி நடுவர் குழுவிலும் பட்டோடி கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
25 செப்டம்பர், 2011
கேப்டன் மன்சூர் அலிகான் மரணம்!
சுவாசக்கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி, டெல்லி மருத்துவமனை ஒன்றில் சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி, சுவாசக்கோளாறு காரணமாக டெல்லியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிட்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவருக்கு 70 வயதாகிறது.
1961 முதல், 1975 ம் ஆண்டு வரை, 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பட்டோடி, அவற்றில் 40 போட்டிகளுக்கு கேப்டனாக பணிபுரிந்திருக்கிறார். துடுப்பாட்டத்தில் மாத்திரமல்லாது, களத்தடுப்பிலும் 'புலி' என வர்ணிக்கப்படுபவர் பட்டோடி. வெளிநாடொன்றில் இந்திய அணிக்கு முதல் டெஸ்ட் வெற்றியை தேடி தந்தவர் அவரே. தனது 21 வயதில், 1961ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக முதன் முதலில் களமிறங்கினார்.
60 களில் புகழ்பெற்ற இந்திய சினிமா நடிகை ஷர்மிலா தாகூரை 1969ம் ஆண்டு மணம்முடித்தார். அந்நாளில் மிக பிரபலம் வாய்ந்த ஜோடியாக இவர்கள் திகழ்ந்தனர். 1993-96 வரையான காலப்பகுதியில் ஐசிசியின் போட்டி நடுவர் குழுவிலும் பட்டோடி கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
60 களில் புகழ்பெற்ற இந்திய சினிமா நடிகை ஷர்மிலா தாகூரை 1969ம் ஆண்டு மணம்முடித்தார். அந்நாளில் மிக பிரபலம் வாய்ந்த ஜோடியாக இவர்கள் திகழ்ந்தனர். 1993-96 வரையான காலப்பகுதியில் ஐசிசியின் போட்டி நடுவர் குழுவிலும் பட்டோடி கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக