அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
11 செப்டம்பர், 2011
இரோம் ஷர்மிளாவின் போரட்டத்திற்கு ஆதரவாக நாடு தழுவிய கையெழுத்து போராட்டம் மற்றும் விழுப்புணர்வு பிரச்சாரம்
இரோம் ஷர்மிளா, இந்திய அரசின் அடக்குமுறைச் சட்டமான “ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் 1958′ நீக்கப்பட வேண்டும் என்று கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பட்டினிப் போராட்டம் நடத்தும் மணிப்பூர் பெண்.
அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு செவி சாய்த்த மத்திய அரசு, சர்மிளாவின் 11 ஆண்டு போராட்டத்தை கண்டுக்கொள்ளவில்லை, இதைதான் பல மனித உரிமை
ஆர்வலர்கள் அரசின் நயவஞ்சகத்தனம் என்று குறிப்பிடுகின்றனர். இது பொது சமுகத்தை மிகுந்த கோபமூட்டியது இதன் விளைவாக பொது சமூகம் நாடு தழுவிய போராட்டத்தை காந்தி பிறந்த நாள் அக்டோபர் 2 அன்று நடத்த திட்டம்மிட்டுள்ளது.
”இரோம் சர்மிளாவின் போராட்டத்திற்கு மத்திய அரசின் பரிதாபமான பதில் எங்களை காயப்படுத்தியது காரணம் வன்முறையற்ற போராட்டத்தை அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் உதாசினப்படுத்தக கூடாது. இதனால் தான் நாடு தழுவிய கையெழுத்து போராட்டம் மற்றும் விழுப்புனர்வு பிரச்சாரம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று National Alliance of People Movement’n ஃபைசல்கான் தெரிவித்துள்ளார்.
பிரச்சாரத்தில் முக்கிய நகரங்களில் மற்றும் முக்கிய தலைநகரங்களில் கையெழுத்து பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கையெழுத்து பிரச்சாரம் டிசம்பர் 10 உலக மனித உரிமை தினத்தன்று நிறைவுபெறும். அனைத்து கையெழுத்துப்பிரதிகளும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் அது கொடுக்கும்பொழுது உண்ணாவிரதம் மற்றும் அமைதிப்பேரணி இந்தியா கேட்டில் ஆரம்பித்து ஜனாதிபதி இல்லத்தில் நிறைவுபெரும்.
நன்றி.தூது.காம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக