அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
28 அக்டோபர், 2012
பக்ரீத் பண்டிகை கொண்டாடிய 107 வயது மூதாட்டி!
திருப்பூர், நல்லூர் சிறுநகர் காலனியில் 107 வயது பாட்டி ஜெஹராவியுடன், ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்த குடும்பத்தினர். (உள்படம்: ஜெஹராவி பாட்டி).
திருப்பூரைச் சேர்ந்த 107 வயது பாட்டி ஜெஹராவி, தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை தனது 189 வாரிசுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை பூர்விகமாகக் கொண்டவர் எஸ்.ஆர். சையத் அப்துல் லத்தீப். இவரது மனைவி பூமா என்ற ஜெஹராவி (107). கடந்த 1951 ஆம் ஆண்டு குடும்பத்துடன் திருப்பூர் வந்த சையத் அப்துல் லத்தீப், ஜெஹராவி தம்பதி பனியன் நூல் பிரிக்கும் வேலை செய்து, குழந்தைகளை வளர்த்தனர். 40 ஆண்டுகளுக்கு முன் சையத் அப்துல் லத்தீப் இறந்து விட்டார். இப்போது, 107 வயதான ஜெஹராவி தன் வாரிசுகளின்
24 அக்டோபர், 2012
ஹஜ்ஜின் சிறப்புகள்
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல்குர்ஆன் 2:196
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்)பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது
22 அக்டோபர், 2012
குஜராத் - மோடியின் கனவு நனவாகுமா?
வளர்ச்சியின் நாயகன், அடுத்த பிரதமர் என்றெல்லாம் பாஜக ஆதரவாளர்களால் வர்ணிக்கப்படும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தேர்தலைச் சந்திக்கத் தயாராய் உள்ளார். இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆவாரா?
002ஆம் ஆண்டு குஜராத்தில் முஸிம்களுக்கு எதிராக நடந்த கலவரத்திற்குச் சில மாதங்களுக்குப் பின் நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளுள் பாரதீய ஜனதா கட்சி 127 தொகுதிகளைப் பெற்றது. 2007ஆம் ஆண்டு தேர்தலில் குஜராத் கலவரத்தின் தாக்கம் குறைந்திருந்தாலும்
நெய்வேலி- அனல் மின்நிலையம் முற்றுகை - 1500 பேர் கைது
21 அக்டோபர், 2012
கட்சி வேறுபாட்டை மறந்து அனைவரும் சிந்திக்க வேண்டும்: ஜெ. சொல்வது முறைதானா: கலைஞர் கேள்வி
சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் செழிப்பாக மாறும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு, தமிழகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம். சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்திற்கு எத்தனை அவசியமானது என்பதைப்பற்றி நான் 2 நாட்களுக்கு முன்பு கூட கடிதம் எழுதியிருந்தேன், திராவிடர் கழகத் தலைவர் இளவல் வீரமணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் ஜி. ராமகிருஷ்ணனும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தா. பாண்டியனும், பா.ம.க. சார்பில் நிறுவனர் ராமதாசும் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.
நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் சேவையுடன் சம்பாதிக்க ஆகாயவியல் துறை
பொறியியல் பாடங்களில் வித்தியாசமானதும் மாணவர்களுக்குப் புதிய பாதையைக் காட்டும் துறையுமான ஆகாயவியல் (Aerospace) பாடத்தை கன்னியாகுமாரி மாவட்டம் குமாரகோவிலில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைகழகம் கற்றுத் தருகிறது. இது நான்காண்டு படிப்பாகும். 2009-ம் ஆண்டு இந்தத் துறை தொடங்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆகாயவியல் துறையின் உட்பிரிவுகளான விமானப் பகுதிகளை வடிவமைத்தல்,
09 அக்டோபர், 2012
ஊட்டி மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய பஸ்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் மஞ்சூர் நோக்கி இன்று ஒரு அரசு பஸ் வந்துகொண்டிருந்தது. மலைப்பாதையில் பரலி அருகே வந்தபோது, பஸ்சின் அச்சு முறிந்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது.
இதனால் என்ன நடக்குமோ என்ற பயத்தில் பயணிகள் அலறினர். பின்னர் திடீரென அந்த பஸ்
சிதம்பரதில் ரூபாய் 2 கேட்டு தொழில் அதிபர் மகன் கடத்தல் தனிபடை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் முகமது யாஷின். இவருக்கு சிதம்பரத்தில் திருமண மண்டபம், வணிக வளாகங்கள் உள்ளன. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
இவரது மகன் முகமது பைசல் (வயது 20). இவர் திருச்சியில் ஜமால்முகமது கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம். படித்து வந்தார். அங்கு விடுதியில் தங்கி இருந்த அவர் விடுமுறை நாட்களில் சிதம்பரம் வந்து செல்வார்.
07 அக்டோபர், 2012
அண்ணலாருக்கு எதிராக அவதூறா? - பொறியாளர் ஜக்கரிய்யா
அல்லாஹ்வின் திருப்பெயரால்.. ..
அண்ணலாருக்கு எதிராக அவதூறா?
- பொறியாளர் ஜக்கரிய்யா
இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது என்றென்ரும் நிலவட்டுமாக !
பேச்சுரிமை என்ற போர்வையில், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலமான முறையில் சித்தரித்து ஒட்டுமொத்த முஸ்லிம்களை துயரத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது மேற்கத்திய உலகம்.
அண்ணலாருக்கு எதிராக அவதூறா?
- பொறியாளர் ஜக்கரிய்யா
இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது என்றென்ரும் நிலவட்டுமாக !
பேச்சுரிமை என்ற போர்வையில், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலமான முறையில் சித்தரித்து ஒட்டுமொத்த முஸ்லிம்களை துயரத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது மேற்கத்திய உலகம்.
06 அக்டோபர், 2012
"முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகளல்லர்" குஜராத் காவல்துறைக்கு சுப்ரீம் கோர்ட் சூடு
"இந்தியச் சமூகம் தற்போது உண்மையில் மதசார்பற்றதாக இல்லை" சமூக நல்லிணக்க-ஜனநாயக விழிப்புணர்வு (Act Now For Harmony and Democracy) அமைப்பின் உறுப்பினர்களுள் ஒருவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மகேஷ் பட், 'இந்தியாவில் தற்கால முஸ்லிம்களின் நிலை' எனும் கருப்பொருளில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது மேற்கண்டவாறு வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். மேலும், "இதுபோன்ற பாரபட்சமான மனப்பான்மைக்கெதிரான (anti-discrimination law) சட்டம் இயற்றப்பட வேண்டியது உடனடியான தேவையாகும்" என்றும் கூறினார்.
05 அக்டோபர், 2012
முஸ்லிம்லீக் விழாவில் கருணாநிதி பேச்சு! இப்படியே பேசி முஸ்லிம்களின் தலையில் 25 வருடம் மிலகாய் அரைத்தது போதும்
"மதவாத சக்திகளுக்கு இடம் தரமாட்டோம்" என்று முஸ்லிம் லீக் பத்திரிக்கையின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசினார்.
இந்திய யூனியம் முஸ்லிம் லீக் கட்சியின் நாளேடான 'மணிச்சுடரின் வெள்ளிவிழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்புரை ஆற்றிய கருணாநிதி "பாரதீய ஜனதாவுடன் கூட்டணி உறவு கொண்ட போது கூட தி.நகரில் நடந்த விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம், கருணாநிதி இருக்குமிடத்தில் மதவாத சக்தி நிச்சயம் தலை காட்டாது என்றார். அந்த நம்பிக்கை வீண் போகாத வகையில் திமுக கடைசி வரை இருந்தது. அந்த நம்பிக்கைக்கு பாதகம் ஏற்படும் நிலை வந்ததும் உறவை அறுத்துக் கொண்டு வெளியே வந்தவன் கருணாநிதி. இந்தியாவை, தமிழ்நாட்டை பொறுத்த வரை மதவாத சக்திகளுக்கு நிச்சயமாக இடம் தரமாட்டோம் என்ற உறுதியை இங்கே தெரிவிக்கிறேன்" என்று கூறினார்.
முஸ்லிம் லீக் கட்சி நாளேட்டுக்கு இன்று வெள்ளிவிழா : கருணாநிதி சிறப்புரை m
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாளேடாக மணிச்சுடர் என்ற பத்திரிக்கை தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பத்திரிக்கையின் வெள்ளிவிழா இன்று மாலை 05 மணிக்கு பெரியார் திடலில் கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்லீக் கட்சியின் மாநிலத் தலைவர் பேரா. காதர்மொஹிதீன் தலைமை வகிக்கும் விழாவில், முஸ்லிம் லீக் கட்சியின் வேலூர் எம்.பி எம். அப்துல்ரஹ்மான் அறிமுக உரை நிகழ்த்துகிறார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)