#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

21 அக்டோபர், 2012

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் சேவையுடன் சம்பாதிக்க ஆகாயவியல் துறை



பொறியியல் பாடங்களில் வித்தியாசமானதும் மாணவர்களுக்குப் புதிய பாதையைக் காட்டும் துறையுமான ஆகாயவியல் (Aerospace) பாடத்தை கன்னியாகுமாரி மாவட்டம் குமாரகோவிலில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைகழகம் கற்றுத் தருகிறது. இது நான்காண்டு படிப்பாகும். 2009-ம் ஆண்டு இந்தத் துறை தொடங்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆகாயவியல் துறையின் உட்பிரிவுகளான விமானப் பகுதிகளை வடிவமைத்தல்,
பிரித்தல், பரிசோதித்தல்,, விண்வெளிக் கலன்களைக் கட்டுதல், ஏவுதல் மற்றும் விண்வெளி சார்ந்த பணிகளைத் தெரியப்படுத்தி, அதில் வல்லுநர்களாக்குவதே பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்கிறார் பல்கலை வேந்தர் ஏ.பி.மஜீத்கான். இத்துறையில் மிகவும் புகழ்பெற்ற பேராசிரியர்கள் பல்கலைகழக மாணவர்களுக்கு ஆகாயவியல் சார்ந்த அனைத்து உட்பிரிவுகளின் நுணுக்கங்களையும் தெளிவாகக் கற்றுக்கொடுக்கின்றனர்.
இங்கு அனைத்துப் புதிய தொழில்நுட்பங்களுடனும் கல்வி கற்றுத் தரப்படுகிறது. பயிற்சிக்குத் தேவையான நவீன உபகரணங்கள் அடங்கிய பரிசோதனைக் கூடம், மற்றும் புஷ்பக், செஸ்னா, லியர்ஜெட் ஆகிய விமானங்கள் மாணவர்களின் பயிற்சிக்காக வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் விமானத்தில் பறப்பது, பறத்தலைக் கட்டுப்படுத்துவது போன்றவையும் கற்றுத் தரப்படுகிறது.
இத்துறையிலிருந்து வெற்றிகரமாக வெளியேறும் பட்டதாரிகள் விமானக் கட்டுமானம், விமானம் ஓட்டுதல், வடிவமைத்தல், விமானப் போக்குவரத்து மேலாண்மை, பாதுகாப்பு, மற்றும் ஐ.எஸ்.ஆர்.ஓ. போன்ற பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புப் பெற்றிடப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.
மேலும், எதிர்காலத்தில் உலக அரங்கில் இந்தியா தனித்திறமையுடன் விளங்க இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் பொருட்டு, தென் தமிழகத்தில் 8-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு பயிலுகின்ற மாணவர்களை நுழைவுப் பரீட்சை அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அவர்களில் 500 பேருக்கு ஆண்டுதோ
றும் 15 நாள்கள் அறிவியல் ஆய்வுக்கூடங்களில் பயிற்சியளிக்கிறது. அவர்களுக்கு இளம் விஞ்ஞானிகள் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இளம் தலைமுறையை ஊக்குவிக்கும் விதமாக இப்பல்கலைக்கழகம் இதைக் கடந்த 11 ஆண்டுகளாக செய்து வருகிறது.

நன்றி .தினமணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக