அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
09 அக்டோபர், 2012
சிதம்பரதில் ரூபாய் 2 கேட்டு தொழில் அதிபர் மகன் கடத்தல் தனிபடை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் முகமது யாஷின். இவருக்கு சிதம்பரத்தில் திருமண மண்டபம், வணிக வளாகங்கள் உள்ளன. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
இவரது மகன் முகமது பைசல் (வயது 20). இவர் திருச்சியில் ஜமால்முகமது கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம். படித்து வந்தார். அங்கு விடுதியில் தங்கி இருந்த அவர் விடுமுறை நாட்களில் சிதம்பரம் வந்து செல்வார். இதேபோல் கடந்த 5-ந் தேதி விடுமுறைக்கு வந்த அவர் சிதம்பரத்தில் இருந்து 7-ந் தேதி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி சென்றார். மாலை 4 மணிக்கு திருச்சியில் இருந்து தனது தாயாருக்கு போன் செய்து திருச்சி வந்து சேர்ந்து விட்டதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் கல்லூரி விடுதி வார்டன் திருச்சியில் இருந்து முகமது யாஷினுக்கு போன் செய்து உங்களது மகன் இன்னும் கல்லூரிக்கு வரவில்லை என்ன காரணம் என்று கேட்டார்.
அப்போதுதான் முகமது பைசல் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. உடனே அவனது செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதற்கிடையே நேற்று தந்தை முகமது யாஷினுக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசியவன் உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்திருக்கிறோம். ரூ.2 கோடி கொடுத்தால் மகனை விடுவிக்கிறோம். இல்லை என்றால் அவனை உயிரோடு பார்க்க முடியாது என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான்.
இதையடுத்து முகமது யாஷின் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்தது திருச்சி என்பதால் வழக்கை திருச்சிக்கு மாற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர்.
முகமது பைசலை கடத்தியது யார் என்ற விவரம் தெரியவில்லை. முகமது யாஷினுக்கு வந்த மர்ம போன் எண்ணை வைத்து கடத்தல்காரர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஒருவேளை ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக அவரை கடத்தி இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரிலும் விசாரித்து வருகின்றனர்.
இந்த கடத்தல் சமம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக