அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
22 அக்டோபர், 2012
நெய்வேலி- அனல் மின்நிலையம் முற்றுகை - 1500 பேர் கைது
நெய்வேலி- அனல் மின்நிலையத்தின் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மந்தாரகுப்பத்திலி-ருந்து 100க்கும் அதிகமான வாகனத்தில் அனல் மின்நிலையத்தை நோக்கி பேரணியாகப் புறப்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் முதற்கட்டமாக நெய்வேலி- அனல் மின்நிலைய தலைமை அலுவலகத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இப்போராட்டத்தின் இறுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி, தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம். ஹனிபா, மமக துணை பொது செயலாளர் சரணபாண்டியன் தமுமுக மாநில செயலாளர் தருமபுரி சாதிக் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இதையடுத்து தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நெய்வேலி- அனல் மின்நிலையத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். முற்றுகைக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டபோது 300 குழந்தைகள் 70 பெண்கள் உட்பட 1500 மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் தானாகவே சென்று கைதாகினர்.
இப்பேராட்டத்தில் இறுதியில் கண்டன உரை நிகழ்த்திய ஜே.எஸ்.ரிபாயி அவர்கள்,
‘‘இந்திய ஒருமைப்பாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கர்நாடக அரசு நடத்திவருகிறது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காமல் திட்டமிட்டு தடுத்தும் மறுத்தும் வருகிறது. இதனைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஓசூரில் சாலை மறியல் போராட்டத்தையும், கடந்த 19.10.2012 அன்று திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் தலையில் கறுப்பு முன்டாசு கட்டி அறவழிப் போராட்டத்தையும் நடத்தினோம். அதேபோல் தற்போது அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டத்தை நடத்தியுள்ளோம். இம்மாபெரும் போராட்டத்தின் வாயிலாக மத்திய மாநில அரசுக்கு ஒருசில கோரிக்கைகளை வைக்கிறேன்:
1. மத்தியில் ஆட்சி புரியும் காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நியாணீமான தண்ணீரைத் தரமறுக்கும் கர்நாடக அரசுக்கு தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தரக்கூடாது.
2. இந்திய ஜனநாயக நாட்டில் அனைத்து மாநிலத்திற்கும் சமமாக நடக்கவேண்டிய மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என பிரதமரை வ-லியுறுத்தினார். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். எஸ்.எம்.கிருஷ்ணா உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
3. காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும்.
4. தமிழகத்தின் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய தண்ணீரை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வ-லியுறுத்த வேண்டும்.
காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் கிடைக்கும்வரை மனிதநேய மக்கள் கட்சி தொடந்து போராடும்’’
இவ்வாறு தமுமுக தலைவர் உரையாற்றினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக