#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

22 அக்டோபர், 2012

குஜராத் - மோடியின் கனவு நனவாகுமா?


வளர்ச்சியின் நாயகன், அடுத்த பிரதமர் என்றெல்லாம் பாஜக  ஆதரவாளர்களால் வர்ணிக்கப்படும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தேர்தலைச் சந்திக்கத் தயாராய் உள்ளார். இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆவாரா?

002ஆம் ஆண்டு குஜராத்தில் முஸிம்களுக்கு எதிராக நடந்த கலவரத்திற்குச் சில மாதங்களுக்குப் பின் நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளுள்  பாரதீய ஜனதா கட்சி 127 தொகுதிகளைப் பெற்றது. 2007ஆம் ஆண்டு தேர்தலில் குஜராத் கலவரத்தின் தாக்கம் குறைந்திருந்தாலும்
காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் மோடியை "மரண வியாபாரி" என்று சோனியா காந்தி விமர்சித்ததைப் போன்றுதான் அமைந்திருந்தது. அந்தத் தேர்தலில் பாஜக 117 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

பாரதீய ஜனதா கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என ஒருவரை அடையாளம் காட்ட இயலாத சூழ்நிலையில் பாஜகவில் உள்ள தீவிர இந்துத்துவ சிந்தனையாளர்களின் பிரதமர் வேட்பாளர் தேர்வாக மோடியே முன்னிறுத்தப்படுகிறார். அண்மைக்காலமாக மோடிக்கும் இந்த ஆசை வந்துவிட்டதை அவரது தேர்தல் பிரச்சாரம் மூலம் அறிய முடிகிறது.

மாநிலத்திற்கு நடைபெறும் தேர்தலில் மாநிலப் பிரச்சனைகளை முன்னிறுத்தாமல், பிரதமர் மன்மோகன் சிங்கையும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையுமே மோடி குறி வைத்துத் தாக்கிப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

குஜராத்தின் முதல்வராகவே தொடரவேண்டும் எனில், தம்முடைய முந்தைய வெற்றி இலக்கங்களான 127 அல்லது 117 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும். ஆனால் மோடியின் பிரதமர் கனவு மெய்ப்பட வேண்டுமெனில் 127 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் அவர் இருக்கிறார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

குஜராத் மாநில பாரதீய ஜனதா கட்சியில் அண்மைக் காலமாக வலுப்பட்டு வரும் பிளவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லை. குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கக் காரணமாக இருந்தவர்களுள் முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேலும் ஒருவர். கட்சியில் தமக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்ற கூறி, இரண்டு மாதங்களுக்கு முன் பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார் இவர்.
குஜராத் மக்கள் தொகையில் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் உள்ள பட்டேல் சமூகத்தைச் சார்ந்தவர் இவர் என்பதும் சௌராஷ்டிரா பகுதியில் பெரும் ஆதரவு பெற்றவர் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. கேசுபாய் தவிர மோடியின் முன்னாள் அமைச்சரவை சகாக்கள் சிலரும் மோடி மீது அதிருப்தியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மோடியின் தலைமையின் கீழ் குஜராத் வளர்ச்சி அடைந்துள்ளது என்று பாஜகவினரும் ஊடகங்களும் குஜராத் மாநிலத்திற்கு வெளியே பிரச்சாரம் செய்து வந்தாலும் அம்மாநிலத்திற்குள் நிலைமை வேறுமாதிரி இருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் கடற்கரை நிலங்களும் விவசாய நிலங்களும் பெரும் வணிக நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருப்பதால் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோபப் பார்வைக்கு மாநில அரசு ஆளாகியுள்ளது.
கடலும் கடல் சார்ந்த இடங்களும் மீனவர்களுக்குச் சொந்தமானது என்ற இயற்கையான நடைமுறைக்கு மாற்றமாக , கட்ச் மற்றும் செளாராஷ்டிரா மாவட்டங்களில் உள்ள கடல் பகுதிகள் பெரும் வணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டன. சௌராஷ்டிரா பகுதியில் நிர்மா சிமெண்ட் ஆலைக்கு நிலம் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். மற்ற விவகாரங்களில் அவர்கள் ஒன்றாக இணைந்து போராடாவிட்டாலும் அவர்களிடம் அரசுக்கு எதிரான நிலையே உள்ளது.

குஜராத்தில் மரணித்துவிட்ட கட்சி என்று வர்ணிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி , கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குஜராத்தின் பல்வேறு பிரச்சனைகளிலும் கவனம் செலுத்திக் கட்சிக்கு உயிரூட்டி வருகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு யாத்திரைகளை மேற்கொண்டு மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. சட்டமன்றம், பல்கலைக் கழக வளாகங்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்களில் காங்கிரஸ் கட்சியின் பெயரும் வரத் தொடங்கியுள்ளது. விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக முழு வீச்சில் இல்லை என்றாலும் ஓரளவு அவர்களுடன் இணைந்து போராடி வருவது அக்கட்சிக்கு உயிரூட்டி உள்ளது மறுக்க முடியாத ஒன்றாகும்.

இவை மட்டுமின்றி, மற்றொரு குறிப்பிடத் தக்க அம்சமாக மாநிலச் சட்டமன்றத்தின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டிருக்கின்றன என்பதைச் சொல்ல வேண்டும். சுமார் 60 தொகுதிகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நிதி, வருவாய், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறை அமைச்சர்களின் தொகுதிகளும் பாஜக வெல்லும் சாத்தியம் அதிகம் உள்ள தொகுதிகளும் கூட மறு சீரமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் உள்ள 182 தொகுதிகளுள் 151 தொகுதிகளில் வெல்வதே தமது இலட்சியம் என்று முதல்வர் மோடி கூறி வருகிறார். ஆனால் கடந்த தேர்தல்களில் பெற்ற எண்ணிக்கைகளான 127 அல்லது 117 தொகுதிகளாவது கிடைக்குமா என்பது கேள்விக்குறியே என்கின்றனர் அம்மாநில அரசியல் நோக்கர்கள்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்று  நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் 15 தொகுதிகளை மட்டுமே பாஜகவால் கைப்பற்ற முடிந்தது . சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு,பெட்ரோலியப்  பொருட்களின் விலை உயர்வு, அடுத்தடுத்து ஊழல் என காங்கிரசுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களின் அசுர வளர்ச்சியால் உள்ளூர் விவசாயம் பாதிக்கப் படுவது , அந்நிய முதலீட்டுக் கொள்கையில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாதது எல்லாவற்றுக்கும் மேலாக நரேந்திர மோடியின் அமைச்சரவை சகா ஒருவர் கலவர வழக்கில் தண்டனை பெற்று இருப்பது என நிலைமை இரு  கட்சிகளுக்கும்  சாதகமாக இல்லை என்றாலும்  வேட்பாளர் தேர்வு,  மோடியின் பிரச்சாரத்துக்கு தக்க பதிலடி என பாஜகவை, காங்கிரஸ் கட்சி சரியாகக் கையாளும் பட்சத்தில் குஜராத்தில் 11 வருடமாக அரியணையில் வீற்று இருக்கும் நரேந்திர மோடியின்  முதல்வர் பதவிக்கு ஆபத்தை உண்டாக்கலாம். மொத்தத்தில் ராகுல் பார்முலாவை குஜராத்தில் புகுத்தாமல் இருந்தாலே காங்கிரசுக்கு எதிர்பாராத வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

படம் - நன்றி : தி இந்து

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக