அபுதாபி: உலகம் முழுவதும் 9 நாடுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் ஏழை குழந்தைகளுக்கு சுகாதார தி்ட்டம் ஒன்றை அறக்கட்டளை மூலம் ஐக்கிய அரபு எமிரேட் நாடு வழங்கியுள்ளது. மொராக்கோ, ஹெய்தி, லெபனான், எகிப்து, போஸினியா, சிரியா, ஈரிடிரியா, இந்தோனேஷியா என உலகம் முழுவதிலும் உள்ள 9 நாடுகளில் போதிய மருத்துவ வசதி, சுகாதார வசதியின்றி பலமில்லியன் ஏழை குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு சர்வதேச மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ வசதி அளிக்கும் நோக்குடன் ஐக்கிய அரபு எமிரேட் நாடு அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறக்கட்டளையின் நோக்கம் மூலம் 30 ஆயிரம் குழுந்தைகளுக்கு சேவை செய்ய நடமாடும் மருத்துவமனைகள் அமைப்பது, இவர்களுக்கு மருந்து பொருட்களை தேவையான அளவு விநியோகிப்பது, அவசரகால மருத்துவ சேவை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவுள்ளது. இதற்காக மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர்களையும் நியமிக்கவுள்ளது.
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக