100 அடி நீளம் கொண்ட சொகுசு கார் கின்னஸில் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது. இந்த சொகுசு காரை கலிபோர்னியாவை சேர்ந்த ஜே ஓபெர்க் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

பார்ப்பதற்கு ரயில் போல இருக்கும் இந்த நீளமான
லிமோசின் ரக காரில் மொத்தம் 26 வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நீளமான காரின் இருபுறத்திலும் டிரைவர் கேபின் உள்ளது.மேலும், ஆடம்பரமான வசதிகளுடன் உட்புறம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மிக நீளமான இந்த காரை எளிதாக திருப்பும் வகையில் காரின் நடுப் பகுதியில் மடிந்து திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த காரை சாலைகளில் இயக்குவதற்கு இதுவரை சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்படவில்லை. கண்காட்சிகளில் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த காரை சினிமா சூட்டிங் மற்றும் செல்வந்தர்களின் திருமணத்திற்கு வாடகைக்கு கேட்டு ஏராளமானோர் தொடர்பு கொண்டு வருவதாக ஜே ஓபெர்க் தெரிவித்துள்ளது. எனவே, இந்த காரை வாடகைக்கு விடும் திட்டமும் அந்த நிறுவனத்திடம் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக