
விஸ்வரூபம் படம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளால் கமலுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் மீடியாவில் வெளியான செய்திகள் அவரது ரசிகர்களுக்கு பெரும் கோபத்தைத் தந்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்பங்களோடு "விஸ்வரூபம்' படத்தை இயக்கி தயாரித்து, நடித்து பிரமாண்ட படைப்பாக உருவாக்கியுள்ளார் கமல்.
ஆனால் வழக்கம்போல சர்ச்சைகளும், சலசலப்பும் கமலை தொடர்ந்தபடியே இருக்கின்றன.
"தலிபான் தீவிரவாதிகளையும், தலிபான்-அமெரிக்கா வுக்கு இடையே நடந்த ஆப்கான் போரும் கதையின் மையமாகியிருப்பதால் முஸ்லிம்களை மோசமானவர்களாக சித்தரித்திருக்கிறார் கமல். இஸ்லாத் விமர்சிக்கப்பட்டிருக்கிறது!' என்ற குற்றச்சாட்டு இப்போது கிளம்பியுள்ளது.
"இஸ்லாமிய மத பிரதிநிதிகளுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் "விஸ்வரூபம்' படத்தை போட்டுக் காட்ட வேண்டும்! அதில் ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பது தெரிய வந்தால் அதை நீக்கிய பிறகே படத்தை வெளியிட வேண்டும்!'' என தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பெரிய பிரச்சினைக்கு சுழி போட்டுள்ளது.
இந்நிலையில் 15-ந்தேதி பகல் 12 மணியளவில் "விஸ்வரூபம்' படத்தினால் ஏற்பட்டிருக்கும் மனஉளைச்சலால் கமலுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக மீடியா உலகில் ஒரே பதட்டம் நிலவியது.
ஆனால் அது முழுக்க வதந்தி என்று கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கமல் மிகுந்த ஆரோக்கியத்துடன் தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும், விஸ்வரூபம் படத்தின் பிரிமியர் ஷோவை அமெரிக்காவில் வெளியிடும் வேலைகளிலும் ஹாலிவுட்டில் படம் பண்ணுவது பற்றிய முன்னோட்டத்திலும் பிஸியாக இருப்பதாகவும் கமல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக