
மும்பை: சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் மறைவையொட்டி மும்பையில் முழு அடைப்பு நடத்தப்பட்டதை விமர்சித்த பெண்ணை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்ததற்கு பிரஸ் கவுன்சில் தலைவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டே கட்ஜூ கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அந்த பெண்ணை விடுதலை செய்வதுடன் அவரை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இப்படியான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் அப்பெண்ணை கைது செய்ய உத்தரவிட்ட போலீஸ் மீது உடனடியாக சஸ்பெண்ட் அல்லது கைது அல்லது குற்றவியல் நடவடிக்கை- இதில் எது அதிகபட்சமோ அந்த நடவடிக்கையை மேற்கொண்டாக வேண்டும். இதை நீங்கள் செய்ய முடியாத நிலையில் அரசியல் சாசனப்படி.. ஒரு அரசை நடத்த தகுதியற்றவராகிறீர்கள்.. இதற்குரிய சட்டவிளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக