#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

05 ஏப்ரல், 2011

நல்லாட்சி மலர உழைத்திடுவோம்!

நபி(ஸல்) அவர்கள் தமது மக்கா வாழ்க்கையில் எண்ணிலடங்கா துன்பங்களைச் சுமந்த நிலையிலும் கூட அர்க்கம்(ரலி) அவர்களின் வீட்டை வணக்க வழிபாட்டிற்காகவும், கல்விக் கூடமாகவும் பயன்படுத்தியுள்ளார்கள்.

புனித மதீனாவில் நுழைந்த பதினைந்து நாட்களில் நஜ்ஜார் கிளையார்களால் வழங்கப்பட்ட இடத்தில் மஸ்ஜிதுந் நபவியை கட்டினார்கள். இணை வைத்தலின் சாயல் கூட இறைவழிபாட்டில் படிந்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த இடத்தில் புதைக்கப்பட்ட உடல்களில் மண்ணரிக்காத மீத பகுதிகளை தோண்டி அப்புறப்படுத்தினார்கள்.

மஸ்ஜிதுந் நபவியை எழுப்பும் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்ட நபி(ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் இணைந்து கற்களையும் மண்ணையும் சுமந்தார்கள்.

மூன்று பெரும் தவறான செயல்கள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

"மூன்று வகையானோரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; (அவர்களது பாவங்களை மன்னித்து) அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு" என்று நபி (ஸல்) மும்முறை நீட்டி முழக்கிக் கூறினார்கள். "தோற்றுப் போய் விட்ட, இழப்புக்குள்ளாகி விட்ட அவர்கள் யாவர் அல்லாஹ்வின் தூதரே!" என்று நான் கேட்டேன். அதற்கு, "(அவர்கள்,) தமது ஆடையை(ப் பெருமைக்காகக் கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டுபவர், (பிறருக்கு உதவியாகச்) செய்ததைச் சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்தாம்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூதர் (ரலி)  .முஸ்லிம் 


"வழங்கிய கொடையைச் சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து சரக்கை விற்பனை செய்பவர், தமது கீழாடையை(ப் பெருமைக்காகக் கணுக்காலுக்குக் கீழே) இறக்கிக் கட்டுபவர் ஆகிய மூவகையானோரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூதர் (ரலி). முஸ்லிம்


குறிப்பு:

இதே ஹதீஸை, "மூவகையானோரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; (அவர்களது பாவங்களை மன்னித்து) அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு" என்ற தொடக்கத்தோடு ஸுலைமான் (ரஹ்) அவர்களிடமிருந்து செவியுற்றதாக பிஷ்ருப்னு காலித் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில் காணப் படுகிறது.

04 ஏப்ரல், 2011

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை. ராமநாதபுரம் தொகுதியில் மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதே எனது முதல் பணி; ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா பேச்சு

 
ராமநாதபுரம் தொகுதியில்

 

 மீனவர்களின் பிரச்சினையை

 

 தீர்ப்பதே எனது முதல் பணி;

 

 ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா பேச்சுராமநாதபுரம் தொகுதி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா மண்டபம் யூனியன் பகுதியில் மீனவர்கள் குடியிருப்பு பகுதியில் வாக்குகள் சேகரித்தார். நேற்று காலை புதுமடம், குண்டூத்தி, புதுமடம்தெற்கு, மேற்கு, கிழக்கு அருள்ஒளி நகர் பகுதியில் ஜமாத் நிர்வாகிகள்,அனைத்து சமுதாய பிரமுகர்களை சந்தித்து தீவிரவாக்குகள் சேகரித்தார். கிராமபுறத்தில் முக்கிய பிரமுர்களை சந்தித்து வீதிவீதியாக சென்று நலத்திட்ட உதவி, மக்கள்சேவை செய்ததை கூறி பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
 
அப்போது வீடுவீடாக சென்று இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.   புதுமடத்தில் அவர் பேசியதாவது:-

தவ்ஹீத் ஜமாத்தினர் கைது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கான்சாகிப் தெருவில் ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லாவிற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி அவதூறாக துண்டு பிரசுரங்களை வினியோகிப்பதாக பட்டணம் காத்தான் வி.ஏ.ஒ., மூர்த்தி கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்த காதர் மைதீன்( மேலகோட்டை)ஜியாவுல்ரகுமான்( ஏர்வாடி)முகம்மது மக்தும் மைத்யூ( கீழக்கரை ) அகம்மது தினுள் ஹக்(தேவிபட்டினம்) அசரப்அலி(பனைக்குளம் ) ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் மாநில பொது செயலாளர் ரகமத்துல்லா, மாவட்ட செயலாளர் ஆரிப்கான், மாவட்ட தலைவர் சைபுல்லாகான் ஆகியோர் மீதும் வழக்குபதியப்பட்டுள்ளது.


நன்றி.தினமலர்        

இந்திய தவ்ஹீத் ஜமாத் கூட்டம்

கீழக்கரை : கீழக்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முஸ்ஸம்மில்ஹார் தலைமையில் நடந்தது.மாவட்ட துணை தலைவர் சிராஜூதீன், செயலாளர் சுல்த்தான்,துணை செயலாளர் ரைசுதீன்,பொருளாளர் ஹாஜாமைதீன் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா வெற்றிக்கு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். வீடு,வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஓட்டுகள் சேகரிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி.தினமலர்        

தமிழகத்தில் மாநில கட்சிகளின் தோற்றம்

சர் பி.டி.தியாகராஜர் என்பவர், 1916ம் ஆண்டு இந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை முதன் முதலாக துவங்கினார். இக்கட்சி நாளடைவில் நீதி கட்சியாக மாறியது. இக்கட்சியிலிருந்து, பின்னர் ஏராளமான அரசியல் கட்சிகள் தோன்றின. இக்கட்சிகள் திராவிட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டேதான் துவக்கப்பட்டவை. அவை "திராவிட கட்சிகள்' என அழைக்கப்படுகின்றன. தமிழகத்தில் இதுவரை துவங்கப்பட்ட மாநிலக் கட்சிகளின் விவரம்:சுயமரியாதை இயக்கம் - 1925ம் ஆண்டுதிராவிடர் கழகம் -1944திராவிட முன்னேற்ற கழகம் -1949அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் -1972பாட்டாளி மக்கள் கட்சி -1989விடுதலைச் சிறுத்தைகள் -1990மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் -1993தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் -1995மூவேந்தர் முன்னேற்றக் கழகம் -1998லட்சிய தி.மு.க., -2004தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் -2005சமத்துவ மக்கள் கட்சி -2007கொங்குநாடு முன்னேற்றக் கழகம் -2009மனிதநேய மக்கள் கட்சி -2009நாடாளும் மக்கள் கட்சி -2009இந்திய ஜனநாயக கட்சி -2010வெளியே சொன்னால் தெரியும்படிக்கு இத்தனை கட்சிகள் துவக்கப்பட்டன. வெறுமனே துவக்கி விட்டு, அல்லது தேர்தல் கமிஷனுக்கு தகவல் அனுப்பிவிட்டு செயல்படும் கட்சிகளின் பட்டியல் போட்டால், "தேர்தல் களம்' தாங்காது.

நன்றி.தினமலர்       

03 ஏப்ரல், 2011

ஜாதி, மதம் பாராமல் ம.ம.க.,சேவை : வேட்பாளர் ஜவாஹிருல்லா உருக்கம்

ராமநாதபுரம் : ""ஜாதி மதம் பாராமல் சேவையாற்றிய ம.ம.க.,வினரை பிரதமரே பாராட்டி உள்ளதாக ,'' ராமநாதபுரம் தொகுதி ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா கூறினார். மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுமடம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது: மக்களுக்கு சேவை செய்வதே உண்மையான அரசியல் பணி என்ற நோக்கத்துடன்தான் மனித நேய மக்கள் கட்சி உருவாக்கப்பட்டது. ஜாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ரத்ததான சேவை, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் சேவை, பேரிடர்கள் மற்றும் விபத்துகளின் போது மீட்பு பணி, மாணவர்களுக்கு கல்வி உதவி என சேவையாற்றும் ஓர் இயக்கத்தின் பிரதிநிதியாகத்தான் நான் போட்டியிடுகிறேன். எங்கள் இயக்கத்தின் கொள்கைகளுக்கு நேர் எதிரான கருத்துடைய பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., காரர்களுக்கு கூட ரத்ததானம் அளித்துள்ளோம். சுனாமி போன்ற பேரிடர்களின் போது எங்கள் இயக்கம் ஜாதி மதம் பாராமல் பணியாற்றியதை பிரதமரும் பாராட்டியுள்ளார். இப்படிபட்ட சிறப்பான மனிதநேய சேவைகளை செய்துவரும் எங்களை தீவிரவாத முத்திரை குத்துவதற்கு ஹசன்அலி முயன்று வருகிறார். ""இலங்கையில் ஆயிரத்திற்கும் மேலான தமிழர்கள் கொன்று குவித்து, தமிழக மீனவர்களை நடுக்கடலில் சித்திரவதை செய்யும் ராஜபக்சே என்ற போர்க்குற்றவாளியின் நண்பர் என கூறிகொள்வதில் ஹசன்அலி'' வெட்கப்படுவதில்லை.தோல்வி பயத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புகின்றனர். தன்னை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களை சற்றும் கண்டுகொள்ளாத ஹசன்அலிக்கு, இந்த தேர்தலில் மக்கள் தக்கப்பாடம் புகட்டுவர். மக்கள் பிரச்னைகளுக்கு ஜனநாயக ரீதியான தீர்வுகளை மட்டுமே காண வேண்டுமென்பதில் ம.ம.க., உறுதியாக இருக்கிறது . தீவிரவாதிகளுக்கு எதிரான கோட்பாடுகளை கொண்டுள்ள எங்கள் கட்சி சமூக நல்லிணக்கத்திற்கு அன்றாடம் பாடும்படும் , என்றார். முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, அ.தி.மு.க.,முன்னாள் மாவட்ட செயலாளர் முருகேசன், துணை செயலாளர் முனியசாமி, அவைத்தலைவர் சேகர்,ஒன்றிய செயலாளர் தங்கமரைக்காயர், மீனவரணி செயலாளர் தர்வேஸ், ஜெ.,பேரவை செயலாளர் பாலசிங்கம், தே.மு.தி.க., சக்திவேல், ஜான்சிராணி உட்பட பலர் உடன் சென்றனர்.

நன்றி. தினமலர்    

இலவசத்திற்கு நிதி! எங்கிருந்து வருகிறது?

தமிழ்நாட்டின் தேர்தல் தலை விதியை நிர்ணயிப்பதே இலவசங்கள்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி இலவசம், மாவு அரைக்கும் இயந்திரம், மிக்சி என்று தொடங்கி, மடிக்கணினி வரை தி.மு.க. தேர்தல் அறிக்கை முழங்க, உன்னை விட நான் விஞ்சுகிறேன் பார் என்ற ரீதியில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் எதிர்க்கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஆடு, மாடு எல்லாம் கூட இலவசம் என்று அறிவித்துள்ளது.

ஒரு பக்கம் இதையெல்லாம் பார்த்து விவரம் தெரிந்த வாக்காளர்கள் சிரிக்க, மற்றொரு பக்கமோ என்னைப் பார்த்து நீ காப்பியடிக்கிறாய், உன்னால் என்னைப்போல் தர முடியாது என்று இன்னாள் முதல்வர் கூட்டத்திற்குக் கூட்டம் முழங்குகிறார். பெரிதாக அறிவித்தாலும், அதை மையப்படுத்தாமல், தி.மு.க.விற்கு எங்கு வலிக்குமோ அங்கே பார்த்து குத்துகிறார் முன்னாள் முதல்வர். 2ஜி ஊழல், குடும்ப ஆட்சி, அரசியல், சினிமாத்துறை ஆக்கிரமிப்பு ஆகியனதான் இத்தேர்தல் முடிவை நிர்ணயிக்கப் போகின்றன என்கிறார் ஜெயலலிதா.

கடல் அட்டைக்குத் தடையை நீக்க முயற்சிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு;கீழக்கரை சிறுதொழில் மீனவர்கள் சங்கம்


கடல் அட்டைக்குத் தடையை நீக்க முயற்சி செய்யும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக கீழக்கரை சிறுதொழில் மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  கீழக்கரை சிறுதொழில் மீனவர்கள் சங்கச் செயலர் நல்ல இபுராஹீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2011-ம் ஆண்டு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகம் 53 வகையான கடல் பொருள்களை எடுப்பதற்குத் தடை விதித்திருந்தது.  பின்னர் 23 வகை கடல் பொருள்களின் தடையை நீக்கியது. ஆனால் கடல் அட்டை மீதான தடையை நீக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக தடையை நீக்கக்கோரி போராடி வருகிறோம். கடல் அட்டை ஆண்டுக்கு இருமுறை 10 லட்சம் வீதம் 20 லட்சம் குஞ்சுகளைப் பொறித்து இன விருத்தி செய்வதாக மத்திய மீன் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.  ஏற்கெனவே மீன் வளத்துறை தடையை நீக்க சிபாரிசு செய்துள்ளனர். ஆகவே அரசு கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும்.  இத்தேர்தலில் இப்பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் இப்பிரச்னைக்கு முன்னுரிமை தருகிறார்களோ, அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
கடல் அட்டை பிடிப்பதற்கு மீனவர்களுக்கு உரிய அனுமதி பெற்று தர போராடுவேன்,'' என ராமநாதபுரம் தொகுதி ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா பிரசாரத்தில்  பேசியது :

02 ஏப்ரல், 2011

28 ஆண்டுகளுக்குப் பின்... மீண்டும் சாம்பியன் : சொந்த மண்ணில் முதல் உலக சாதனை


மும்பை:கேப்டன் தோனி இமாலய சிக்சர் அடிக்க...இந்திய அணி உலக கோப்பையை "சூப்பராக' கைப்பற்றி, வரலாறு படைத்தது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தோனி (91*) மற்றும் காம்பிரின் (97) அபார ஆட்டம், கோப்பை கனவுக்கு கைகொடுத்தது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடந்தது. நேற்று மும்பையில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

ஸ்ரீசாந்த் வாய்ப்பு: இலங்கை அணியில் காயத்தில் இருந்து மீண்ட முரளிதரன் இடம் பெற்றார். இந்திய அணியில் காயமடைந்த நெஹ்ராவுக்கு பதிலாக ஸ்ரீசாந்த் இடம் பெற்றார். "டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா,"பேட்டிங்' தேர்வு செய்தார்.

ஜாகிர் துல்லியம்: இந்திய "வேகங்கள்' துவக்கத்தில் போட்டுத் தாக்க , இலங்கை அணி ரன் எடுக்க திணறியது. ஜாகிர் வீசிய முதல் இரண்டு ஓவர்களும் "மெய்டனாக' அமைந்தன. மறுபக்கம் ஸ்ரீசாந்தும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.