அல்லாஹ்வின் திருப்பெயரால்....
"மூன்று வகையானோரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; (அவர்களது பாவங்களை மன்னித்து) அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு" என்று நபி (ஸல்) மும்முறை நீட்டி முழக்கிக் கூறினார்கள். "தோற்றுப் போய் விட்ட, இழப்புக்குள்ளாகி விட்ட அவர்கள் யாவர் அல்லாஹ்வின் தூதரே!" என்று நான் கேட்டேன். அதற்கு, "(அவர்கள்,) தமது ஆடையை(ப் பெருமைக்காகக் கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டுபவர், (பிறருக்கு உதவியாகச்) செய்ததைச் சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்தாம்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூதர் (ரலி) .முஸ்லிம்
அறிவிப்பாளர்: அபூதர் (ரலி) .முஸ்லிம்
"வழங்கிய கொடையைச் சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து சரக்கை விற்பனை செய்பவர், தமது கீழாடையை(ப் பெருமைக்காகக் கணுக்காலுக்குக் கீழே) இறக்கிக் கட்டுபவர் ஆகிய மூவகையானோரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூதர் (ரலி). முஸ்லிம்
குறிப்பு:
இதே ஹதீஸை, "மூவகையானோரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; (அவர்களது பாவங்களை மன்னித்து) அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு" என்ற தொடக்கத்தோடு ஸுலைமான் (ரஹ்) அவர்களிடமிருந்து செவியுற்றதாக பிஷ்ருப்னு காலித் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில் காணப் படுகிறது.

"விபச்சாரம் புரிகின்ற முதியவர், பொய் சொல்கின்ற அரசன், பெருமையடிக்கும் ஏழை ஆகிய மூவகையோரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி). முஸ்லிம்
குறிப்பு:
அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்" என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

"ஆளரவமற்ற வனாந்தரத்தில் தம் தேவைக்குப் போக மிகுதியாக மீந்திருக்கும் குடிநீரை (தாகித்த) வழிப்போக்கனுக்குக் குடிக்கக் கொடுக்காதவன்,
(மக்கள் கடைவீதியில் அதிகமாகக் கூடுகின்ற) அஸ்ருத் தொழுகைக்குப் பின்னர் தன் வியாபாரச் சரக்கை விற்பதற்காக, வாங்கிய உண்மையான விலைக்கு மாற்றமான (கூடுதல்) விலைக்கு வாங்கியதாக அல்லாஹ்வின் மீது பொய்யாக ஆணையிட்டு நம்ப வைப்பவன்,
ஓர் ஆட்சித் தலைவருக்கு தன் உலகாதாயத்திற்காக உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்து, தனக்கு நன்மை பயப்பதாக இருப்பவற்றில் அவருடைய சொல்படி நடந்து, தனக்கு நன்மை ஏதுமில்லாத ஏவல்களைப் புறந்தள்ளி விடுபவன்
ஆகிய மூவகையானோரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; (அவர்களது பாவங்களை மன்னித்து) அவர்களைத் தூய்மைப் படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி). முஸ்லிம்
குறிப்பு:
ஜரீர் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பான வியாபாரியைப் பற்றிய தகவலில், "ஒருவர் (ஏற்கனவே) இன்னவிலைக்கு இதைக் கேட்டு விட்டார் என்று (பொய்) கூறுவது" என்று இடம் பெற்றுள்ளது. அபூஸாலிஹ் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில் "ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்ளும் தீய நோக்கத்துடன் (பொய்ச்) சத்தியம் செய்தவர்" என்பதாக இடம் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக