மயிலாடுதுறை: வாக்காளர்களை காரில் அழைத்து வந்ததை தட்டிக் கேட்ட மனிதநேய மக்கள் கட்சியினரை தி.மு.க.,வினர் தாக்கினர். மயிலாடுதுறை அடுத்த திருக்களாச்சேரியில், தி.மு.க., வைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் அப்துல் மாலிக் தலைமையில் கூட்டணி கட்சியினர் நேற்று மாலை 5 மணிக்கு, வாக்காளர்களை காரில் அழைத்து வந்து ஓட்டளிக்க ஏற்பாடு செய்தனர். இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சி ஒன்றியத் தலைவர் இதயதுல்லா, செயலர் மொய்னுதீன் ஆகியோர், பொறையார் போலீசில் புகார் செய்தனர். ஆத்திரமடைந்த தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் இதயதுல்லா, மொய்னுதீன் இருவரையும் தாக்கினர். இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நன்றி.தினமலர்
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக