
ராமநாதபுரம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார். அவர் நேற்று கீழக்கரை பகுதியில் வீதி, வீதியாக சென்று ஆதரவு திரட்டினார்.
மீனவர்கள், தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் ஓட்டு கேட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மக்களோடு மக்களாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன். ராமநாதபுரம் தொகுதி மக்கள் விருப்ப படி வேட்பாளராக போட்டி யிடுகிறேன். எனவே அனைத்து சமுதாய மக்களும் வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இதுவரை யாரும் செய்யாத திட்டப்பணிகளை செய்ய காத்திருக்கிறேன். ராமநாத புரம் தொகுதியை ஒரு முன் மாதிரியான தொகுதியாக மாற்றி காட்டுவேன். கீழக்கரையில் மருத்துவ மனையில் எந்தவிதமான வசதியும் இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிலை மாற நான் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, தே.மு.தி.க. செயலாளர் சிங்கை ஜின்னா, மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர் முனியசாமி, மாவட்ட அவை தலைவர் வக்கீல் சேகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மருது பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
நன்றி.மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக