
மதுரை, ஏப். 7-
ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். அவர் நேற்று கிராமப்புறங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். கொளுத்தும் வெயிலில் அவர் வீதி, வீதியாக சென்று வாக்குகளை சேகரித்தார்.
ராமநாதபுரம் தொகுதி எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது. தண்ணீர் வசதி, சாலை, தெருவிக்குகள் இல்லாமலும் உள்ளது. இதனால் கிராம மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். நான் தேர்தலில் வெற்றி பெற்றால் கிராம புறங்களை பசுமை புரட்சியாக்குவேன். தொழிற்சாலைகள் அமைத்து கொடுப்பேன். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்வேன். மக்களைப்பற்றி நினைப்பவர்களுக்கு நீங்கள் வாக்களியுங்கள். மக்களோடு மக்களாக இருந்து உங்கள் குறைகளை தீர்ப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆணிமுத்து, சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அன்வர்ராஜா, மாவட்ட துணை செயலாளர் முனுசாமி, தொகுதி செயலாளர் முருகேசன், மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் சேகர், மாவட்ட வக்கீல் பிரிவு ஹரிதாஸ், ராமநாதபுரம் நகர செயலாளர் அன்புசாமி, ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோக்குமார், முன்னாள் யூனியன் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் சென்றனர்.
நன்றி.மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக