ம.ம.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாவை எதிர்த்து, தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான அசன் அலி களத்தில் இருக்கிறார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நண்பரான அசன் அலியும், கடந்த தேர்தலுக்குப் பிறகு இப்போதுதான் தொகுதியில் தலை காட்டுவதால், மக்களின் கேள்விகளுக்குப...் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். மேலும் இலங்கைக் கடற்படையால் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் இவருக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் ஓட்டுகள் கணிசமாக ஜவாஹிருல்லாவுக்குத்தான். சில மாதங்களுக்கு முன்பு பெரிய பட்டணத்தில் நடந்த படகு விபத்தில் சிலர் இறந்தனர். ''இது என் தொகுதிக்குள் இல்லை!'' என்று அசன் அலி ஒதுங்கிக்கொண்டார். அந்த சம்பவம் குறித்து அங்கே நேரடியாகச் சென்று ஆறுதல் கூறி, ''பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அதிகமாகத் தர வேண்டும்!'' என்று கோரிக்கை வைத்து, ஆம்புலன்ஸ் சேவையிலும் ஈடுபட்டார் ஜவாஹிருல்லா. ''ரத்த தானம் செய்வதிலும் முன்னிலையில் இருக்கிறோம். சுனாமி சமயத்தில் நாங்கள் ஆற்றிய மீட்புப் பணிகளை மக்கள் மறக்க மாட்டார்கள்!'' என்று ம.ம.க. நிர்வாகிகள் பிரசாரம் செய்கிறார்கள். பிரசாரத்தில் பேசும் ஜவாஹிருல்லா, ''பம்மன் வைப்பாறு திட்டம், கடலில் கலக்கும் நீரைத் தடுத்து தடுப்பு அணைகள் கட்டுதல், ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையை மேம்படுத்துதல், பாதாள சாக்கடைத் திட்டம், ராமேஸ்வரம் புனிதத் தலத்துக்கு அடிப்படை வசதிகள் செய்தல், கச்சத் தீவு மீட்பு, மீனவர் உயிருக்குப் பாதுகாப்பு ஆகியவற்றை நிச்சயம் செய்து காட்டுவோம்...'' என்கிறார். மொத்தத்தில் மெழுகுவத்தி... பிரகாசமாக ஒளிர்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக