#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

31 அக்டோபர், 2010

ஊடகங்களின் பார்வையில் பாளையங்கோட்டை பேரணி


பாளையங்கோட்டையில் எஸ்.பி அலுவலகம் நோக்கி த.மு.மு.க.பேரணி


கடந்த 2000ம் ஆண்டு புளியங்குடி தப்லீக் ஊழியர் அப்துல் ரஷீத் படுகொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்திட வலியுறுத்தியும், ஏர்வாடி அசன் ரபீக் மரணத்தில் உண்மை நிலையை அறிந்திட சி.பி.சி.ஐ.டி.விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், நெல்லை மாவட்டத்தில் முஸ்லிம்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் வாபஸ் பெற்றிடக் கோரியும் த.மு.மு.க.சார்பில் 30.10.2010 சனிக்கிழமை அன்று நெல்லை எஸ்.பி அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு ம.ம.க. மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.

நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான், கிழக்கு மாவட்டத் தலைவர் மைதீன் பாரூக், ம.ம.க.கிழக்கு மாவட்டச் செயலாளா; .ரசூல் மைதீன், மேற்கு மாவட்டச் செயலாளார் புளியங்குடி செய்யது அலி, த.மு.மு.க.மாவட்டச் செயலாளர்கள் காசீம் பிர்தௌசி, நயினார் முகம்மது, கிழக்கு, மேற்கு மாவட்ட பொருளாளர்கள் சர்தார் அலிகான்,.சுல்தான் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கண்டனப் பேரணி 1500க்கும் மற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி இறுதியில்மாவட்ட காவல் கண்காணிப்பாளாரிடம் மனு அளிக்கப்பட்டது.


நன்றி:தமுமுக.காம்


30 அக்டோபர், 2010

ஓவ்வொருவரும் தேடி வைக்க வேண்டிய ஓர் ஒப்பற்ற தோழன்



மனிதன் மரணித்தவுடன் அவனது குடும்பத்தார் அவனை குளிப்பாட்டி, கஃபனிட்டு, அடக்கம் செய்ய ஆயத்தமாகின்றனர். அப்போது அவன் தலைமாட்டில் மிக அழகான ஒரு வாலிபன் வந்து மறைந்து நிற்கிறான். கஃபன் அணிவிக்கப்படும் போது அவ்வாலிபன் அவனது கஃபனுக்கும் மார்புக்கும் இடையில் மறைந்து இடம் பெறுகிறான். அவனை அடக்கம் செய்து விட்டு அனைவரும் திரும்பியதும் பயங்கரமான தோற்றத்தில் முன்கர் நகீர் எனும் இரண்டு மலக்குகள் மரித்தவனை நெருங்கி அவனை தனியே விசாரிப்பதற்காக உடன் இருக்கும் அவ்வாலிபனை அப்புறப்படுத்த நாடுகின்றனர்.

அது சமயம் அவ்வாலிபன் அவர்களை நோக்கி இவர் எனது தோழன் நான் எந்த நிலையிலும் இவரை தனியே விட்டு பிரிய மாட்டேன். இவரை விசாரிப்பது உங்கள் கடமையாக இருப்பின் நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். நான் இவரை விட்டு பிரியவே மாட்டேன். நான் இவரை சொர்கத்தில் சேர்க்கும் வரை பிரிய மாட்டேன் என்று அந்த அழகிய தோழன் கூறுவான். பிறகு தன் தோழரான அந்த மையித்தை நோக்கி தோழா! என்னை உமக்கு தெரியவில்லையா? எந்த குர்ஆன் ஷரீஃபை சில நேரங்களில் மெதுவான குரலிலும் சில நேரங்களில் உரத்த குரலிலும் நீ ஓதி வந்தாயோ! அதே குர்ஆன் தான் நான். நீ இப்பொழுது கவலை பட வேண்டாம். முன்கர் நகீர் மலக்குகளின் விசாரணைக்குப்பின் உனக்கு யாதொரு கவலையுமில்லை என அந்த தோழன் ஆறுதல் கூறுவான்.

விசாரணை முடிந்ததும் மேலான சொர்க்கப்பதியில் இருந்து மரித்தவருக்குரிய விரிப்பு முதலியவைகளை வரவழைக்கும் மேன்மையான ஏற்பாட்டை இவ்வாலிப நண்பனே செய்கிறான். பட்டாலான அவ்விரிப்புகளில் கஸ்தூரி வாசம் நிறைந்திருக்கும் என திருநபி அவர்கள் அருளினார்கள். அல்லாஹ் தன் கருணையாலும் கருணை நபி அவர்களின் பொருட்டால் எனக்கும் நம் அனைவருக்கும் இந்த சிறந்த பாக்கியத்தை தந்தருள்வானாக! ஆமீன்.

நன்றி: யாசின்

காபாவைச் சுற்றி மக்கா மஸ்ஜித் விரிவாக்கம்!


ஜித்தா : மக்காவிலிருக்கும் இறையில்லமான மஸ்ஜித்-அல்-ஹராம் பள்ளி மேலதிகமாக ஐந்து இலட்சம் பேர் தொழ வசதியாக இருக்கும் படி விரிவாக்கப்படும் எனத் தெரிகிறது

மக்காவிலுள்ள மஸ்ஜித்-அல்-ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கத் திட்டத்திற்கு, இரு புனிதப் பள்ளிகளின் பணியாளரும் சவூதியின் அரசருமான மன்னர் அப்துல்லாஹ் ஆணையிட்டுள்ளார் இதன் மூலம் தற்போது மக்காவில் வழிபடுபவர்களைவிட மேலும் ஐந்து இலட்சம் முஸ்லிம்கள் தங்கி வழிபட வசதியானதாக இருக்கும் என்று மக்காவின் நகரத்தந்தை உஸாமா அல்பர் கருத்துத் தெரிவித்துள்ளார்

"இது மக்காவின் புனிதப் பள்ளியின் மிகப் பெரும் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தில் மக்கா பள்ளியின் முகப்புத் தோற்றத்தையும் மாற்றக் கூடிய திட்டமும் அடங்கும் என்று அல்பர் கூறினார். இந்த விரிவாக்கம் மூலம் பள்ளியின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் மேலதிகமான முஸ்லிம்கள் தொழ அதிகமான இடவசதி கிடைக்கும் என்றும் கூறினார்.

மன்னர் அப்துல்லாஹ் இந்த விரிவாக்கப் பணிக்காக ஆணை பிறப்பித்தார். நகராட்சி மற்றும் ஊரகத்துறை அமைச்சர் இளவரசர் மிதேப், இத்திட்டத்தில் நடைபாதை சுரங்கங்கள் மற்றும் சேவை நிலையங்களும் இருக்கும் என்று கூறினார்.

இந்த அரசாணை மக்கா பெரிய பள்ளியின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதியில் உள்ள 3 இலட்சம் சதுர மீட்டர் நிலங்களைக் கையகப்படுத்தும் உத்தரவையும் உள்ளடக்கியுள்ளது. இதற்கென்று அமைக்கப்பட்ட விசேஷ குழுக்கள் இந்த நிலங்களின் விலை மதிப்பீடு செய்யத் துவங்கியுள்ளன என்றும் மிதேப் கூறினார்.

மஸ்ஜிதைச் சுற்றியுள்ள சுமார் 1000 சொத்துக்கள் இந்த விரிவாக்கத் திட்டப்பணிக்காக இடிக்கப்பட்டு, கட்டுமானம் விரைவில் துவங்கும். இதற்காக 6 பில்லியன் சவூதி ரியால்கள் ஈட்டுத்தொகையாக அரசு ஒதுக்கியுள்ளது. இப்பணி புதிய திட்டத்தினை துவக்க இயலும் விதமாக 60 நாட்களுக்குள் முடிக்கப்படும்.

"புதிய சுரங்க நடைபாதைகள் மூலம் பள்ளிவளாகத்தின் வடக்குப் பகுதியை இணைக்கும் கட்டுமானப் பணிகளும் இத்திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கும் " என்றும் அவர் மேலும் கூறினார்.

இப்புனிதப் பள்ளியின் முதல் பெரிய விரிவாக்கப்பணி 1925ல் சவூதி அரேபியாவை நிறுவிய மன்னர் அப்துல் அஜீஸின் உத்தரவின்படி நிறைவேற்றப்பட்டது. 1989ல் அப்போதைய சவூதி மன்னர் ஃபஹத், மஸ்ஜித்-அல்-ஹராமின் மாபெரும் விரிவாக்கத்தைச் செயல்படுத்தி 1,52,000 சதுர மீட்டர் பரப்பளவிலிருந்த தொழும் இடத்தை 3,56,000 சதுர மீட்டராக அதிகரிக்கச் செய்தார்.

பள்ளியின் சுற்றுப்புற வளாகம் 40 ஆயிரம் சதுர மீட்டர்களுக்கும் அதிகமாகும் என்றும் இதில் ஒரு இலட்சம் மக்கள் வழிபட வசதியிருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

ஷூரா எனும் ஆலோசனைக் குழு மேலதிகமான நிதி ஒதுக்கீடு மூலம் இரு புனிதபள்ளிகளின் தலைமைக்கு உதவி, அதன் மூலம் மேலும் சிறப்பான சேவைகளை புனித உம்ரா மற்றும் ஹஜ் காலத்தில் இப்பள்ளிக்கு வரும் ஹாஜிகளுக்கும் பயணிகளுக்கும் வழங்கவும் மேலும் இவ்வகையில் பயனுள்ள அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்துள்ளது.

மேலும் மஸ்ஜிதின் மாடி மற்றும் சுற்றுப்புற வளாகங்களில் நிழற்குடைகள் நிறுவவேண்டி ஆய்வுகளை மேற்கொள்ளவும், பள்ளியின் வடக்குப் பகுதியில் நகரும் மின்படிகளை மேற்கூரை வளாகம் வரை நிறுவி வழிபட வந்துள்ளவர்கள் கூட்ட நெரிசல் வேளையில் சிரமம் குறையும் முகமாக இவற்றைச் செயல்படுத்தவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.

இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்




சகோதர சகோதரிகளே

உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக


நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / காதலியிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம். இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி நீங்கள் யாரேனும் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.


என்னுடைய ஆசிரியர் சொன்னதை இங்கு நினைவு கூற ஆசைப்படுகிறேன். அதாவது �அறிவியல் வளர வளர சௌகரியங்கள் வளரும், ஆனால் இறுதியில் அந்த அறிவியல் அழிவுக்கே வழிவகுக்கும்�. இது எப்படி அழிவுக்கு வழி வகுக்கும் என்ற சிந்தனைக்கு போகாமல் நம்முடைய தலைப்புக்கு வருவோம். சமீபத்தில் அப்படி தாறுமாறாக நிதானம் இழந்து தன்னுடைய துணையிடம் பேசியதை இண்டெர்நெட்டில் கேட்டு விட்டு அதிர்ந்து விட்டார் ஒரு நண்பர். அதை அவருடைய துணையிடம் சொல்லி நக்கீரனில் புகார் கொடுக்க சொல்லியிருக்கிறார். அது சம்பந்தமாக நக்கீரனில் வெளிவந்திருக்கும் செய்தி தொகுப்பு:

�நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை நக்கீரன்தான் காப்பாத்தணும்���என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி. துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத்துக்கும் பதட்டம்.

�முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை? உங்க படத்தை யாராவது�?�� என நாம் முடிக்கும் முன்பே�
��இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட்டார். என் மேல் அளவுகடந்த காதல் அவருக்கு. அதனால் இரவு நேரங்கள்ல எங்கிட்டே ரொமாண்டிக்கா பேசுவார். என்னையும் அவர் அளவுக்கு பேசவைப் பார்..��சொல்லும்போதே அவர் கண்கள் சங்கடம் கலந்த பயத்தில் தவித்தது. அவரைத்தேற்றும் விதமாக நாம்..

�சரி விடுங்க. இது பல இடங்கள்ல நடக்குறதுதானே� இதில் என்ன பிரச்சினை?�� என்றோம்.
அந்த குடும்பத் தலைவி, அடுத்து சொன்ன தகவல் நம்மை ஏகத்துக்கும் அதிரவைத்தது.
�அவரும் நானும் ரொமாண்டிக் மூடில் எல்லை மீறி பேசிய கிளுகிளு பேச்சுக்கள்� இப்ப இண்டர் நெட்டில் வருதாம். யாரோ ஒரு கிரிமினல் பேர்வழி� எங்களுக்கே தெரியாமல்� எங்க பேச்சை ரெக்கார்டு பண்ணி� இப்படிப் பண்ணியிருக் கான். இதை என் வீட்டுக்காரர்தான் பார்த்துட்டு� அதிர்ந்துபோய்� எனக்குத் தகவல் சொன்னார். கூடவே �நக்கீரன்ட்ட உதவி கேள்�னும் சொன்னார். அதான் வந்தேன்��என்று நம்மை அதிரவைத்த வர்� அந்த இணையதள முகவரியையும் நம்மிடம் கொடுத்தார்.

அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த நாம்� அவர் சொன்ன விவகாரமான இணையதளத்தை கவனித்தோம்.
கணவன்- மனைவிகள், காதல் ஜோடிகள், கள்ள உறவு ஜோடிகள் என பலதரப்பட்ட ஆண் -பெண்களின் லச்சையற்ற அப்பட்டமான உரையாடல்கள்� அங்கே பதியப்பட்டிருந்தன. காதுகள் கூசும் அளவிற்கு� பலரும் தங்களது அந்தரங்க உணர்வுகளை யார் கவனிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில்.. தங்கள் பார்ட்னர்களிடம் செல்லச் சீண்டல் சிணுங்கல் சகிதமாய்ப் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்� அங்கே தோரணம் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன.

உரையாடல்களிலேயே இப்படி ஒரு மன்மத உலகமா? என திகைத்துப்போன நாம்�
நமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்யமுடியுமா? என விசாரிக்க ஆரம்பித்தோம்.
பிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ� ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு� ��இந்த மாதிரியான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு.

முதல் வகை� நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக்கிட்டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவாயிடும். இதில் பெரிய பிரச்சினை இல்லை.

இரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு. இந்த கால்சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா� யார் பேச்சை வேணும்னாலும் ரெக்கார்ட் பண்ணமுடியும். பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலையிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கறவங்க� நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன பேசறாங்கன்னு ஒட்டு கேட்க முடியும். நைட்ல கள்ளக்காதலர்கள், கணவன்-மனைவி, காதலர்கள் உணர்ச்சியோட கிளுகிளுப்பா பேசுவாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு கிக் ஆகற சிலர் இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப்பிருக்கு.

மூணாவதா சில குறிப்பிட்ட இணையதளங்கள், �உங்களுக்காக எங்களது பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம், செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்�னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க. அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா நீங்க பேசற கிளுகிளு பேச்சை நமக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு சமம்��என்றார் விரிவாக.

பெண்களுடன் செக்ஸ் உரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த கிளுகிளு இணையதளங்கள் குறித்தும் விசாரித்தோம். அதில் கையைச் சுட்டுக்கொண்ட ஒரு நண்பர் தன் அனுபவங்களை சங்கோஜத்துடனே சொல்ல ஆரம்பித்தார். ��பொதுவா செக்ஸ் வெப்ஸைட்டுகள்ல நான் உலவிக்கிட்டு இருந்தப்ப� �எந்த நேரத்திலும் மனதில் இருக்கும் ஆசைகளை உரையாடல் மூலம் இந்தப் பெண்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்�னு ஒரு வெப்ஸைட் கூவியழைத்தது. அதில் உடம்பைத் திறந்து போட்டிருந்த ஒருத்தியைப்� படத்தைப் பார்த்தே� கிளுகிளு உரையாடலுக்கு செலக்ட் பண்ணி அவங்க கொடுத் திருந்த ஐ.எஸ்.ஐ. எண்ணில் தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலே �என் பேரு நந்தினி. மும்பையில காலேஜ் படிக்கறேன். என் சொந்தவூர் சென்னைதான். உங்களோட செக்ஸா பேசணும்னு ஆசையா இருக்கு� என்றவள்�. தன் உடல் பாகங்களை வர்ணித்து� அதில் உள்ள மச்சங்களை யும் சொல்லி கண்டபடி கிக் ஏத்தினாள். இப்படி அவளோடு 22 நிமிடம் உரையாடல் நீண்டது. அந்த மாத பில் வந்தபோது மயக்கம் வந்துவிட்டது. காரணம் அந்த 22 நிமிட பேச்சுக்கு 3,050 ரூபாய் சார்ஜ் ஆகியிருந்தது. நொந்துபோய் இதுபற்றி விசாரித்த போது இணையதளத்தரப்பும் தொலை பேசித்தரப்பும் கூட்டு சேர்ந்து என்னை மாதிரியான சபல பார்ட்டிகள்கிட்ட பணம் புடுங்க இந்த மாதிரி பண்ணிக்கிட்டிருக்காங்கன்னு தெரிஞ்சிது. லோக்கல் கால்களை ஐ.எஸ்.டி கால்களா மாத்தித்தான் பணம் புடுங்குறாங்க. என்னை மாதிரி தினம் தினம் எத்தனைபேர் இப்படி� பணத்தை அந்த ஆபாசக் கும்ப லிடம் பறிகொடுத்துக் கிட்டு இருக்காங்களோ�� என்றார் எரிச்சலாக.

வழக்கறிஞரான ரமேஷ்கிருஸ்ட்டி நம்மிடம் ��சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் குளோனிங் செல்லை உருவாக்கித்தர்றாங்க. இது எதுக்குன்னா கணவன் மீது மனைவிக்கோ� அல்லது மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா� அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம். சம்பந்தப்பட்டவங்க யார்ட்ட பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனிலும் கேட்கும். இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதேபோல்� இன்னொரு விஷேச ஆண்டனாவையும் அங்க விக்கிறாங்க. அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும்� அக்கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும் ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண்ணமுடியும். இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள், தம்பதிகள், லவ்வர்கள் இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது. இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு சார்ஜ் 3,500 ரூபாயாம். நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு. இந்த மாதிரியான டேஞ்சரஸ் விவகாரங்களை உடனே அரசாங்கம் தடுக்கணும்� என்றார் கவலையாக.


சென்னையில் உள்ள சைபர் க்ரைம் பிரிவு ஏ.சி. சுதாகரிடம் இதுபற்றி நாம் கேட்டபோது��மொபைல்ல சாஃப்ட்வேர்ஸ் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்ட் பண்ணிக்கறது அவுங்களோட தனிப்பட்ட விருப்பம். ஆனா அத வச்சி மிரட்டறது, வெளியிடறது குற்றம். இதுக்கு கடுமையான தண்டனையுண்டு. நம் பேச்ச மொபைல் கம்பெனிங்க ரெக்கார்ட் பண்ண வாய்ப்பு குறைவு. குளோனிங் சிம், மினி ஆண்டனாவெல்லாம் புது விவகாரமாயிருக்கு. இதனால பெரிய பிரச்சினைகள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. நாங்க இத தீவிரமா கண்காணிக்கிறோம்�� என்றார் உறுதியான குரலில்.


மொபைல் போனில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். இல்லையேல்�. உங்கள் அந்தரங்கமும் நாளை உலகமெங்கும் உலா வரலாம்.
இது சம்பந்தமாக சைபர் க்ரைம் ஸ்பெஷலிஸ்ட்டான அட்வ கேட் ராஜேந்திரனோ� ��வெளிநாட்டிலுள்ள கணவனிடம் மனைவி தன் ஆசைகளையும், ஏக்கம் விருப்பங்களையும் வெளிப்படுத்தி சந்தோஷமாகப் பேசுவது உண்டு. இளம் பெண்கள் அப்பா, அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களைக் கூட தோழிகளிடம் பகிர்ந்து கொண்டு பேசுவதுண்டு. காதலர்கள் கொஞ்சிக் குலவுவது மட்டுமில்லாமல், கள்ளக் காதலியிடமோ, கள்ளக் காதலனிடமோ கிளுகிளுப்பாக ஃபோனில் பேசுவது உண்டு. இதையெல்லாம் ஒருவன் ஒட்டுக் கேட்டு அதை ரெக்கார்டும் செய்கிறான் என்றால் என்ன நடக்கும்? ஆண்களிடம் ப்ளாக்மெயில் செய்து பணமும், பெண்களிடம் கற்பையும் சில கில்லாடிகள் களவாட வாய்ப்பிருக்கிறது. இதைவிட டேஞ்சரஸ் என்னன்னா� டெரரிஸ்ட்டுகள் நம்ம சிம்கார்டை குளோனிங் சிம்கார்டாக்கி விட்டால் அவ்வளவுதான். போலீஸிடம் நாம்தான் மாட்டிக்கொள்ள வேண்டிய சூழல்.
ஆக,
ஒவ்வொரு மாதமும் பில்தொகை எவ்வளவு வருது என்பதை �செக்� பண்ணணும்.
நமக்கு அறிமுகமே இல்லாத செல் நம்பருக்கு கால் போயிருந்தாலோ, ராங்-கால் வந்து நாம் கட் பண்ணியிருப்போம்� ஆனாலும் தொடர்ந்து பேசியதுபோல பில் வந்திருந்தாலோ,
நாம் எந்த நம்பருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப் பாமலேயே �டெலிவர்டு� ஆனது போல ரிப்ளை வந்தாலோ அலட்சியப்படுத்த வேண்டாம். உடனடியாக காவல் துறையில் புகார் கொடுத்து கண்காணிக்க வேண்டும்.

சிம்கார்டை யாரிடமும் கொடுக்காமல் கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும். ஒருவேளை சிம்கார்டு தொலைந்து போனாலும் புகார் கொடுத்து �லாக்� பண்ணிவிட வேண்டும்.� என்று உஷார்படுத்துகிறார் அவர்.

நன்றி : நக்கீரன்
சகோதர சகோதரிகளே, நம்மில் பலரும் இது போன்ற செயல்களை தினமும் செய்து கொண்டிருக்கிறோம். இது எங்கோ நடக்கிறது, நமக்கேன் கவலை என்று இருந்து விடாதீர்கள். இதை எச்சரிக்கையாக எடுத்து உங்கள் வாழ்க்கையில் முதலில் கடைபிடியுங்கள். தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) எல்லை மீறி நிதானம் இழந்து மனைவி தானே என்றி நினைத்து அந்தரங்க விஷயங்களை எக்காரணம் கொண்டும் பேசாதீர்கள், அப்படி பேசுமாறு உங்கள் மனைவியோ / காதலியோ / நிச்சயமுடிக்கப்பட்ட பெண்ணோ உங்களை வற்புறுத்தினால் விஷயத்தின் விபரீதத்தை சொல்லி புரிய வையுங்கள். இதை உங்கள் நண்பர்களுக்கும், நல விரும்பிகளுக்கும் சொல்லி புரிய வையுங்கள்.

நன்றி:தமிழ் இஸ்லாமிக் மீடியா

29 அக்டோபர், 2010

வீட்டை விட்டு வெளியேறினார் 274 கிலோ குண்டுப்பெண்




Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக் நகரைச் சேர்ந்த பெண் உம்னாய்பான் டாங்ப்ரபாய்(40). நாட்டிலேயே மிகவும் குண்டான பெண் இவர்தான். எடை 274 கிலா. மிகவும் பெரிதாக இருப்பதால், கடந்த 3 ஆண்டாக இவர் வீட்டை விட்டு வெளியேறவில்லை. இவரால் வீட்டில் உள்ள பாத்ரூமுக்கு மட்டுமே நடந்து செல்ல முடியும். இவருக்கு எல்லா உதவிகளையும் இவரது மகனே செய்து வந்தார்.

இந்நிலையில் உம்னாய்பான் காலில் கட்டி ஏற்பட்டது. அதை அகற்றுவதற்காகவும் உடல் எடையை குறைப்பதற்காகவும் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடிவு செய்தார். ஆனால் வாசல் வழியாக அவரால் வெளியேற முடியாது. அபார்ட்மென்ட்டின் 3வது மாடியில் வசிக்கும் பெண்ணை, ஆஸ்பத்திரியில் சேர்க்க உதவுங்கள் என உள்ளூர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து மீட்பு குழுவினர் வந்து வீட்டு சுவற்ரை உடைத்து, சிறப்பு எலிவேட்டர் மூலம் குண்டு பெண்ணை கீழே இறக்கினார். அதன்பின் சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அபார்ட்மென்ட்டில் குடியிருப்போர் கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர். சிகிச்சைக்குப் பின் கடற்கரைக்கு சென்று அலை நீரில் குதித்து விளையாட வேண்டும் என ஆசையாக உள்ளது என்கிறார் உம்னாய்பான்.

நன்றி:தினகரன்

கோடி கோடியாக கொட்டும் ‘பிச்சை’ பிசினஸ்!





Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

மும்பை: மிகப் பெரிய நிறுவனம்... 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள்... பக்காவான தொழில் பயிற்சி... மாத வருவாய் 15 கோடிக்கு மேல்... ஊழியரின் சம்பளம் 15 ஆயிரத்துக்கு குறைவில்லை... என்ன, இப்படிப்பட்ட பெரிய கம்பெனியில் வேலை கிடைக்கலையேன்னு நினைக்கத் தோன்றுதா... சாரி, அந்த எண்ணத்தை மாத்திக்குங்க. இது, முழுக்க முழுக்க ‘பிச்சை’ பிசினஸ் விவகாரம். மொழி, இனம் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் மும்பை சாலைகளில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள், தங்களின் பாஸுக்கு மாதந்தோறும் சம்பாதித்து தரும் தொகைதான் ரூ. 15 கோடி. தொழிலாளிக்கோ ஒருநாள் சம்பளம் ரூ. 500.

நாளுக்கு நாள் மாறி வரும் தொழில்நுட்பத்தை கற்றுத் தருவதற்காக பல கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் உருவாவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பிச்சை எடுப்பது எப்படி என்பதை கற்றுத்தரும் பயிற்சி மையத்தை பற்றி சொன்னால் மூக்கின்மேல் விரலை வைக்கத் தோன்றுகிறது.

இந்தியாவின் வர்த்தக நகரம் என்றழைக்கப்படும் மும்பையில் இதுதான் இப்போதைய டாப் பிசினஸ். 1999-ம் ஆண்டு பிச்சை தடுப்பு பிரிவு சட்டத்தின்கீழ் மும்பையில் தட்டும் கையுமாக அலைந்தவர்களை போலீசாரும், அதிகாரிகளும் ஓடி ஓடி பிடித்தனர். அவர்களை மறுவாழ்வு இல்லங்களுக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும், பிச்சைக்காரர்கள் தொல்லை குறைந்தபாடியில்லை. புதிதுபுதிதாக வர ஆரம்பித்தார்கள்.

இவர்கள் எங்கிருந்து உருவாகி வருகிறார்கள்? யார் இவர்களை உருவாக்குவது என்பதை அறியும் முயற்சியில் இறங்கினார் ஒரு பத்திரிகை உளவாளி. அழுக்குத் தலை, கிழிந்த சட்டையுடன் பிச்சைக்காரர்களுடன் ஊடுருவினார். மாறு வேடத்தில் சென்று திரட்டிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார். அந்த அதிர்ச்சித் தகவல்: மும்பை தாராவி, மால்வானி பகுதிகளில் பிச்சை எடுப்பது எப்படி என்று பயிற்சி தர ஒரு கும்பலே இருக்கிறதாம். இந்த கும்பலின் தலைவர்கள் ‘குரு’ என்று அழைக்கப்படுகின்றனர். எச்சைக் கையால காக்கா ஓட்டாத கருமியாக இருந்தாலும் அவரை விடாப்பிடியாக சுற்றிவந்து பிச்சை வாங்குவது எப்படி என்ற டெக்னிக்தான் இங்கு அளிக்கப்படும் முதல் பயிற்சி.

போலீசோ அல்லது வேறு யாராவதோ துரத்தினால் அவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது என்ற தற்காப்பு கலையும் கற்றுத்தரப்படுகிறது. அப்ரன்டிஸ்டுகளாக சேர்பவர்கள், முதலில் சாப்பாடு கூடையைத்தான் தூக்க வேண்டும். நிரந்தரமாக ஒரு இடத்தில் அமர்ந்து பிச்சை எடுக்கும் தங்கள் கூட்டத்தை சேர்ந்தவருக்கு சாப்பாடு எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும். மற்ற நேரங்களில் முழுக்க முழுக்க பயிற்சிதானாம். மாற்றுத் திறனாளிகளுக்கு நடுரோட்டில் பரிதாபமாக உருண்டு புரண்டு பிச்சை எடுக்க பயிற்சி தரப்படுகிறது.

பயிற்சிக்கு முடிந்ததும் ஏதாவது ஒரு சாலையை அவர்களுக்கு ஒதுக்குவார்கள். அங்கு சுற்றித் திரிந்து பிச்சை எடுக்க வேண்டும். ஓடி, உருண்டு, கத்திக்கத்தி சேர்த்த பணத்தை பைசா குறையாமல் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். ரகசிய கேமராக்கள் மாதிரி, ஆங்காங்கே சில கண்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும். வசூலில் ஏதாவது சுருட்ட நினைத்தால் அவ்வளவுதான்.

பச்சிளம் குழந்தைகளுக்கு இங்கே ஏக கிராக்கி. சில பெண்கள் தங்கள் குழந்தைகளை பிச்சை எடுப்பதற்காக வாடகைக்கு அனுப்புகின்றனர். ஒரு மாத கைக்குழந்தை என்றால் ஒருநாள் வாடகை ரூ. 100. ஒரு வயது குழந்தையென்றால் ரூ. 50, மூன்று முதல் 5 வயது வரை ரூ. 30 வாடகையாக தரப்படுகிறது. கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு பிச்சை எடுத்தால் வசூல் கொட்டுகிறதாம். மாலையில் கைநிறைய காசோடு திரும்பும்போது பயிற்சி மையத்தில் ஏக வரவேற்புதான். வசூலாகும் தொகையை எல்லாரும் கொண்டுவந்து தந்ததும் எண்ணும் பணி நடக்கிறது.

அதில் ஒரு பகுதியை போலீஸ், உள்ளூர் ரவுடிகளுக்கு மாமூல் தர ஒதுக்கி வைக்கப்படுகிறது. மும்பை முழுவதும் சிக்னல்களில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் பிச்சை எடுக்கின்றனர். இவர்களுக்கு ஒருநாள் கூலியாக தலா ரூ. 500 தரப்படுகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து மாதத்துக்கு ரூ. 15 கோடியை வசூலித்து ‘குரு’வின் காலில் கொட்டுகின்றனர். முதலீடே இல்லாமல் தர்ம பிரபுக்களின் தயவால் கோடி கோடியாக சம்பாதிக்கும் ‘தொழிலதிபர்களை’ போலீசாரும் கண்டுகொள்வதில்லை. ‘‘பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் மூலம் ஏராளமானவர்களை பிடித்து பாதுகாப்பு இல்லங்களில் அடைத்தோம். ஆனாலும் புற்றீசல்போல் இந்த கூட்டம் பெருகிக்கொண்டே இருக்கிறது’’ என்கின்றனர் போலீசார்.

நன்றி:தினகரன்


28 அக்டோபர், 2010

தாம்பரம் ராஜா...தடதடக்கும் த.மு.மு.க.! (ஜீனியவர் விகடனில் வெளியான கட்டுரை)



''முஸ்லிம் சமுதாயத்தினரோடு திராவிட இயக்கமும் நானும் கொண்டுள்ள தொய்வில்லாத தொடர்பும், உறவும் இன்று நேற்று ஏற்பட்டது அல்ல... 70 ஆண்டுகளுக்கு முன்பே முஸ்லிம் லீக் மாநாட்டில் பச்சைப் பிறைக் கொடி பிடித்தவன் நான்'' - முதல்வர் கருணாநிதி அடிக்கடி சொல்வது இது. ஆனால், அவரது கட்சியைச் சேர்ந்த தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ-வான எஸ்.ஆர்.ராஜாவோ, இதற்கு நேர் எதிராக இருக்கிறார். சமீபத்தில் பொதுக் கூட்ட மேடை ஒன்றில், 'த.மு.மு.க-வைத் தடை செய்ய வேண்டும்' என்று எஸ்.ஆர்.ராஜா தடாலடியாகப் பேச... கொதிப்பில் இருக்கின்றன இஸ்லாமிய அமைப்புகள்! இதற்கிடையே, 'அவதூறு கிளப்பும் வகையில் போஸ்டர் ஒட்டினர்' என்று சொல்லி த.மு.மு.க-வின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவர் யாகூப் உட்பட ஐந்து பேர் மீது தாம்பரம் போலீஸார் வழக்கு பதிவு செய்ய... பதற்றம் பல மடங்கு கூடி இருக்கிறது.

எஸ்.ஆர்.ராஜாவுக்கும் முஸ்லிம் சமூகத்தவருக்கும் இடையே என்னதான் பிரச்னை? மனிதநேய மக்கள் கட்சியின் காஞ்சி புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் ஹைதர் அலியிடம் பேசினோம். ''கடந்த சட்டசபைத் தேர்தலில் இதே ராஜாவுக்காக வீதிவீதியாக நடந்து போய் நாங்கள் ஓட்டு கேட்டோம். அப்போ, எளிமையான மனுஷனா இருந்த ராஜா, ஜெயிச்சதும், தாம்பரத்துக்கே ராஜாவா மாறிய மாதிரி அடாவடியா செயல்படுறார்.

தாம்பரம் பஜாரில் 30 வருஷத்துக்கு மேல் தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடார், முஸ்லிம் சமூகத்தினர் சுமார் 500 பிளாட்பாரக் கடைகளை வெச்சிருந்தாங்க. ஆனா, ராஜாவோ தன்னோட ஆட்களுக்கு அந்தப் பிளாட்பாரக் கடைகளை ஒதுக்கித் தரத் திட்டமிட்டு, அடியாட்கள் மூலமாக எங்கள் கடைகளைக் காலி செய்ய முயற்சி செய்தார்.


உடனே, இந்தப் பிரச்னையை ஸ்டாலின் மற்றும் ஆற்காடு வீராசாமி கவனத்துக்குக் கொண்டுபோனோம். இந்த விவகாரத்தில் வியாபாரிகளோட நலனுக்காக, த.மு.மு.க. சார்பில் குரல் கொடுத்தோம். இதில் கடுப்பான ராஜா, எங்களைப் பழிதீர்க்க நேரம் பார்த்துட்டு இருந்தார். எங்கள் சமூகத்து ஆட்கள் வைத்திருந்த பிளாட்பாரக் கடைகளை அடாவடியாக அப்புறப்படுத்திவிட்டார்!'' என்றார் கோபம் குறையாத வராக.

த.மு.மு.க-வின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவர் யாகூப், ''சமீபத்தில் ஒரு துணிக் கடை வியாபாரிக்கும், கடை உரிமையாளருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில் பஞ்சாயத்து செய்த ராஜா, கடைக்குப் பூட்டு போட்டார். இந்த விவகாரத்தில் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், ராஜாவுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். உடனே, ராஜாவின் அடியாட்கள் வெள்ளையனை தாக்குவதற்காகத் துரத்த... கடைசியில் மசூதியில் இருந்த எங்கள் ஆட்கள்தான் அவரைக் காப் பாற்றினார்கள்

இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்பு சண்முகம் சாலையில் நிகழ்ந்த ஒரு சாதாரண விபத்தை மதப் பிரச்னையாகத் திரித்தவர், இந்து முன்னணி, பி.ஜே.பி. கட்சியினரை எங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டார். இது மட்டும் அல்ல... த.மு.மு.க-வைத் தடை செய்யச் சொல்லி துணை முதல்வருக்கே கடிதம் எழுதினார். இது எல்லாம் போதாது என்று, கடந்த 7-ம் தேதி தாம்பரத்தில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில், 'சமூக விரோத அமைப்பான த.மு.மு.க-வைத் தடை செய்ய வேண்டும்' என்று ராஜா பேசினார். இத்தனைக்கும் மேடையில், சட்டத் துறை அமைச்சர் துரை முருகன், தொழிலாளர் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு ஆகிய தி.மு.க-வின் முக்கியத் தலைவர்கள் இருந்தார்கள். ஆனால், யாருமே ராஜாவின் பேச்சைக் கண்டிக்கவில்லை. ஆனால், 'அநாகரிகமாகப் பேசிய எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று நாங்கள் போஸ்டர் ஒட்டியதற்காக எங்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். வரும் தேர்தலில் எஸ்.ஆர்.ராஜா போட்டியிட்டால், தொகுதி முழுக்கப் பிரசாரம் செய்துஅவரை டெபாசிட் இழக்கச் செய்வதே எங்கள் லட்சியம்!'' என்றார் ஆவேசமாக.

இது குறித்து எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவிடம் பேசினோம். ''தாம்பரம் பஜார் பகுதியில் த.மு.மு.க. நிர்வாகிகளின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. அதனால், அந்தப் பகுதியில் மட்டும் த.மு.மு.க-வின் செயல்பாடுகளைத் தடை செய்ய வேண்டும் என்று பேசினேன். மற்றபடி, 'தமிழ்நாடு முழுவதும் த.மு.மு.க-வைத் தடை செய்ய வேண்டும்' என்று நான் பேசியதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, என்னை இஸ்லாமியர்களின் விரோதிபோல சித்திரிக் கிறார்கள். மேலும், எனக்குத் துளியும் சம்பந்தமே இல்லாத ஒரு பிரச்னையில் என்னைத் தொடர்புபடுத்தி துண்டுப் பிரசுரம் வெளியிட்டு இருக்கிறார்கள். இதில், 'சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று நான் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நான் தாம்பரம் வியாபாரிகள் சங்கத் தலைவராகவும் இருக்கிறேன். வெள்ளையன் சம்பந்தப்பட்ட பிரச்னையில், நீதிமன்றத்தில் என் பக்கம் தீர்ப்பு அளித்து இருக்கிறார்கள். பிளாட்பாரத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தச் சொல்லி, 10 வருடங்களுக்கு முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நடைமுறைப்படுத்தினால், என் மீது குற்றம் சொல்கிறார்கள். உண்மை இல்லாத இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை!'' என்கிறார் எஸ்.ஆர்.ராஜா!.

- த.கதிரவன்

நன்றி ஜுனியர் விகடன்

சிறைக்குள் வேண்டாம் போலீஸ்! இப்படிக்கு குணங்குடி ஆர்.எம்.அனீபா! ஜீனியர் விகடனில் வெளிவந்தக் கட்டுரை


அரசியல் கைதிகளால் நிரம்பி வழிகிறது, அமைதிப் பூங்காவான தமிழகச் சிறைச்சாலைகள்!

கைதிகள், தாங்கள் செய்த குற்றங் களை உணர்ந்து, திருந்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்தச் சிறைகள், சித்ரவதைக் கூடங்களாக விளங்குவதை... அதனுள் 13 ஆண்டுகள் இருந்து அனுபவித்த நான், எந்த தவறும் செய்யவில்லை என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவன்.

வெள்ளைக்காரன் ஆண்ட 1894-லிலேயே சிறைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அவன் இந்த நாட்டைவிட்டுப் போன பிறகும், அந்த ஷரத்துகள் இன்று வரை அமலில் இருக்கின்றன. தன்னுடைய அரசாங்கத்தை எதிர்க்கும் அடிமைகளைத் துன்புறுத்தக் கொண்டுவரப்பட்ட சிறைச் சட்டம், சுதந்திர இந்தியாவில் 'விடுதலை' இந்தியனைப் பழிவாங்கவும் பயன்படுத்தப்படுவதுதான் கோரமானது!

பீகார் மாநிலம் பாகல்பூர் சிறையில், கைதிகளின் கண்களையே பிடுங்கி வீசினர். 1998-ல் சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரத் தில், 10-க்கும் மேற்பட்ட கைதிகள் கொலை செய்யப்பட்டார்கள். 1999-ல் பாளையங்கோட்டை சிறையில் இருந்து குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழு நபர்கள் அதிரடியாக வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்கு அவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு, 30 நாட்கள் நிர்வாணமாக வைக்கப்பட்டார்கள். அதே ஆண்டின் இறுதியில் மதுரை, பாளை மத்திய சிறை தவிர, மற்ற ஆறு மத்திய சிறைகளில் இஸ்லாமிய சிந்தனையாளர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, தனி செல்லில் 45 நாட்கள் சூரிய வெளிச்சம்கூட படாத வகையில் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

1990-களின் தொடக்கத்தில் இருந்து சிறைகளில் 'உயர் பாதுகாப்புத் தொகுதி' என்ற தனிப் பிரிவை உருவாக்கி சித்ரவதை செய்து வருகிறார்கள். இங்கே மனித வாடையும், இயற்கைக் காற்றும் மருந்துக்குக்கூட கிடைக்காது. இதில்தான் புரட்சியாளர்கள், தமிழ் தேசிய மற்றும் இஸ்லாமியப் போராளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அரசின் சட்டபூர்வ, சட்ட விரோத வன்முறைகள் இவர்கள் மீது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக, மனித உரிமைகளை மீறுகிற வகையில் இவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அரசியல் சிறைவாசிகள் முழுமையாக உளவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்படுகின்றனர். சிறை நிர்வாகம் என்பது பெயர் அளவில்தான். உளவுத் துறையே சர்வ அதிகாரம் கொண்டதாக செயல்படுகிறது.

சிறையில் 90 சதவிகிதம் பேர் ஏழை மற்றும் சாதாரண மக்கள். இவர்கள் அடிப்படையில் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். 'இவர்கள் இந்த அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் என்றால், சட்டபூர்வமான எந்தத் தண்டனையும் தரட்டும். ஆனால், சிறைக்கூடங்களில் சித்ர வதைகள் செய்வது என்ன நியாயம்?' என்பதுதான் எங்களது கேள்வி!

பணம் படைத்த அதிகாரத்தின் ஆராதனைக்கு உரிய ஒருவர், பல கோடி மோசடியில் மாட்டி, இதே சிறைக்குள் வந்தால், அவருக்கு ராஜ மரியாதை தரப்படுகிறது. சிறை வாசலில் நின்று அதிகாரிகள் வரவேற்று உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். நோயே இல்லை என்றாலும், சிறை மருத்துவ மனைகளில் அவர்கள் தங்கவைக்கப்படுகிறார்கள். சொகுசான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரப்படுகிறது. உள்ளே வருபவர் சாதாரணமானவர் என்றால், எல்லார் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்படுகிறார்.

'சிறைக் கட்டடத்தில் உள்ள ஒவ்வோர் தொகுதியிலும், தனித் தனி புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு, அவை மாவட்ட முதன்மை நீதிபதியின் நேரடிப் பராமரிப்பில் இருக்க வேண்டும். மாத ஆய்வுக்கு மாவட்ட நீதிபதி சிறைக்கு வரும்போது, சிறை அதிகாரிகளைத் தவிர்த்து சிறைவாசிகளிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் சொல்கின்றன. ஆனால், இவை எங்கும் நடைமுறையில் இல்லை.

இந்தக் குறைபாடுகள் அனைத்தை யும் ஒரேநாளில் முற்றிலுமாகத் தீர்த்துவிட முடியாதுதான். அவற்றைப் படிப்படியாகச் சரிப் படுத்தினாலும்கூடப் போதும். ஆனால், அதற்கும் வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. இருப்பினும் இது தொடர்பான ஒரு குறைந்தபட்சக் கோரிக்கை என்ன வென்றால், மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் சிறைத் துறையைக் கவனிக்கும் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதே.

'கைதிகள் தங்களின் அடிமைகள்!' என்று நினைக்கும் போலீஸார் கையில் இன்று சிறைகள் இருக் கின்றன. காவல் துறை இயக்குநர் ஆர்.நட்ராஜ் சிறைத் துறை இயக் குநராக இருந்தபோது... இந்தியாவில் முதன் முதலாக இந்து, முஸ்லிம், கிறிஸ்துவப் பண்டிகை நாட்களில் சிறைவாசிகளை அவர்களின் குடும்பத்தினர் சந்தித்து நலம் விசாரிக்க அனுமதி அளித்தார். ஒரே ஒரு அதிகாரி மட்டும் இப்படி இருந்தால் போதாது. போலீஸார் அனைவருக்குள் ளும் அந்த மன நிலை புகுத்தப்பட வேண்டும்.

காவல் துறையினரால்அடக்கு முறைக்கு ஆளாகி, சிறைப்பட்டு உள்ளவர்களைப் பராமரிக்கும் மனிதாபிமானம் சார்ந்த பொறுப் புக்கு, அதே காவல் துறையின் தலைவர்களை நியமனம் செய் வதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, இந்திய ஆட்சிப் பணி, சுகாதாரத் துறை அல்லது நீதித் துறையைச் சார்ந்தவர்களை சிறைத் தலைவராக நியமனம் செய்வதன் மூலம், மனித உரிமைகள் மீறலை பெருமளவுக்குக் கட்டுப் படுத்தலாம்!

படம்: அ.ரஞ்சித்

நன்றி ஜுனியர்விகடன்

27 அக்டோபர், 2010

ஷேக் சகூர் மரணம்

அமீரகத்தின் ஒரு மாநிலமான ராஸ் அல் கைமாவின் ஷேக் சகூர் அல் காசிமி அவர்கள் இன்று காலை மரணம் அடைந்து விட்டார்கள் ( இன்ன லில்லாஹி இன்னா இலெஹி ராஜுவுன்) அவர்களின் மாப்ரதிர்க்காக துவா செய்வுங்கள்.அமிரகத்தில் ஏழு நாட்கள் துக்கநாளாகவும் அரசு அலுவகங்களுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

25 அக்டோபர், 2010

இஸ்லாமிய மதத்துக்கு மாறிய டோனி பிளேரின் உறவினர்


இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர் டோனி பிளேர். இவரது மனைவி செர்ரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரி லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மதத்துக்கு தான் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.

லாரன் பூத் ஈரானில் உள்ள பிரஸ் தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார். அண்மையில் ஈரானில் கோம் நகரத்திலுள்ள பாத்திமா மாசூம் என்ற சன்னதியில் இருக்கும்போது ஏற்பட்ட ஆன்மீக மன மாற்றமே தனது மத மாற்றத்திற்கு காரணம் என லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

தற்போது ஹிஜாப் எனும் இஸ்லாமிய ஆடையை அணிவதாகவும் 5 வேளை தொழுவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது மது அருந்துவதில்லை என குறிப்பிட்ட அவர் 25 வருடங்களாக இருந்த இந்த தீய பழக்கத்தை தற்போது விட்டுவிட்டதாக குறிப்பிட்டார். தினமும் மது அருந்தாமல் இருக்க முடியாத தான் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு அந்த எண்ணம் கூட இல்லாமல் இருப்பது கண்டு ஆச்சர்யப்படுவதாக கூறினார். குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும் கூறியுள்ள லாரன் தற்போது 60 பக்கங்கள் வரை படித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

வரும்காலங்களில் பர்தா அணிவீர்களா என்ற கேட்கப்பட்டதற்கு வரும்காலத்தில் தனது ஆன்மீகப் பாதை எங்கே அழைத்துச் செல்லும் என யார் அறிய முடியும் என பதிலளித்தார். காஸாவின் மீதான இஸ்ரேலின் பொருளாதாரத் தடையை எதிர்த்து 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 46 நபர்களுடன் சைப்ரஸிலிருந்து காஸாவுக்கு சென்றுள்ளார் லாரன் பூத். ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தையும் எதிர்த்தவர் பூத்.

நன்றி:இநேரம்.காம்

24 அக்டோபர், 2010

மஞ்சள் காமாலை என்பது நோயா? ரத்தத்தில் நிறமியின் அளவு மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்தால், கண்ணில் மஞ்சள் நிறம் தென்படும்

. Top News

காமாலை என்றழைக்கப்படும், மஞ்சள் காமாலையை, பரிசோதனைகள் ஏதும் செய்யாமல், கண்கள் மஞ்சள் நிறமாவதை வைத்து, முன்னோர்கள் கண்டறிந்தனர். வீட்டு வைத்தியம் செய்து வந்தனர். எண்ணெய், உப்பு அற்ற உணவு அல்லது புரோட்டீன் சத்து நிறைந்த உணவுடன், ஆட்டுப்பால், கீழா நெல்லி இலை விழுது கொடுத்து வைத்தியம் செய்தனர். �டாக்டரிடம் போகாதீர்கள்.

ஆங்கில மருத்துவத்தில், மஞ்சள் காமாலைக்கு சிகிச்சையே கிடையாது� என்றும் கூறினர். ஆனால், அலோபதியில் சிகிச்சை உண்டு. "ஜானே" என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து "ஜாண்டிஸ்" என்ற ஆங்கில வார்த்தை உருவானது. 19ம் நூற்றாண்டில் தான், "ஜானே" என்ற வார்த்தையே உருவானது. எல்லா காமாலையும், மஞ்சள் காமாலை அல்ல என்பதை அப்போதே மருத்துவர்கள் உணர்ந்திருந்தனர். ஒவ்வொருவரின் உடல் நிலைக்கேற்ப, பாதிப்புக்கு ஏற்ப, இந்த அறிகுறியின் தன்மை மாறுபடும். சிலர் முற்றிலும் குணமடைந்தனர் சிலருக்கு சில காலம் பிடித்தது; சிலர் மரணமடைந்தனர்.

எல்லாம் விதிப்பயன் என்று சொல்வதை விட, ஏன் இப்படி ஏற்பட்டது என்று ஆராயும்போது தான், எல்லா அறிகுறிகளும் ஒரே வகையான நோயை சார்ந்தது அல்ல என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். காமாலை என்பது நோயே அல்ல; உடலில் ஏற்படும் நோய்க்கான அறிகுறியே. ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், அல்ட்ராசவுண்டு உட்பட ஸ்கேன்கள் ஆகியவற்றின் மூலம் காமாலை அறிகுறியை துல்லியமாக கண்டறியலாம். மேலும், மஞ்சளாக இருப்பவர்கள் அனைவருமே, காமாலை அறிகுறியுடன் இருப்பவர்கள் என்று சொல்ல முடியாது. "புளோரசன்ட்� விளக்கின் கீழ் நிற்கும் அனைவரின் தோலும் மஞ்சளாகத் தான் தெரியும்.

கேரட், பப்பாளி ஆகியவை சாப்பிடும்போதும், தோலின் மேல் கெரோட்டின் படிந்து, சற்று மஞ்சளாகக் காட்சி அளிக்கும். கண் விழியின் மேல் படலத்தின் கீழ் கொழுப்பு படிந்தாலும், தூசியாலும், கண்கள் சில நேரங்களில் மஞ்சளாகத் தெரியும். இதுவும் காமாலை அல்ல. "பிலுருபின்� என்ற நிறமி, கண் வெளிப்படலம் மற்றும் தோலில் படிந்து கறை ஏற்படும்போது தான், அதை காமாலை என்று கூற முடியும். சிறுநீர், வியர்வையிலும் சில நேரங்களில் மஞ்சள் நிறம் வெளிப்படும். ரத்தத்தில் உள்ள பழைய சிவப்பு அணுக்கள் மண்ணீரல் மற்றும் கல்லீரலில் சிதைக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன.

அப்போது, "பிலுருபின்� என்ற நிறமியும் வெளிப்படும். ரத்தத்தில் இந்த நிறமியின் அளவு மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்தால், கண்ணில் மஞ்சள் நிறம் தென்படும். சிவப்பு அணுக்கள், அளவுக்கு அதிகமாக சிதைந்து போகும்போது, அதை வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்தி, வெளியேற்றும் பணியை மேற்கொள்ளும் கல்லீரல், அதிக வேலைப்பளுவால் திணறும். அப்போது மஞ்சள் காமாலை ஏற்படும். பாரம்பரியமான சில நோய்கள், மலேரியா, சில மருந்து வகைகளை உட்கொள்வது ஆகியவற்றால் இது போன்று மஞ்சள் நிற அறிகுறிகள் ஏற்படலாம். பச்சை வேர்க்கடலையை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் கூட, சிலருக்கு மஞ்சள் காமாலை ஏற்படும். அதில் உள்ள "அப்ளோடாக்சின்� என்ற உட்கூறு, கல்லீரல் செல்களுக்கு விஷமாக அமைந்து விடும். சில நேரங்களில், கல்லீரலே பாதிப்படைந்து, அளவுக்கு அதிகமான பிலுருபினை வெளியேற்ற முடியாமல் போகும். பாரம்பரிய காரணங்களால் இது போன்று ஏற்படலாம். எனினும், மிக குறைந்த அளவில் தான் பாதிப்பு ஏற்படும்; உயிருக்கு ஆபத்து இல்லை.

பிறந்த குழந்தைகளுக்கு, கல்லீரல் செல்கள் போதுமான அளவு வளர்ச்சி அடையாமல் போனாலோ, தாய்க்கும் -குழந்தைக்கும் ரத்தப் பிரிவு ஒத்துப் போகாமல் இருத்தல் ஆகியவற்றால், குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம். எனினும், இது முற்றிலும் குணப்படுத்தக் கூடியதே.

ஹெப்பாடைட்டிஸ் ஏ, பி, சி, டி, இ, ஹெர்பஸ், லெப்டோஸ்பைரோசிஸ், சைட்டோமெகாலோ வைரஸ் ஆகியவை கல்லீரல் செல்களை பாதித்து, மஞ்சள் காமாலையை உருவாக்குகின்றன. மது குடித்தால் கல்லீரல் விஷமாகி விடும். தொடர்ந்து பல ஆண்டுகள் மது அருந்தினால், கல்லீரல் பாதிப்படைந்து மஞ்சள் காமாலை ஏற்படும். கல்லீரல் நாளங்களில் கல், புற்றுநோய், அடைப்பு உருவாகி தடை ஏற்படும்போது, பிலுருபின் வெளியேறுவதில் சிக்கல் உருவாகும். இதனால், போதுமான அளவிலான வெளியேற்றம் கூட தடைபட்டு விடும். இதனால் பிரச்னை உருவாகும்.

அனைத்து விதமான காமாலைக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை முறையை பின்பற்ற முடியாது. ரத்தம் மற்றும் சிறுநீரை, அறிவியல் ரீதியான பரிசோதனை செய்து, எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்த பிறகே, சிகிச்சை துவங்க வேண்டும். இளைஞர்களுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலையில் 80 சதவீதம் ஹெப்பாடைட்டிஸ் ஏ வைரசால் உருவாகிறது. இதற்கு சிகிச்சை தேவைப்படாது. சில வாரங்களில் தானாகவே குணமாகி விடும். ஆனால், இதை வைத்து அற்புதம், அதிசய சிகிச்சை என விளம்பரப்படுத்துகின்றனர். ஹெப்பாடைட்டிஸ் ஏ மற்றும் பி ஆகிய நோய்கள் முற்றிலும் குணமாக்கக் கூடியவை.

குழந்தை பிறந்த ஓராண்டு நிறைவதற்குள், ஹெப்பாடைட்டிஸ் பி தடுப்பூசி, மூன்று முறை போடப்படுகிறது. இரண்டு ஆண்டு நிறைவடைந்ததும், ஹெப்பாடைட்டிஸ் ஏ வகை நோய்க்கான தடுப்பூசி இரண்டு முறை போடப்படுகிறது. குழந்தை பருவத்தில் ஊசி போட தவறினால், வளர்ந்த பிறகு போட்டுக் கொள்ளலாம். வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றின் மூலம் ஹெப்பாடைட்டிஸ் பி மற்றும் சி நோய்களை குணப்படுத்தி விடலாம். ஹெர்பஸ் தொற்று, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் சைட்டோமெகாலோ வைரஸ் நோய்களுக்கு குறிப்பிட்ட மருந்துகள் உள்ளன.

நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்தால், சில வகையான மஞ்சள் காமாலையை குணப்படுத்தி விடலாம். மது அருந்தாமலிருந்து, நோயை குணப்படுத்தும் மருந்துகளை சரியாக சாப்பிடவில்லை எனில், மஞ்சள் காமாலை பாதிப்பு தீவிரமாகி விடும். அறுவை சிகிச்சை மூலம் சரியாகக் கூடிய நோய்களை, ஸ்கேன், லேப்பராஸ்கோபி செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். பரிசோதனையின் அடிப்படையில் சரியான சிகிச்சை அளிப்பது இந்நோய்க்கு அவசியம். அறியாமை, பயம் காரணமாக சிகிச்சையில் தாமதமானால் மரணம் கூட ஏற்படலாம். துரதிருஷ்டவசமாக பெரும்பாலானோர், சுய பரிசோதனை செய்து, போலி டாக்டர்களிடம் சென்று "இயற்கை மருத்துவம்� செய்து கொள்கின்றனர். "ஹிட் ஆர் மிஸ்� என்பது விளையாட்டுத்துறைக்கு வேண்டுமானால் பொருந்தலாம்; மனித வாழ்க்கையை பாதிக்கும் வகையிலான மருத்துவ முறைக்கு பொருந்தாது!

நன்றி:செய்தி.காம்

தண்ணீர் பழம்(வத்தவைப் பழம்) இருதய நோய்க்கு சிறந்த மருந்துஆராய்ச்சித்தகவல்




கோடை காலத்தில் தாகம் தீர்க்க மட்டுமல்ல வயதான காலத்தில் ஏற்பட உள்ள இருதயம் மற்றும் ரத்த அழுத்தம்போன்ற நோய்களை குணப்படுத்துவதற்கு தேவையான சத்துக்கள் அடங்கிய அருமருந்தாக உள்ளது தண்ணீர் பழம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்பழத்தை இலங்கையில் வத்தவைப் பழம் என்றும் அழைப்பர்.


இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட புளோரிடா மாநில பல்கலை ஆராய்ச்சியாளர் அர்ஜ்மண்டி மற்றும் பிஜூரியோ தெரிவித்திருப்பதாவது:

51 வயது முதல் 57 வயதுவரை உள்ள ஆண் மற்றும் பெண்கள் என இருபாலரும் தண்ணீர் பழத்தை தொடர்ந்து ஆறு வாரங்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள நைட்ரிக்அமிலம் அமினோ அமிலம் போன்றவை ரத்த அழுத்த நோயை குணமாகிறது. மேலும் விட்டமின் ஏபி6 மற்றம் விட்டமின் சி பொட்டாசியம் ஆண்டிடையாக்சைடு நார்ச்சத்து போன்றவையும் அடங்கியுள்ளது என தெரிவித்துள்ளனர்.



நன்றி:செய்தி.காம்

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?


உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 � 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.

மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு?

மாரடைப்பு என்றால் என்ன?

ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது. இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.

சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.

இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது? ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.

மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?

காரணங்கள் இரண்டு. ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை.

கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் � புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய். கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் � வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை.

இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.

மாரடைப்பின் அறிகுறிகள்?

மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம்.

சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு �அமைதியான மாரடைப்பு� என்று பெயர்.

இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்:

பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.

சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும். இதற்கு "ஆஞ்சைனா" என்று பெயர்.

நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி. மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.

நன்றி: செய்தி.காம்

முகம்மது இக்பால்(மர்ஹும்) இல்லத்திருமணம் விழா

கொள்ளுமேடு மேலத்தொருவை சேர்ந்த (மர்ஹும்) முஹம்மத் இக்பால் அவர்களின் புதல்வர் நஸ்ருல்லாஹ்விற்கும் , கொள்ளுமேடு கூபா தொருவை சேர்ந்த ஜமால்லுத்தின் மகள் அஸ்வர் பாத்திமா இருவருக்கும்(24.10.2010)இன்று தாமுமு மாநில து.செயலாளர் s.m. ஜின்னா தலைமையில் நிக்காஹ் நடைப்பெற்றது.சிறப்பு அழைப்பாளராக தாமுமு தலைமை கழக பேச்சாளர் கோவை.ஜாக்கிர் சிறப்புரை நிகழ்த்தினார்.இத்திருமண விழாவில் தாமுமு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கொள்ளுமேடு ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துகொண்டு திருமணவிழாவை சிறப்பித்தனர். அல்லாஹ்வின் அளப்பெரிய பேரருளால் அண்ணல் நபி (ஸல்)அவர்களின் வழிமுறையில் நடைப்பெற்ற இம்மணவிழாவை நபிகள் நாயகம் அவர்கள் வாழ்த்திய முறையில் ''பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜமபைனகுமா பீகைர்''
என வாழ்த்திகிறோம்.

பர்தாவுக்குத் தடை - தாக்கரேவின் அரைவேக்காட்டுத் தனமான கருத்து!



சாம்னா - சிவசேனாகட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு. இந்தநாளேட்டில் சிலதினங்களுக்கு முன்எழுதப்பட்டதலையங்கத்தில்சிவசேனா கட்சித்தலைவர் பால் தாக்கரேகடத்தல் குற்றங்களைதடுப்பதற்காக தனதுமூளையை கசக்கி பிழிந்துஒரு வழியை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்குஅர்ப்பணித்து இருக்கிறார்.

அது வேறொன்றுமில்லை. கடந்த அக்டோபர் 15ஆம் தேதியன்று மும்பை சாந்தாகுரூசில் உள்ள மருத்துவமனையில் 2 மாத குழந்தை ஒன்று கடத்தப் பட்டு விட்டதாம். அந்த குழந்தையைக் கடத்தியவர் பர்தா அணிந்து இருந்தாராம். மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ள ரகசிய கேமராவில் இது பதிவாகியுள்ளதாம்.

இதைக் காரணமாகக் கூறி பர்தாவை தடை செய்ய கோரிக்கை வைத்து இருக்கிறார் குற்றங்களைத் தடுக்க நினைக்கும் மாபெரும் அறிவாளியான (?) தாக்கரே.

பாகிஸ்தான், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவுக்கு கிரிக்கெட் விளையாட வரும்போது எதிர்ப்பு தெரிவிப்பது, ஆடுகளத்தை சேதப் படுத்துவது, ஐபிஎல் கிரிக்கெட் ஏல விவகாரத்தில் ஷாருக்கான் மற்றும் டெண்டுல்கருக்கு எதிராக விமர்சனம் செய்வது போன்றவை விளம்பரதிற்க்காக தாக்கரே செய்யும் கோமாளித் தனத்துக்கு உதாரணங்கள். அது போன்ற கோமாளித் தனமே இது என்ற போதிலும் தாக்கரேவையும் கடவுளாகக் கருதும் சிலருக்காக இந்த பதிவு.

குற்றத்தைத் தடுக்க வேண்டும் என்ற சமுதாய அக்கறை உள்ளவர் எந்தெந்த வழிகளில் குற்றத்தைத் தடுக்கலாம் என சிந்தித்து அறிவுரை கூற வேண்டுமே தவிர மத துவேசத்தில் சிந்திக்க மறந்து, மற்றவர்கள் எள்ளி நகையாடும் அளவுக்கு கருத்துக்களைக் கூறக் கூடாது. தாக்கரேவை கடவுளாகக் கருதும் நடிகர் நடித்து சமீபத்தில் வெளி வந்த திரைப்படத்திற்கு அதை தயாரித்தவரின் தொலைக் காட்சியில் வெளி வந்த ஒரு விளம்பரத்தில் நடிகர் தோன்றி, படப் பிடிப்பின் போது படத்தின் கதாநாயகியான உலக நாயகி (?) நடிகரின் முன்னால் வந்தவுடன் நடிகருக்கு தான் பயிற்சி செய்த அத்தனையும் மறந்து விட்டதாம். 60 வயது நடிகரையும் மறக்கடிக்கும் அளவுக்கு அந்த உலக நாயகியின் உடைகள்.

காற்றாட மேலே ஒரு ஆடையும், தொடையை காட்டிக் கொண்டு கீழே ஒரு ஆடையும் அணிந்து வரும் பெண்களாலேயே அளவுக்கதிகமான பாலியல் குற்றங்களும், வன்புணர்வுகளும் நடந்தேறுகின்றன. தாக்கரே சற்று சிந்தித்து கருத்து கூறி இருந்தால் உலக நாயகியையும், டூ பீஸ் ஆடைகளை அணியும் பெண்களையும் பர்தா அணியச் சொல்ல வேண்டாம் குறைந்த பட்சம் அந்த ஆடைகளை தடை செய்ய கோரிக்கை விடுக்கலாமே.

இது வரை இந்தியாவில் நடைபெற்ற ஆள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எத்தனை சதவீதம் பேர் பர்தா அணிந்து கொண்டு செய்கின்றனர் என்ற புள்ளி விவரத்தை தருவாரா இந்த தாக்கரே? சரி. தாக்கரேவின் ஆலோசனைகளை ஏற்று பர்தாவை தடை செய்தால் இனி இந்தியாவில் ஆள்கடத்தல் போன்ற குற்ற சமபவங்கள் ஒரு சதவீதம் கூட நடக்காது என தாக்கரே உத்தரவாதம் தரத் தயாரா?

காஞ்சி சங்கராசார்யா, நித்யானந்தா போன்ற (ஆ)சாமிகள் பக்தியின் பெயரால் மக்களை ஏமாற்றி காவி உடை தரித்து காமக் களியாட்டங்களில் ஈடுபட்டது உலகறிந்த விஷயம். இந்த செயலுக்காக காவி உடையத் தடை செய்யக் கோருவாரா பால் தாக்கரே? அர்ச்சகர் தேவநாதன் கோயில் கருவறையில் நடத்திய காமலீலைகள் சிடி போட்டு விற்கும் அளவுக்கு புகழ் பெற்ற நிலையில் அர்ச்சகர்கள் பதவியையே தடை செய்யக் கோருவாரா பால் தாக்கரே?

மும்பை மராத்தியர்களுக்கே என கோஷம் போடும் தாக்கரே பீகாரில் இருந்தோ, தமிழ்நாட்டில் இருந்தோ யாராவது ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள சென்றால் அவர்களை தாக்கேரேவின் சேனைகள் கொலை செய்யும் அளவுக்கு தாக்குதல் நடத்துவர். ஆனால் அயோத்தி போன்ற சில விவகாரங்களில் மட்டும் இவரது பாசம் மாநிலம் கடந்து எட்டிப் பாருக்கும். தாக்கரேவை கடவுள் எனக் கூறியவர் கூட என் தந்தை ஒரு மராத்தியர் என்ற அடையாளத்துடனே தாக்கரேவை சந்தித்தது குறிப்பிடத் தக்கது.

மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை அடிப்பதால் பிஸ்கட்டையும், ரயில், பஸ்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என எல்லா இடத்திலும் குற்றங்கள் நடப்பதால் இவை அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்று அரைவேக்காட்டுத் தனமாக கருத்து கூறாமல் குற்றங்களைத் தடுக்க சிறப்பான ஆலோசனைகளையும், குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கக் கோரியும் தாக்கரே போன்றோர் கருத்து கூறினால் வரவேற்போம்.

- அப்துர் ரஹ்மான், ஓமான்

நன்றி:இந்நேரம்.காம்

23 அக்டோபர், 2010

2002 குஜராத் கலவரத்தை மோடிதான் தலைமை தாங்கி நடத்தினார்-ஜடாபியா வாக்குமூலம்

அகமதாபாத்: 2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் [^] நரேந்திர மோடிதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் [^] கோர்தான் ஜடாபியா.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு [^] (எஸ்ஐடி) நேற்று ஜடாபியாவை வரவழைத்து கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரித்தது. அப்போது மோடியின் பங்கு குறித்து வாக்குமூலம் அளித்தார் ஜடாபியா.

இதுகுறித்து ஜடாபியா கூறுகையில், கலவரத்தின்போது மூத்த போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் மோடி. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த என்னை மோடி கண்டு கொள்ளவில்லை. அதிகாரப்பூர்வ கூட்டங்களுக்கும் என்னை அவர் அழைக்கவில்லை.

கலவரத்தை தலைமை தாங்கிய நடத்தியவரே நரேந்திர மோடிதான் என்று கூறியுள்ளார் ஜடாபியா.

கலவர வழக்கில் ஜடாபியா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய விசாரணையின்போது தனக்கும், கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறி 10 பக்க கடிதத்தையும் அளித்துள்ளார் ஜடாபியா.

நன்றி; தட்ஸ் தமிழ்

22 அக்டோபர், 2010

அல் ஹைராதின் திருமண உதவி

நமதூர் சிராஜ் மில்லத் வீதியில் உள்ள (மர்ஹும் )அப்துல் மஜீத் அவர்களின் மகள் திருமனத்திர்க்காக அல் ஹைராத் சமுக சேவை மையத்தின் மூலம் திருமணம் உதவி வழங்கப்பட்டது. மேலும் அல்லாஹ்வின் அளப்பெரிய பேரருளால்அண்ணல் நபி (ஸல் )அவர்களின் வழிமுறையில் வாழ அல் ஹைராதின் சார்பாக நபிகள் நாயகம் அவர்கள் வாழ்த்திய முறையில்

''
பாரக்கல்லாஹு லக வபாரக அலைக்க வஜம பைனக்குமா பிஹைர்''

என மணமக்களை வாழ்த்திகிறோம்.

இதுபோல் உதவிகள் தொய்வு இல்லாமல் நடைப்பெற உங்களின் துவாக்களையும், உதவிகளையும் அன்புடன் எதிர்பாக்கிறோம்.

இப்படிக்கு

அல் ஹைராத் நிர்வாகம்

19 அக்டோபர், 2010

சிங்கங்களுடன் விளையாடும் மனின்!

சிங்கம் என்றாலே கால் பிடறியில் பட ஓடுபவர்கள் பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். நாம் கூட அப்படித்தானே?

சர்க்கஸ் என்றால் சிங்கங்களைப் பயிற்றுவித்து அவற்றுடன் சாகசங்கள் புரிவார்கள். அதன்போதும் சில வேளைகளில் அனர்த்தங்கள் ஏற்படுவதுண்டு.

அதுவல்லாமல், சிங்கத்தை நாம் நேரில் காண்போமானால் அச்ச உணர்வில் உறைந்து போய் விடுவோமல்லவா?

ஆனால் ஒருவர் சிங்கங்களுடன் குதூகலமாக விளையாடுகின்றார் என்றால் ஆச்சரியமாக இல்லையா?

அவர் தான் கெவின் ரிச்சார்ட்சன். இவர் சர்வசாதாரணமாக சிங்கங்களுடன் விளையாடுகிறார்.

தென்னாபிரிக்காவின் ஜொஹார்ன்னஸ்பேர்கிலுள்ள வெள்ளைச் சிங்கங்களுக்கான சரணாலயத்திலேயே இவர் இவ்வாறு அவற்றுடன் விளையாடி வருகிறார்.



34 வயதான கெவின், தன்னை சிங்கங்களுக்கான தூதுவர் எனத் தெரிவிக்கின்றார்.

மேலும் இவர் ஜொஹார்ன்னஸ்பேர்கில் சிங்கங்கள், சிறுத்தைகள், புலிகள் மற்றும் கழுதைகளுக்கான வன விலங்கு பூங்காவொன்றையும் நடத்தி வருகின்றார்.

"சிங்கங்களுடன் ஓர் இரவு முழுவதும் தங்கக்கூட முடியும்" என தெரிவிக்கின்றார் கெவின் ரிச்சார்ட்சன்.

அன்புக்கு மானிடர் மட்டுமல்ல, வன விலங்குகளும் அடிமைதான் என்கின்றாரோ இவர்?

சிங்கம் என்றாலே கால் பிடறியில் பட ஓடுபவர்கள் பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். நாம் கூட அப்படித்தானே?

சர்க்கஸ் என்றால் சிங்கங்களைப் பயிற்றுவித்து அவற்றுடன் சாகசங்கள் புரிவார்கள். அதன்போதும் சில வேளைகளில் அனர்த்தங்கள் ஏற்படுவதுண்டு.

அதுவல்லாமல், சிங்கத்தை நாம் நேரில் காண்போமானால் அச்ச உணர்வில் உறைந்து போய் விடுவோமல்லவா?

ஆனால் ஒருவர் சிங்கங்களுடன் குதூகலமாக விளையாடுகின்றார் என்றால் ஆச்சரியமாக இல்லையா?

அவர் தான் கெவின் ரிச்சார்ட்சன். இவர் சர்வசாதாரணமாக சிங்கங்களுடன் விளையாடுகிறார்.

தென்னாபிரிக்காவின் ஜொஹார்ன்னஸ்பேர்கிலுள்ள வெள்ளைச் சிங்கங்களுக்கான சரணாலயத்திலேயே இவர் இவ்வாறு அவற்றுடன் விளையாடி வருகிறார்.



34 வயதான கெவின், தன்னை சிங்கங்களுக்கான தூதுவர் எனத் தெரிவிக்கின்றார்.

மேலும் இவர் ஜொஹார்ன்னஸ்பேர்கில் சிங்கங்கள், சிறுத்தைகள், புலிகள் மற்றும் கழுதைகளுக்கான வன விலங்கு பூங்காவொன்றையும் நடத்தி வருகின்றார்.

"சிங்கங்களுடன் ஓர் இரவு முழுவதும் தங்கக்கூட முடியும்" என தெரிவிக்கின்றார் கெவின் ரிச்சார்ட்சன்.

அன்புக்கு மானிடர் மட்டுமல்ல, வன விலங்குகளும் அடிமைதான் என்கின்றாரோ இவர்?

17 அக்டோபர், 2010

இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா : நோட்டீஸ் வினியோகத்தால் பரபரப்பு


"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி' என்ற பெயரில் விலாச மில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'


"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'


"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது.


நன்றி:தினமலர்

16 அக்டோபர், 2010

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து முறையீடு-தமுமுக தலைவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த நேர்காணல்



அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இரண்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் பிரித்தளித்த அலாகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையின் தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து லக்னோவில் கூடி விவாதித்த முஸ்லீம் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட இடம் குறித்த வழக்கு ஓர் சொத்துரிமை வழக்காகப் பார்க்கப்பட வேண்டுமே தவிர மத மற்றும் இதர நம்பிக்கைகள் அடிப்படையில் அதை அணுகி தீர்ப்பளிப்பது பாரதூர பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவஹிருல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.

மேலும் இந்த தீர்ப்பை விமர்சித்துள்ள பிரபல வழக்கறிஞர்களை வைத்து முக்கிய நகரங்களில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவதென்று முடிவுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கில் மனுதாரரான உத்தரப் பிரதேச வக்ப் வாரியம் மேல் முறையீடு செய்யும் போது, இந்தியாவின் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் அதில் தங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி:

15 அக்டோபர், 2010

தொழுவோம் வாரீர்


தொழுதால் தீரும்




தொல்லைகள் யாவும்




தினம் ஐவேளை




தொழுதிட வேணும்




மறந்தால் நாசம்




மறுமையில் மோசம்




மஹ்ஷர் வெளியில்




மருகிட நேரும்







படைப்பில் மேலாக நமைநாயன் படைத்தான்




பகுத்து அறிகின்ற அறிவாற்றல் கொடுத்தான்




கருவில் உருவாகி நாமிருந்தபோது




கருணைக் கனிவோடு உணவீத்து காத்தான்




அருளின் இறையோனை நாம் நினைத்து தொழுதால்




பெருமைப் பெறுவோமே இருலோகில் நாமே




மறையாம் குர்ஆனின் நெறிப்பேணி நின்று




மன்னர் பெருமானார் நபிப்பாதை சென்று




மண்ணின் மாயைகள் நமைச்சூழுமுன்னே




மாண்பின் இறையோனை தொழுதாலே மேன்மை




மரணம் வருமுன்னே தொழுதிடுவோம் இங்கு




மண்ணறை சென்றபின்னே தொழுதிடுதல் எங்கு




முஃமீன் அடையாளம் தொழுகை என்றார் நபி




முனைப்புடன் நாளுமே தொழுதாலே நிம்மதி




இருளைப் போக்கிடும் இழிநிலை மாற்றிடும்




இறையருள் சூழ்ந்திடும் இன்னல் பறந்தோடிடும்




குப்ரின் தீங்கான செயலின்றி வாழ




கப்ரின் வேதனையில் வீழாது மீள




சுவனத்தின் திறவுகோல் தொழுகை என்றார் நபி




கவனத்தில் பேணியே தொழுதாலே மேம்பதி




மறுமை தீர்ப்பன்று மகிழ்வோடு விண்ணில்




மாண்புடன் நாம் வாழ தொழவேண்டும் மண்ணில்




உணர்ந்து தொழுதோர்க்கு உயர்வான சுவணம்






நன்றி:இஸ்லாமியதவா .காம்
உதறித் திரிந்தோர்க்கு கேடான நரகம்.



உலகில் வேகமாக வளரும் நகர்களின் பட்டியலில் சென்னை!

உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் சென்னை உள்ளிட்ட 3 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியா மாநிலங்களிலேயே சந்தைக்கு உகந்த, வணிகச் சூழல் நிறைந்த மாநிலமாக குஜராத் திகழ்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரபல அமெரிக்கப் பத்திரிகையான போர்ப்ஸ் இதழ் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் சக்திவாய்ந்த நகராக நியூயார்க்கோ அல்லது மும்பையோ இருக்கப் போவதில்லை என்றும் சீனாவின் சோங்கிங், சிலியின் சாண்டியாகோ, டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் போன்ற நகரங்களே இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நியூயார்க், லண்டன், பாரீஸ், ஹாங்காங் மற்றும் டோக்யோ ஆகிய உலக மையங்களில் இருந்து சிறிய நகரங்களுக்கு உலகின் கவனம் திரும்பும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் சிறப்பான திட்டமிடலால் சீனாவின் உள்பகுதியில் உள்ள நகரங்கள் போக்குவரத்து வசதிகள் உள்ளவையாகவும் வணிகம் செய்ய ஏற்றவையாகவும் இருப்பதாகக் கூறியுள்ள போர்ப்ஸ், இந்தியா இத்தகைய திட்டமிடல் எதையும் செய்யவில்லை என்றாலும் சீனாவைப் போன்றே சிறிய நகரங்களின் வளர்ச்சி இருக்கிறது என்றும் கூறியுள்ளது.

இன்போசிஸ் மற்றும் விப்ரோவின் தலைமையகங்கள் அமைந்துள்ள பெங்களூரு, இந்தியர்களின் சராசரி வருமானத்தைவிட இருமடங்கு வருமானம் உடைய அஹமதாபத், நடப்பாண்டில் 1 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ள சென்னை ஆகிய நகரங்கள் இந்திய நகரங்களில் முக்கியத்துவம் பெற்றவையாகும். இந்தியாவின் முக்கியத் தொழில் துறைகளான வாகன உற்பத்தி, மென்பொருள் உற்பத்தி மற்றும் பொழுது போக்கு ஆகியவை இம்மூன்று நகரங்களில் உள்ளதாகவும் போர்ப்ஸ் கூறியுள்ளது.

2025ஆம் ஆண்டு 1 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சென்னை, நடப்பாண்டில் இதுவரை 1 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. டில்லி, மும்பை உள்ளிட்ட மற்ற இந்திய நகரங்களைவிட இது அதிகம் என்று போர்ப்ஸ் கூறியுள்ளது.

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழில்துறைகளை சென்னை தனதாக்கிக் கொண்டுள்ளது. குறிப்பாக வாகன உற்பத்தித் துறை. டெல், நோக்கியா, மொட்டோரேலா, சாம்சாங், சீமன்ஸ், சோனி மற்றும் பாக்ஸ்கான் ஆகிய எலக்ட்ரானிக் நிறுவனங்களும் வளர்ந்து வருகிறது. பொழுதுபோக்குத் துறையில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் போர்ப்ஸ் கூறியுள்ளது.


நன்றி:இந்நேரம்.காம்

14 அக்டோபர், 2010

முகமது நபியை கேலிச்சித்திரம் வரைந்தற்காக டென்மார்க் அமைச்சர் மன்னிப்பு கோரினார்

டென்மார்க்கின் 'ஜெலாண்டன் போஸ்டன்' என்ற நாளிதழ் கடந்த 2005 ஆம் ஆண்டு முகமது நபியை கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கொந்தளித்தனர். டென்மார்கின் மதவெறிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 6பல நாடுகளில் டென்மார்க் பொருட்களுக்கு எதிரான பொருளாதாரத் தடையைத் தொடர்ந்து டென்மார்க்கின் பொருளாதரம் படுவீழ்ச்சி அடைந்தது. குறிப்பாக வளைகுடா மற்றும் மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் டென்மார்க் பொருட்கள் விலைபோகாமல் தேங்கியதைத் தொடர்ந்து முஸ்லிம் நாடுகளுடனான வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

இன்னொரு பக்கம் ஐரோப்பிய நாடுகளைச் சமாளிக்க கருத்துசுதந்திரம் என்று இருதலைக்கொள்ளி எறும்பாய் டென்மார்க் அரசாங்கம் திணறியது. இந்நிலையில் முஸ்லிம் நாடுகளுடன் நல்லுறவைப் பேணும் வகையில் டென்மார்க் அரசாங்கம் பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் டென்மார்க்கின் வெளியுறவுத்துறை அமைச்சர் லீன் எஸ்பெர்சன் எகிப்தின் அல் அஸார் பல்கலைக் கழகத்தில் நடந்த கலந்துரையாடலின்போது முகமது நபியை கேலிச் சித்திரம் வரைந்ததற்காக டென்மார்க் அரசின் சார்பில் மன்னிப்பு கோரினார். கலந்துரையாடலின்போது அல் அஸார் பல்கலைக் கழக தலைமை இமாம் அகமது அல் தாயேப் உடனிருந்தார்.

அமைச்சர் லீன் செய்தியாளர்களுடன் பேசும்போது "டென்மார்க் நாடு முஸ்லிம் நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதில் உறுதியாக உள்ளது. கருத்துச்சுதந்திரத்தை மதிப்பதோடு மதங்கள்மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்" என்றார். மேலும், மதரீதியிலான மோதல்களுக்கு வழிவகுக்கும் அத்தகைய விசமத்தனங்களுக்கு எதிராக டென்மார்க் அரசு நிறைவேறியுள்ள சட்டங்களைப் பற்றியும் பட்டியலிட்டார்.

எனினும் கேலிச்சித்திரங்களைத் தொடர்ந்து முஸ்லிம்களின் எதிர்வினைகளால் எழுந்த கோபம் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு அல் அஸார் பல்கலைக் கழக தலைமை இமாம் அகமது அல் தாயேப் மன்னிப்புக்கோர மறுத்து விட்டதோடு, டென்மார்க் பத்திரிக்கையில் வெளியான கேலிச்சித்திரங்கள் தனிநபர்களின் செயல் என்றும் அது டென்மார்க் மக்களையோ அல்லது அரசையோ சார்ந்ததல்ல என்றும் அமைச்சர் லீன் தெரிவித்ததாகச் சொன்னார்.


நன்றி: இந்நேரம்.காம்


அயோத்தி தீர்ப்பு: முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் தமுமுக தலைவர் பங்குக் கொள்கிறார்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அயோத்தி பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் வரும் 16ம் தேதி லக்னோவில் நடைபெறுகின்றது.

இந்த கூட்டத்தில் பங்குக் கொள்வதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் நாளை லக்னோவிற்கு செல்கிறார். அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் இந்த கூட்டத்தில் அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தீர்மானிக்கப்படும். அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகள், கட்சிகள் மற்றும் மதநிறுவனங்களில் பிரதிநிதித்துவ அமைப்பாகும்.



நன்றி:தமுமுக .காம்

ஹஜ் யாத்ரிகர்களுக்கு வசதியாக மக்காவில் மெட்ரோ ரெயில்!

மக்கா: முஸ்லிம்களுக்கான ஹஜ் புனிதக்கடமையின் போது யாத்ரீகர் போக்குவரத்துக்கு உதவும் வகையில் மினா, அரஃபா, முஸ்தலிஃபா ஆகிய புனித இடங்களுடன் மக்காவை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் முழுமை பெற்றுள்ளது. 30 தினங்களுக்கு இந்த ரயில்களின் வெள்ளோட்டம் விரைவில் விடப்படவுள்ளன. ஹஜ் யாத்ரிகர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


முன்னதாக, சவுதி அரேபிய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் இளவரசர் மன்சூர் பின் மித்அபு இதனை ஆய்வு செய்ய உள்ளார்.

அமைச்சக வட்டாரங்கள் இதுபற்றி கூறுகையில் "6.5 பில்லியன் சவூதி ரியால்கள் செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மக்கா மெட்ரோ திட்டம், யாத்ரிகர்களுக்கான திட்டங்களிலேயே இரண்டாவது பெரிய திட்டமாகும். இதன்மூலம் ஒரு மணி நேரத்திற்கு 72,000 யாத்ரிகர்கள் பயணித்துப் பயனடையலாம். புனிதக்கிரியைத் தலங்களான மினா, அரஃபா, முஸ்தலிஃபா ஆகியவற்றில் தலா மூன்று நிலையங்கள் என்கிற கணக்கில் 9 நிலையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக, சுமார் 300 மீட்டர் நீளமுள்ள 10 தொடர்வண்டிகள் இயக்கப்படும் என்று சவுதி அரேபிய நகர்ப்புற வளர்ச்சி துறை துணை அமைச்சர் ஹபீப் ஜெயினுல் ஆபிதின் தெரிவித்துள்ளார். "ஒவ்வொரு வண்டியும் 3000 பயணிகளுக்கு இடமளிக்கும்" என்றார் அவர். இந்த ரயில் திட்டமானது அரஃபா - முஸ்தலிஃபா மற்றும் முஸ்தலிஃபா - மினா இடையேயான பயண கால அளவையும், மக்கா நகரின் போக்குவரத்து நெரிசலையும் வெகுவாக குறைத்துவிடும்.

மேலும் அவர் தெரிவிக்கையில் "இரண்டாம் கட்டத்தில், தொடர்வண்டிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்படும். மக்கா புனித ஆலயத்திற்கான நிலையம் உம்முல்குரா சாலையில் அமைக்கப்படும். இந்த அல்மஷாயிர் ரெயில்வேயானது படிப்படியாக மதீனா, ஜெத்தா நகரங்களையும் இணைத்துச் செயற்படும் வகையில் அல்-ஹரமைன் ரெயில்வேயுடன் இணைக்கப்படும்"என்று கூறினார்.

வருடம் முழுதும் இந்த ரெயில்கள் இயக்கப்படும். 80-120 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரெயில்களில் 20விழுக்காடு அமர்ந்து பயணிக்கவும், 80 விழுக்காட்டினர் நின்று பயணிக்கவுமாக அமைக்கப்பட்டுள்ளனவாம். வரும் வியாழனன்று இதற்கான வெள்ளோட்டம் தொடங்கப்படுகிறது.

இறையருளைக்கொண்டு இன்றையக்கால கட்டத்தில் ஹஜ் கடமை செய்வது மிகவும் எளிதாகிவிட்டது 'எல்லாம் புகழும் இறைவனுக்கே ''

நன்றி:இந்நேரம் .காம்