பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக் நகரைச் சேர்ந்த பெண் உம்னாய்பான் டாங்ப்ரபாய்(40). நாட்டிலேயே மிகவும் குண்டான பெண் இவர்தான். எடை 274 கிலா. மிகவும் பெரிதாக இருப்பதால், கடந்த 3 ஆண்டாக இவர் வீட்டை விட்டு வெளியேறவில்லை. இவரால் வீட்டில் உள்ள பாத்ரூமுக்கு மட்டுமே நடந்து செல்ல முடியும். இவருக்கு எல்லா உதவிகளையும் இவரது மகனே செய்து வந்தார்.
இந்நிலையில் உம்னாய்பான் காலில் கட்டி ஏற்பட்டது. அதை அகற்றுவதற்காகவும் உடல் எடையை குறைப்பதற்காகவும் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடிவு செய்தார். ஆனால் வாசல் வழியாக அவரால் வெளியேற முடியாது. அபார்ட்மென்ட்டின் 3வது மாடியில் வசிக்கும் பெண்ணை, ஆஸ்பத்திரியில் சேர்க்க உதவுங்கள் என உள்ளூர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதையடுத்து மீட்பு குழுவினர் வந்து வீட்டு சுவற்ரை உடைத்து, சிறப்பு எலிவேட்டர் மூலம் குண்டு பெண்ணை கீழே இறக்கினார். அதன்பின் சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அபார்ட்மென்ட்டில் குடியிருப்போர் கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர். சிகிச்சைக்குப் பின் கடற்கரைக்கு சென்று அலை நீரில் குதித்து விளையாட வேண்டும் என ஆசையாக உள்ளது என்கிறார் உம்னாய்பான்.
நன்றி:தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக