தொழுதால் தீரும் | ||
தொல்லைகள் யாவும் | ||
தினம் ஐவேளை | ||
தொழுதிட வேணும் | ||
மறந்தால் நாசம் | ||
மறுமையில் மோசம் | ||
மஹ்ஷர் வெளியில் | ||
மருகிட நேரும் | ||
படைப்பில் மேலாக நமைநாயன் படைத்தான் | ||
பகுத்து அறிகின்ற அறிவாற்றல் கொடுத்தான் | ||
கருவில் உருவாகி நாமிருந்தபோது | ||
கருணைக் கனிவோடு உணவீத்து காத்தான் | ||
அருளின் இறையோனை நாம் நினைத்து தொழுதால் | ||
பெருமைப் பெறுவோமே இருலோகில் நாமே | ||
மறையாம் குர்ஆனின் நெறிப்பேணி நின்று | ||
மன்னர் பெருமானார் நபிப்பாதை சென்று | ||
மண்ணின் மாயைகள் நமைச்சூழுமுன்னே | ||
மாண்பின் இறையோனை தொழுதாலே மேன்மை | ||
மரணம் வருமுன்னே தொழுதிடுவோம் இங்கு | ||
மண்ணறை சென்றபின்னே தொழுதிடுதல் எங்கு | ||
முஃமீன் அடையாளம் தொழுகை என்றார் நபி | ||
முனைப்புடன் நாளுமே தொழுதாலே நிம்மதி | ||
இருளைப் போக்கிடும் இழிநிலை மாற்றிடும் | ||
இறையருள் சூழ்ந்திடும் இன்னல் பறந்தோடிடும் | ||
குப்ரின் தீங்கான செயலின்றி வாழ | ||
கப்ரின் வேதனையில் வீழாது மீள | ||
சுவனத்தின் திறவுகோல் தொழுகை என்றார் நபி | ||
கவனத்தில் பேணியே தொழுதாலே மேம்பதி | ||
மறுமை தீர்ப்பன்று மகிழ்வோடு விண்ணில் | ||
மாண்புடன் நாம் வாழ தொழவேண்டும் மண்ணில் | ||
உணர்ந்து தொழுதோர்க்கு உயர்வான சுவணம் | ||
நன்றி:இஸ்லாமியதவா .காம் | உதறித் திரிந்தோர்க்கு கேடான நரகம். |
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
15 அக்டோபர், 2010
தொழுவோம் வாரீர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக