அது வேறொன்றுமில்லை. கடந்த அக்டோபர் 15ஆம் தேதியன்று மும்பை சாந்தாகுரூசில் உள்ள மருத்துவமனையில் 2 மாத குழந்தை ஒன்று கடத்தப் பட்டு விட்டதாம். அந்த குழந்தையைக் கடத்தியவர் பர்தா அணிந்து இருந்தாராம். மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ள ரகசிய கேமராவில் இது பதிவாகியுள்ளதாம்.
இதைக் காரணமாகக் கூறி பர்தாவை தடை செய்ய கோரிக்கை வைத்து இருக்கிறார் குற்றங்களைத் தடுக்க நினைக்கும் மாபெரும் அறிவாளியான (?) தாக்கரே.
பாகிஸ்தான், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவுக்கு கிரிக்கெட் விளையாட வரும்போது எதிர்ப்பு தெரிவிப்பது, ஆடுகளத்தை சேதப் படுத்துவது, ஐபிஎல் கிரிக்கெட் ஏல விவகாரத்தில் ஷாருக்கான் மற்றும் டெண்டுல்கருக்கு எதிராக விமர்சனம் செய்வது போன்றவை விளம்பரதிற்க்காக தாக்கரே செய்யும் கோமாளித் தனத்துக்கு உதாரணங்கள். அது போன்ற கோமாளித் தனமே இது என்ற போதிலும் தாக்கரேவையும் கடவுளாகக் கருதும் சிலருக்காக இந்த பதிவு.
குற்றத்தைத் தடுக்க வேண்டும் என்ற சமுதாய அக்கறை உள்ளவர் எந்தெந்த வழிகளில் குற்றத்தைத் தடுக்கலாம் என சிந்தித்து அறிவுரை கூற வேண்டுமே தவிர மத துவேசத்தில் சிந்திக்க மறந்து, மற்றவர்கள் எள்ளி நகையாடும் அளவுக்கு கருத்துக்களைக் கூறக் கூடாது. தாக்கரேவை கடவுளாகக் கருதும் நடிகர் நடித்து சமீபத்தில் வெளி வந்த திரைப்படத்திற்கு அதை தயாரித்தவரின் தொலைக் காட்சியில் வெளி வந்த ஒரு விளம்பரத்தில் நடிகர் தோன்றி, படப் பிடிப்பின் போது படத்தின் கதாநாயகியான உலக நாயகி (?) நடிகரின் முன்னால் வந்தவுடன் நடிகருக்கு தான் பயிற்சி செய்த அத்தனையும் மறந்து விட்டதாம். 60 வயது நடிகரையும் மறக்கடிக்கும் அளவுக்கு அந்த உலக நாயகியின் உடைகள்.
காற்றாட மேலே ஒரு ஆடையும், தொடையை காட்டிக் கொண்டு கீழே ஒரு ஆடையும் அணிந்து வரும் பெண்களாலேயே அளவுக்கதிகமான பாலியல் குற்றங்களும், வன்புணர்வுகளும் நடந்தேறுகின்றன. தாக்கரே சற்று சிந்தித்து கருத்து கூறி இருந்தால் உலக நாயகியையும், டூ பீஸ் ஆடைகளை அணியும் பெண்களையும் பர்தா அணியச் சொல்ல வேண்டாம் குறைந்த பட்சம் அந்த ஆடைகளை தடை செய்ய கோரிக்கை விடுக்கலாமே.
இது வரை இந்தியாவில் நடைபெற்ற ஆள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எத்தனை சதவீதம் பேர் பர்தா அணிந்து கொண்டு செய்கின்றனர் என்ற புள்ளி விவரத்தை தருவாரா இந்த தாக்கரே? சரி. தாக்கரேவின் ஆலோசனைகளை ஏற்று பர்தாவை தடை செய்தால் இனி இந்தியாவில் ஆள்கடத்தல் போன்ற குற்ற சமபவங்கள் ஒரு சதவீதம் கூட நடக்காது என தாக்கரே உத்தரவாதம் தரத் தயாரா?
காஞ்சி சங்கராசார்யா, நித்யானந்தா போன்ற (ஆ)சாமிகள் பக்தியின் பெயரால் மக்களை ஏமாற்றி காவி உடை தரித்து காமக் களியாட்டங்களில் ஈடுபட்டது உலகறிந்த விஷயம். இந்த செயலுக்காக காவி உடையத் தடை செய்யக் கோருவாரா பால் தாக்கரே? அர்ச்சகர் தேவநாதன் கோயில் கருவறையில் நடத்திய காமலீலைகள் சிடி போட்டு விற்கும் அளவுக்கு புகழ் பெற்ற நிலையில் அர்ச்சகர்கள் பதவியையே தடை செய்யக் கோருவாரா பால் தாக்கரே?
மும்பை மராத்தியர்களுக்கே என கோஷம் போடும் தாக்கரே பீகாரில் இருந்தோ, தமிழ்நாட்டில் இருந்தோ யாராவது ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள சென்றால் அவர்களை தாக்கேரேவின் சேனைகள் கொலை செய்யும் அளவுக்கு தாக்குதல் நடத்துவர். ஆனால் அயோத்தி போன்ற சில விவகாரங்களில் மட்டும் இவரது பாசம் மாநிலம் கடந்து எட்டிப் பாருக்கும். தாக்கரேவை கடவுள் எனக் கூறியவர் கூட என் தந்தை ஒரு மராத்தியர் என்ற அடையாளத்துடனே தாக்கரேவை சந்தித்தது குறிப்பிடத் தக்கது.
மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை அடிப்பதால் பிஸ்கட்டையும், ரயில், பஸ்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என எல்லா இடத்திலும் குற்றங்கள் நடப்பதால் இவை அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்று அரைவேக்காட்டுத் தனமாக கருத்து கூறாமல் குற்றங்களைத் தடுக்க சிறப்பான ஆலோசனைகளையும், குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கக் கோரியும் தாக்கரே போன்றோர் கருத்து கூறினால் வரவேற்போம்.
நன்றி:இந்நேரம்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக