மனிதன் மரணித்தவுடன் அவனது குடும்பத்தார் அவனை குளிப்பாட்டி, கஃபனிட்டு, அடக்கம் செய்ய ஆயத்தமாகின்றனர். அப்போது அவன் தலைமாட்டில் மிக அழகான ஒரு வாலிபன் வந்து மறைந்து நிற்கிறான். கஃபன் அணிவிக்கப்படும் போது அவ்வாலிபன் அவனது கஃபனுக்கும் மார்புக்கும் இடையில் மறைந்து இடம் பெறுகிறான். அவனை அடக்கம் செய்து விட்டு அனைவரும் திரும்பியதும் பயங்கரமான தோற்றத்தில் முன்கர் நகீர் எனும் இரண்டு மலக்குகள் மரித்தவனை நெருங்கி அவனை தனியே விசாரிப்பதற்காக உடன் இருக்கும் அவ்வாலிபனை அப்புறப்படுத்த நாடுகின்றனர்.
அது சமயம் அவ்வாலிபன் அவர்களை நோக்கி இவர் எனது தோழன் நான் எந்த நிலையிலும் இவரை தனியே விட்டு பிரிய மாட்டேன். இவரை விசாரிப்பது உங்கள் கடமையாக இருப்பின் நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். நான் இவரை விட்டு பிரியவே மாட்டேன். நான் இவரை சொர்கத்தில் சேர்க்கும் வரை பிரிய மாட்டேன் என்று அந்த அழகிய தோழன் கூறுவான். பிறகு தன் தோழரான அந்த மையித்தை நோக்கி தோழா! என்னை உமக்கு தெரியவில்லையா? எந்த குர்ஆன் ஷரீஃபை சில நேரங்களில் மெதுவான குரலிலும் சில நேரங்களில் உரத்த குரலிலும் நீ ஓதி வந்தாயோ! அதே குர்ஆன் தான் நான். நீ இப்பொழுது கவலை பட வேண்டாம். முன்கர் நகீர் மலக்குகளின் விசாரணைக்குப்பின் உனக்கு யாதொரு கவலையுமில்லை என அந்த தோழன் ஆறுதல் கூறுவான்.
விசாரணை முடிந்ததும் மேலான சொர்க்கப்பதியில் இருந்து மரித்தவருக்குரிய விரிப்பு முதலியவைகளை வரவழைக்கும் மேன்மையான ஏற்பாட்டை இவ்வாலிப நண்பனே செய்கிறான். பட்டாலான அவ்விரிப்புகளில் கஸ்தூரி வாசம் நிறைந்திருக்கும் என திருநபி அவர்கள் அருளினார்கள். அல்லாஹ் தன் கருணையாலும் கருணை நபி அவர்களின் பொருட்டால் எனக்கும் நம் அனைவருக்கும் இந்த சிறந்த பாக்கியத்தை தந்தருள்வானாக! ஆமீன்.
நன்றி: யாசின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக