#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

30 நவம்பர், 2011

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !



கண்கள் 

கண்கள் உப்பியிருந்தால்...
என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

இராமநாதபுரம் தொகுதிச் செய்திகள்





ராமேசுவரம்


ராமேசுவரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் உலக சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் எம்எல்ஏ. ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். ராமேசுவரம் நகராட்சித் தலைவர் அர்ச்சுணன், பள்ளித் தாளாளர் மைக்கேல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சேவியர் ராஜப்பா வரவேற்றார்.

29 நவம்பர், 2011

பாபர் மஸ்ஜித் நிஜங்களும்-போராட்டங்களும்





கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்-க்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்-யை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
 
கி.பி.1528 - பாபரின் தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார். அங்கு முழுமை அடையாமல் கிடந்த பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின் பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம் லோடி டெல்-யை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
 
கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது.
 
கி.பி.1855 - பாபர் பள்ளிவாச-ன் ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தாரால் ஆக்கிரமிக்கப்படுகிறது.
 
கி.பி.1857 - முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாவின் தலைமையில் நடக்கிறது. இந்துக்களும் முஸ்-ம்களும் சீக்கியர்களும் ஓரணியில் திரண்டு ஆங்கிலேயர்களை எதிர்க்கிறார்கள். நிலைகுலைந்த ஆங்கிலேயர்கள் அப்போராட்டத்தை ஒடுக்கினாலும், இனி தாங்கள் தொடர்ந்து இந்தியாவை ஆளவேண்டுமெனில் இந்துக்கள் முஸ்-ம்களுக்கிடையே குரோதத்தை - பிரித்தாளும் கொள்கையை வளர்த்தெடுக்க வேண்டுமென்று சதித்திட்டம் போடுகிறார்கள். அதற்கு அவர்கள் உடனடியாக எடுத்துக்கொண்ட ஆயுதம்தான் அயோத்தி - பாபர் பள்ளிவாசல் தொடர்பான வரலாற்றுத் திரிபுகள்.
அதேவருடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பாபர் மசூதி நிலத்தில் "ராம் சபுத்ரா' எனும் பூஜை செய்யும் திண்ணை உருவாக்கப்பட்டு பிரச்சினை தீவிரமடைகிறது.
 
கி.பி.1859 - ஆக்கிரமிக்கப்பட்ட இப்பகுதிக்கும், பாபர் பள்ளிவாசலுக்கும் இடையில் ஒரு தடுப்பு வே- அமைக்கப்பட்டு இருதரப்பினரும் வழிபாடு நடத்திட ஆங்கிலேய நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. இதுதான் பிற்காலத்தில் நிகழ்ந்திட்ட துயரங்களுக்கு முன்னோட்டமாகும்.
 
கி.பி.1931 - அயோத்தியில் வகுப்புக் கலவரம் நடக்கிறது. அப்போது பாபர் பள்ளிவாச-ன் உண்மைகளைக் கூறும் கல்வெட்டு திட்டமிட்டு பெயர்த்தெடுக்கப்படுகிறது.
 
கி.பி.1947 - இந்தியா விடுதலைப் பெறுகிறது.
 
கி.பி.1949 - மே மாதம் 22-23 தேதிகளின் நள்ளிரவில் பள்ளிவாச-ன் கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டு மிம்பரில் ராமர் சிலைகள் வைக்கப்படுகிறது. அதுவரை இஷா தொழுகை நடத்திவிட்டு சுப்ஹு தொழுகைக்கு மீண்டும் பள்ளிக்கு வந்த முஸ்-ம்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார்கள். புகார் பதிவு செய்யப்படுகிறது.
அன்றைய பிரதமர் நேருவுக்கு தகவல் தெரிந்து உடனடியாக சிலைகளை அகற்றச் சொல்கிறார். அன்றைய உள்துறை அமைச்சரான சர்ச்சைக்குரிய வல்லபாய் படேல் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அன்றைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும் பிரச்சினையின் தீவிரத்தை உணரவில்லை. அயோத்தி நகரின் துணை ஆணையர் கே.கே.நய்யார், பிரதமர் நேருவின் உத்தரவை பொருட்படுத்தாமல், பள்ளிவாசலை இழுத்துப் பூட்டி அதை "சர்ச்சைக்குரிய பகுதி'' என அறிவிக்கிறார்.
 
கி.பி.1949 - இருதரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்.
 
கி.பி.1959 - நிர்மோகி அகோரா என்கிற துறவியர் அமைப்பு, அது எங்களுக்குச் சொந்தமான இடம் என்று வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்கிறது.
 
கி.பி.1961 - சன்னி வக்பு வாரியம், இது தங்களுக்குச் சொந்தமான இடம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.
 
கி.பி.1984 - அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் இராமர் கோயில் கட்டுவோம் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்து பதற்றத்தை உருவாக்குகிறது.
 
கி.பி.1986 - பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவை முஸ்-ம்கள் தொடங்குகின்றனர். அதே வருடம் அன்றைய காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில், பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட சட்டவிரோத சிலையை பூஜை செய்ய பைசாபாத் நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
 
கி.பி.1989 - விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், பள்ளிவாசலுக்கு அருகில் அடிக்கல் நாட்டப்பட்டு பிரச்சினை தீவிரப்படுத்தப்படுகிறது.
 
கி.பி.1990 - முலாயம்சிங் யாதவ் உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்தபோது வன்முறையாளர்கள் பள்ளிவாசலுக்கு அருகே சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டம் கலைக்கப்படுகிறது. உடனடியாக அத்வானி, குஜராத்தில் சோமநாதபுரம் ஆலயத்தி-ருந்து அயோத்தி வரை ரத யாத்திரையை நடத்தி நாடெங்கிலும் பீதியை உண்டாக்குகிறார். ஆனால் அவரது ரத யாத்திரை பீகார் மாநிலத்துக்குள் நுழைந்தபோது அன்றைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அத்வானியை துணிச்சலோடு கைது செய்கிறார். அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் இதனால் மத்தியில் ஆட்சியை இழக்கிறார்.
 
கி.பி.1992 - டிசம்பர் 6 - நாடெங்கிலும் திரட்டப்பட்ட மதவெறி பிடித்த, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வன்முறைக் கூட்டம் பாபர் மஸ்ஜிதை இடிக்கிறது. நாடெங்கிலும் மதக்கலவரங்கள் நடந்து அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
மீண்டும் அதே இடத்தில் 100 நாட்களுக்குள் பள்ளிவாசலைக் கட்டித் தருவோம் என அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் அறிவிக்கிறார்.
 
கி.பி.1992 - டிசம்பர் 16 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு யார் காரணம் என்று கண்டறிய நீதிபதி -பர்ஹான் தலைமையில் கமிஷன் அமைக்கப்படுகிறது.
 
கி.பி.1993 - சுதந்திரத்திற்கு முன்பு 1947 வரை எவையெல்லாம் யாருடைய வழிபாட்டுத் தலங்களாக இருந்தனவோ அவை அப்படியே தொடரும் என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது.
 
 2002 - பிப்ரவரி மாதம் பாபர் மஸ்ஜித் நிலத்திற்கு அருகில் பெருமளவில் கூட்டம் திரட்டப்பட்டு மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு பிரச்சினை தொடங்கப்படுகிறது. மார்ச் 15 அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் நிலத்தில் கோயில் கட்டும் பணி தொடங்கும் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவிக்கிறது.
 
2002 - பிப்ரவரி 27 அன்று குஜராத்தில், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து மதக்கலவரம் வெடிக்கிறது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்-ம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர். பல்லாயிரம் கோடி மதிப்பிலான முஸ்-ம்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.
 
2002 - ஏப்ரல் மாதம் மூன்று நீதிபதிகள் கொண்ட அலஹாபாத் உயர்நீதிமன்ற குழு, பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்ற விசாரணையைத் தொடங்கியது.
 
2003 - பாபர் மஸ்ஜித் இடத்தில் கோயில் இருந்ததா? என்று ஆய்வு செய்ய தொல்-யல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
2009 - -பர்ஹான் ஆணையம் 16 வருடங்கள் விசாரணைக்குப் பிறகு, பாபர் மஸ்ஜித் இடிப்பில் அத்வானி, அசோக் சிங்கால், உமாபாரதி, உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோரை குற்றவாளிகள் என அறிவிக்கிறது.
 
2010 - செப்டம்பர் 30. 61 வருடங்களாக நடைபெற்ற பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம், சட்டப்படி அல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. சன்னி வக்பு வாரியமும் மற்றவர்களும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் நிலத்தை பிரித்துக் கொடுக்க இடைக்காலத் தடை விதித்தது.

விலை உயர்வா? தண்டனையா?




by Thamimun Ansari 
தமிழக மக்கள் மிகவும் கொதித்துப்போய் உள்ளனர். திமுகவின் கடந்தகால மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக வீசிய எதிர்ப்பலையில் கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா.

இம்முறை எடுத்தேன் & கவிழ்த்தேன் என்று செயல்படாமல் நிதானமாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. இனி எதிர்க்கட்சிகள் வலிமையைப் பெற அவர் காரணமாக இருக்க மாட்டார் என்றும் பேசப்பட்டது.

ஆனால் அனைத்தையும் வழக்கம்போல் பொய்ப்பித்திருக் கிறார் ஜெயலலிதா.

குடும்பத்தார்க்கு செலவு செய்வதின் பயன்



2:223 உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

குவைத்தில், எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தை அடுத்து அந்நாட்டு பிரதமரும் அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர்.




பிரதமர் Sheikh Nasser al-Mohammad al-Sabah மீது ஊழல் புகார் தெரிவித்த
 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தை நடத்த
 விடாமல் முடக்கினர். மேலும் குவைத் முழுவதும் போராட்டங்களும் 
நடைபெற்றதால், பதவி விலகும் முடிவை எடுத்ததாக பிரதமர் 
தெரிவித்துள்ளார். குவைத் மக்கள் 
போராட்டத்தில் ஈடுபடுவது, நாட்டின்
 நிலைத் தன்மையை பாதிக்கும் என 
கூறியுள்ள பிரதமர் Sheikh Nasser, 

எதிர்க்கட்சி நாடாளுமன்ற 
உறுப்பினர்களின் சதி காரணமாகவே, 
பதவி
 விலக நேரிட்டதாக தெரிவித்தார். இதற்கிடையே, பிரதமர் மற்றும் 
அமைச்சரவை ராஜினாமாவை, குவைத் அரசர் ஏற்றுக் 
கொண்டிருக்கிறார். இதையடுத்து, புதிய அரசை அமைக்க 3 மாதங்கள் 
ஆகும் என, குவைத் நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!


திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் 100க்கு 80 பேருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்து விடுகிறது. 20 சதவிகிதத்தினருக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
உலகில் ஆண்களால் 40 சதவிகிதமும், பெண்களால் 40 சதவிகிதமும், மற்ற காரணங்களால் 20 சதவிகிதமும் குழந்தைப் பேறு இல்லாமை ஏற்படுகிறது. காரணங்கள் எதுவாக இருந்தாலும், குழந்தை இல்லாமையைப் போக்கும் அளவுக்கு நவீன சிகிச்சைகள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.
சாபம் அல்ல!
குழந்தை இல்லாமைக்கு முற்பிறவியில் செய்த பாவம் அல்லது சாபம் என்று நினைப்பது மிகவும் தவறானது. இத்தகைய தவறான மனப்போக்குகள் மாறி வருகின்றன. இது கணவன் & மனைவி இருவரையும் சார்ந்த பிரச்சனை எனப் புரிந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது ஆரோக்கியமான விஷயம். இதனால் கணவன் & மனைவி இருவரும் சேர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.
எப்போது டாக்டரிடம் செல்ல வேண்டும்?
புதிதாகத் திருமணம் செய்து கொள்வோர் எந்தவிதக் கருத்தடைச் சாதனங்களையும் பயன்படுத்தாமல், ஒரு வருடம் தாம்பத்ய உறவை மேற்கொண்டும் கூட கருத்தரிக்கவில்லை என்றால், குழந்தைப்பேறு இல்லாமைக்கான காரணம் இருப்பதாகக் கொள்ளலாம். இத்தகையோர் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரிடம் உடனடியாகச் செல்வது அவசியம்.
இயல்பாக கரு உருவாதல் குழந்தைப்பேறு கிடைப்பதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவ ரீதியாகச் சம பங்கு உள்ளது. அதாவது போதுமான அளவுக்கு நல்ல விந்து அணுக்களை ஆண் உற்பத்தி செய்து, பெண்ணின் கர்ப்பப் பைக்குள் கொண்டு சேர்க்கும் தன்மை உடையவராக இருக்க வேண்டும். அந்த விந்தணுக்கள் பெண்ணின் கருமுட்டைக்குள் சென்று கருத்தரிக்கச் செய்யும் ஆற்றல் உள்ளவையாக இருக்க வேண்டும்.
இதே போன்று, ஒரு பெண்ணுக்கு கருமுட்டையின் உற்பத்தி சரியாக இருக்க வேண்டும். அது கர்ப்பப் பைக்கு வரும் வழி அடைப்பு இல்லாமல் இருக்க வேண்டும். கருமுட்டையையும், விந்தணுவையும் ஏற்ற கருவை வளர்க்கக் கூடிய வலுவான நிலையில் கர்ப்பப்பை இருக்க வேண்டும்.
மேலே சொன்னவை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான அடிப்படை விஷயங்களில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அது குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.
ஆண்களே, புகை வேண்டாம். விந்து அணுக்கள் குறைவாக இருத்தல், உயிர் அணுக்கள் இல்லாமல் இருத்தல் ஆகியவை ஆண்களைப் பொறுத்தவரை, பொதுவாக குழந்தை இல்லாமைக்குக் காரணமாக அமைகிறது. இது தவிர சிகரெட்டும் முக்கிய காரணம். சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் உயிர் அணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், அதன் ஊர்ந்து செல்லும் தன்மையையும் வடிவத்தையும் பாதிக்கிறது. சர்க்கரை நோயும் ஆண்மைக் குறைவுக்குக் காரணமாக அமைந்துவிடும்.
இவை தவிர, உணவில் புரதச் சத்துக் குறைவு, வைட்டமின் இ, பி. காம்ப்ளக்ஸ் குறைவு போன்றவை, விந்தணு குறைவுக்குக் காரணங்களாக இருக்கின்றன.
பெண்களைப் பொறுத்தவரை பொதுவாக ஹார்மோன் குறைபாடுகளே குழந்தை இல்லாமைக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. ஹார்மோன் குறைபாடு காரணமாக, கருமுட்டைகள் உற்பத்தியாகாத நிலை, கர்ப்பப்பை வளர்ச்சி இன்மை ஆகியவை ஏற்படுகின்றன. ரத்தசோகை, புரதச்சத்துக் குறைவு ஆகியவையும் பெண்களுக்கான குறைபாட்டுக்கான காரணங்கள்.
நவீன சிகிச்சைகள் என்றால் என்ன?
குழந்தை இல்லாமைக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, நவீன முறையில் சிகிச்சை அளித்து குழந்தைப் பேறை உருவாக்கும் அளவுக்கு மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 1973&ம் ஆண்டில் ‘டெஸ்ட்டியூப் பேபி’ எனப்படும் சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறை கண்டுபிடிக்கப்பட்டது. லண்டனில் உள்ள ‘பான்ஹால்’ மருத்துவமனையில் 1978 ஜூலை 25&ம் தேதியன்று முதல் சோதனைக்குழாய் குழந்தை பிறந்தது. முதல் அதிசயக் குழந்தைக்கு ‘லூயிஸ் பிரவுன்’ எனப் பெயரிட்டனர். இச்சாதனையைத் தொடர்ந்து உலகம் முழுவதும் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கும் வசதி படைத்த மருத்துவமனைகளின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் 3 லட்சத்தைத் தொட்டுவிட்டது.
ஐ.வி. எஃப் முறை (I.V.F.)
பெண்ணின் கருக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுவிட்டால், விந்தணுக்கள் அதன் வழியே சென்று கருமுட்டையை அடைய முடியாது. இதற்குத் தீர்வு காண்பதற்காகவே ‘ஐ.வி.எஃப்’ முறை என்ற சோதனைக்குழாய் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இம்முறையில் பெண்ணின் முட்டைப்பை ஊக்குவிக்கப்படும். பின்னர், சேகரித்த முட்டைகளை தரமான உயிர் அணுக்களுடன் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கரு உருவாக்கப்படும்.
நன்கு வளர்ந்த தரமான கரு, பின்னர், ஊசி மூலம் கருப்பையினுள் நேரடியாகச் செலுத்தப்படும். கருக்குழாய் அடைப்பு உள்ளவர்கள் பிள்ளை பெறமுடியாது என்ற நிலையை ஐ.வி.எஃப். முறை தகர்த்தது.
இக்ஸி சிகிச்சை முறை (I.C.S.I.)
சோதனைக் குழாய் முறையில் பெண்ணின் கருமுட்டையையும் ஆணின் விந்து அணுக்களையும் ஒன்றாக இணைத்து, கருவை உருவாக்குவதற்கு சில 100 நல்ல விந்தணுக்கள் தேவைப்பட்டன. ஆனால் ‘இக்ஸி’ முறையில், கருவை உருவாக்க ஒரே ஒரு நல்ல விந்தணுவே போதுமானது. விந்துப் பையிலிருந்து இந்த விந்து அணுவை எடுக்கவும் சாத்தியம் உள்ளது. மேலும் ‘ஐ.வி.எஃப்’ சிகிச்சை முறையினால் குழந்தை பெறுவதற்கான வெற்றி வாய்ப்பு 30 சதவீதம்தான் கிடைத்தது. ஆனால் இக்ஸி முறையில் வெற்றி வாய்ப்பு 60 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த முறை 1992 முதல் பிரபலமாகத் தொடங்கியது. இந்த நவீன சிகிச்சை முறைகள் மூலம் ஆண், பெண் இருவரின் குறைபாட்டை 100 சதவீதம் போக்கி சிகிச்சை அளிக்க முடியும்.
குழந்தைச் செல்வத்தைப் பற்றி இஸ்லாம்…
(அல்லாஹ்) தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான்.  தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான்.  அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான்.  தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான்.  (அல்குர்ஆன்  42:49-50).
நன்றி:  அபூவஸ்மீஆன்லைன்.காம்

குறட்டை (Snore) – இருக்கா!! என்ன செய்வது???



Yawningகுறட்டையை தடுக்க வழிகள்
நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.
ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.

வெற்றிலை-பாக்கு, புகையிலை,


asthma
Caution-Tips
வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.
இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.
அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.www.kalvikalanjiam.com
நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.
சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.

25 நவம்பர், 2011

மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்





சென்னை, நவ.25: சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்திருப்பதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


      இதுதொடர்பாகவெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

 சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு இதுவரை இருந்துவந்த உச்சவரம்பை மத்திய அரசு நீக்கியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இது இந்திய நாட்டின் சில்லறை வியாபாரிகள் நான்கரை கோடி பேரைப் பாதிக்கும் நடவடிக்கையாகும்.
மளிகைப் பொருள்களை பன்னாட்டு நிறுவனங்களும் கொள்முதல் செய்வதற்குத்
 தடைவிதிக்க வேண்டும்

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ மக்கள் குறைகேட்பு!


ராமேசுவரத்தில் நேற்று பொதுமக்களிடம் குறைகேட்கும்  நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி  தலைவர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். ஆணையாளர் (பொறுப்பு) ரத்தினவேல், துணை தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். இதேபோல நகரசபை தலைவர் அர்ச்சுனன் அளித்த மனுவில், தெற்கு கரையூர், சேராங்கோட்டை, நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், ஏரகாடு, பொன்னநகர், ராமநாத சாமிநகர் ஆகிய பகுதிகளில் சமுதாயக்கூடம் கட்டவும், எம்.ஆர்.டி நகரில் கலையரங்கம் கட்டவும், கோவில் 4 ரதவீதிகளில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கவும், அரசு மருத்துவமனை பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கவும், சின்னவம்பிள்ளை தெரு முதல், ராமதீர்த்தம் தெற்கு வரை சிமெண்டு சாலை அமைக்கவும் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.1Ð கோடி ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

நன்றி.இந்நேரம் 

வேலை வாய்ப்புகளை அள்ளித்தரும் படிப்புகள் – பேக்கரி கோர்ஸ்


பேக்கரி துறையில் டிப்ளமோ கோர்ஸ்!
Diploma in Bakery
Diploma in Bakery
உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் சுற்றுலா துறை அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. இதனுடன் சேர்ந்து ஹோட்டல் மேலாண்மைத்துறை, கேட்டரிங் துறையும் வளர்ந்துள்ளது. கேட்டரிங் துறையில் ஒரு பகுதி யாக பேக்கரியும் பிரதானமாக விளங்குகிறது.
பேக்கரி தொழிலிலும் பல்வேறு நுட்பங்கள் புகுத்தப்பட்டு விட்டன. வாடிக்கையாளர்களும் புதிய ரக பாஸ்ட்புட் உணவு வகைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

23 நவம்பர், 2011

பைக் திருட்டை தடுக்கும் டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டம்: தமிழக வாலிபர் கண்டுபிடிப்பு


 
Digital Locking system for Bikes
 
கள்ளச்சாவி போட்டு மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதை தடுக்கும் அதிநவீன சாதனத்தை திருக்கோவிலூரை சேர்ந்த எஞ்சினியரிங் பட்டதாரி வடிவமைத்துள்ளார். இந்த சாதனம் விரைவில் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை சேர்ந்தவர் கார்த்திக்(23). இவர் சென்னையிலுள்ள தனலட்சுமி எஞ்சினியரிங் கல்லூரியில் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பட்டப் படிப்பை முடித்துள்ளார்.

லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு



 
Nano Bike
 
லிட்டருக்கு 97 கிமீ நானோ பைக்கை தஞ்சையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தஞ்சாவூரிலுள்ள பொன்னையா ராமஜெயம் பல்கலைகழகத்தின் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பிரிவில் பயின்று வரும் இறுதியாண்டு மாணவர்கள் இந்த நானோ பைக்கை வடிவமைத்துள்ளனர். அந்த கல்லூரியின் மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர்கள் ஆலோசனையுடன் இந்த பைக்கை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

22 நவம்பர், 2011

சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை!



 



அளவு கடந்த வெப்பம், பனி, காலம் தவறிய தொடர்மழை, பூகம்பம், சுனாமி என்ற ஆழிப்பேரலை ஆகியவை, அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. இதுபோன்ற இயற்கை பாதிப்பால், பல லட்சக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர்.

குறிப்பாக சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால், பல அப்பாவி உயிர்கள் பறிபோகின்றன.

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை




தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்த்தி
கிடைக்கிறதா?

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு
விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .    

ஆயங்குடியில் தமுமுக&மமகவின் மாவட்ட பொதுகுழு














 தமுமுக&மமகவின்   கடலூர் மாவட்ட பொதுகுழு ஆயங்குடியில் மிகவும் எழுச்சியுடன் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ் பொதுக்குழுவை மாவட்ட தலைவர் மெஹ்ராஜ்த்தின் தலைமைத்தாங்க பொதுகுழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக மமகவின் மாநில பொருளாளர் ஹாருன் ரஷித் வருகை புரிந்தார்.நடைப்பெற்ற ஊராட்சிமன்ற தேர்தல் கலந்தாய்வு நடைப்பெற்றது.பிறகு முஸ்லிம் சமுதாயத்திற்கு கருப்பு தினமான வருகின்ற டிசம்பர் 6 ரில் பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்ச நீதிமன்றமே விரைந்துதீர்ப்பை வழங்க கோரி மாவட்ட தழுவிய போராட்டம் நடத்தவேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுகுழுவில் மா.வ .செயலாளர் அமானுல்லாஹ்,பொருளாளர் அய்யூப்,யாசிர் அரபாத் ,சமது ,மற்றும் மாவட்ட அனைத்து கிளைகழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.



19 நவம்பர், 2011

இஸ்லாத்தை அவமதிக்கும் பேஸ்புக் படம்.


தற்போது பேஸ்புக்கில் I love Islam என்ற பெயரில் இயங்குகின்ற பேஸ்புக் பேஜ் ஒன்று தற்போது முஸ்லிம்களை அவமானப்படுத்தும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது.

போலியான பெயரில் I love Islam என்ற பெயரை வைத்துக்கொண்டு ஒரு நாசகாரக் கிருமி முஸ்லிம்களிடையே பிரச்சினை உருவாக்கி கலகத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக முஸ்லிம்களின் புனித தலமான கஃபத்துல்லாஃஹ் மீது ஒரு அந்நியப் பெண்ணை அதில் இருப்பது புகைப்படத்தை எடிட்டிங் செய்திருக்கிறான்.

அதிலுள்ள அந்த அந்நியப் பெண் அறைகுறை ஆடையுடன் கையில் மைக்கை வைத்துக்கொண்டு பாடுவது போன்று இருக்கின்றது. ஒரு photoshop மென்பொருளை வைத்துக்கொண்டு முஸ்லிம்களிடையே கலவரத்தை உருவாக்குவதற்கு எத்தனிக்கும் இந்த நாசகரனுக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர்.

I love Islam என்று இஸ்லாத்துக்கு சாதகமான பெயரை வைத்துக்கொண்டு இவ்வாறு செயற்படுகிறான். எனவே, இதிலுள்ள பேஸ்புக் பயனர்கள் அனைவரும் இந்த பேஸ்புக் பேஜிலிருந்து விலகிக்கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்போது ஏராளமான கருத்துரைகள் (Comments) வந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள்.
source-yarlmuslim