#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

08 நவம்பர், 2011

செல்போனில் (Mobileல்) அதிகநேரம் பேசினால் Danger


mobile_phoneசெல்போனில் அதிகநேரம் பேசினால் மறதி, தூக்கமின்மை, அஜீரணம் ஏற்படும் விஞ்ஞானி சொல்கிறார் ஆய்வுக் குழுவில் சுகாதாரத் துறை சார்பில் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ்.சர்மா கலந்து கொண்டார். அவர் கூறுகையில், ‘‘பல நிபுணர்கள் தாக்கல் செய்த தகவலின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. டெலிபோன் டவர்களின் கதிரியக்க அளவு தொடர்பாக தேசியக் கொள்கை வகுக்கப்படும்.
ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களை விட, இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் அதிக பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதற்கு நம் நாட்டில் நிலவும் வெப்பமான சூழல், உடல் எடை குறைவு, கொழுப்பு சத்து குறைவு போன்றவை காரணமாக
இருக்கின்றன. இதனால் கதிரியக்க அளவு விதிமுறைப்படி தயாரிக்கப்பட்ட செல்போன்களை மட்டுமே நமது நாட்டில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.
செல்போன் மற்றும் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மறதி, தூக்கமின்மை, அஜீரணம் உட்பட பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று மத்திய அரசின் ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது.செல்போன் மற்றும் உயர்கோபுரங்களால் மனித உடலுக்கு ஏற்படும் தீங்குகள் பற்றி ஆராய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அதில் 8 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். சுகாதார அமைச்சகம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு துறை உறுப்பினர் செயலர் ஆகியோர் உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சக பிரதிநிதிகள் இடம்பெற்ற அந்த குழு, தனது ஆய்வு அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது.
செல்போன் பயன்படுத்தும்போது வெளியாகும் கதிர்வீச்சு விஷயத்தில் மனித உடலில் ஊருடுவும் ரேடியோ அலைகளின் அளவுக்கு (ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேடி & எஸ்ஏஆர்) கட்டுப்பாடு உள்ளது. அதைப் பின்பற்றாமல் தயாரிக்கப்படும் மலிவான செல்போன்களை தடை செய்ய வேண்டும் என்று குழு பரிந்துரை செய்துள்ளது.குடியிருப்பு பகுதிகள் அதிகம் கொண்ட இடங்கள், பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள், மருத்துவமனைகள் அருகே அதிக கதிர்வீச்சை வெளியிடக்கூடிய செல்போன் டவர்களை அமைக்கக் கூடாது. இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட எஸ்ஏஆர் அளவு ஒரு கிலோவக்கு 2 வாட் மட்டுமே. சராசரியாக 6 நிமிடங்கள் போனில் பேசினால் வெளியாகும் அளவு இது.
இதைவிட அதிக கதிர்வீச்சு கொண்ட செல்போன்களால் ரேடியோ அலைகள் அதிகளவில் வெளியாகும். எனவே, அனுமதிக்கப்பட்ட அளவை 2 வாட்டில் இருந்து அமெரிக்க தொலைத் தொடர்பு கமிஷன் வரையறுத்துள்ள 1.6 வாட்டாக குறைக்கவும் ஆய்வுக் குழு வலியுறுத்தியுள்ளது.
செல்போன் மற்றும் டவரில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக மனிதர்களுக்கு மறதி, கவனக்குறைவு, ஜீரண உறுப்புகளில் கோளாறு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் குழு எச்சரித்துள்ளது.
மூளை புற்றுநோய் தாக்கலாம்
மும்பை ஐ.ஐ.டி. மின்னணு பொறியியல் துறை பேராசிரியர் கிரிஷ் குமார் கூறுகையில், ‘‘செல்போனில் அதிகநேரம் பேசும் இளம்வயதினருக்கு, மூளை புற்றுநோய் வரும் அபாயம் 400 சதவீதம் அதிகம். குழந்தைகளின் மெல்லிய மண்டை ஓட்டுக்குள் செல்போன்களின் மின்காந்த கதிரியக்கம் ஆழமாக ஊடுருவுகிறது என்றார்.
என்ன பாதிப்புகள்?
செல்போனை நாம் பயன்படுத்தும்போது தலைப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கிறது. மூளைக்கு வரும் ரத்தம் இந்த வெப்பத்தை உடலின் மற்ற பகுதிகளிலும் பரவச் செய்கிறது. இதனால் உடலின் வெப்ப நிலை அதிகரிக்கிறது.
செல்போன் டவரிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சால் தலைவலி, தூக்கமின்மை, மயக்கம், கவனக்குறைவு, காதில் இரைச்சல், ஞாபகசக்தி குறைவு, அஜுரணம், இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்படுகிறது.
குழந்தைகள், வாலிப வயதினர், கர்ப்பிணிகள் செல்போனை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
செல்போனை தலைப்பகுதிக்கு அருகே கொண்டு செல்லாமல், ‘ஹெட் போன்(Ear Phone)’ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சிறந்தது.

நன்றி.கல்வி களஞ்சியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக