#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

30 நவம்பர், 2011

இராமநாதபுரம் தொகுதிச் செய்திகள்





ராமேசுவரம்


ராமேசுவரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் உலக சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் எம்எல்ஏ. ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். ராமேசுவரம் நகராட்சித் தலைவர் அர்ச்சுணன், பள்ளித் தாளாளர் மைக்கேல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சேவியர் ராஜப்பா வரவேற்றார்.

சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க, வீடுகள்தோறும் மரம் வளர்த்து பசுமைப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளியின் இலக்கிய மன்றம், சாரணர் இயக்கம், நுகர்வோர் மாணவர் மன்றம், சாலைப் பாதுகாப்பு இயக்கம், ஜூனியர் ரெட் கிராஸ் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் நூறு சதவீத மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு எம்எல்ஏ பரிசுகளை வழங்கினார்.

உதவி தலைமை ஆசிரியர் சூசை ரத்தினம், பள்ளியின் கிராம கல்விக் குழு தலைவர் அந்தோணிராஜ், கவுன்சிலர்கள் பூபதி, சீனி முகம்மது, த முமுக தலைவர் சலிமுல்லாஹ் கான் மற்றும் ஆசிரியர்கள் செந்தமிழ்நாதன், ஜேம்ஸ் பிரிசில்லா, உடற்கல்வி ஆசிரியர் ஜெரோம் வில்லியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தங்கச்சிமடம்


பாம்பன் பகுதி தங்கச்சிமடம் ஊராட்சியில் கடந்த 22.11.2011 அன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 200 புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நடவடிக்கைக்காக வழங்கப்பட்டது. இதில் இராமநாதபுரம் மாவட்ட டி.எஸ்.பி முனியப்பன் தமுமுக&மமக மாவட்ட, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
-----------------


இராமேஸ்வரம் நகரத்தில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக வந்த புகாரின் அடிப்படையில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா கடந்த 24.11.2011 அன்று திடீர் ஆய்வு செய்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வீட்டின் அருகில் உள்ள கால்வாயை ஆய்வு செய்து, உடனடியாக நகராட்சி அலுவலர்களை அழைத்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

இவ்வாய்வின் போது நகர்மன்றத் தலைவர் அர்ஜுனன், நகராட்சி அதிகாரிகள், மமக நகர்மன்ற உறுப்பினர் சீனி முஹம்மது, மமக மாவட்ட தலைவர் சலிமுல்லாகான் உட்பட தமுமுக மமகவினர் பலர் உடனிருந்தனர்.

-----------------
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கடந்த 24.11.2011 அன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் இராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவர் அர்ஜுனன், துணைத் தலைவர் குணசேகரன், மமக நகர்மன்ற உறுப்பினர் சீனி முஹம்மது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இம்முகாமில் சுகாதாரச் சீர்கேடு, குடிநீர் பிரச்சனை, கால்வாய் அடைப்பு, ரேசன் கார்டு, சாலைவசதி என பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஏராளமான புகார் மனுக்களை சட்டமன்ற உறுப்பினர் பெற்று உடனே முகாமில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகளின் பார்வைக்கும் நடவடிக்கைக்கும் நேரடியாக வழங்கினார்.

அடிப்படை வசதிகள், முதியோர், விதவை, ஊனமுற்றோர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

-----------------

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி ஒன்றியத்தில் கடந்த 23.11.2011 அன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் திருப்புலாணி வட்டார வளர்ச்சி அதிகாரி மணிமேகலை, யூனியன் சேர்மன் ராஜேஸ்வரி மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளரும் தினைக்குளம் பஞ்சாயத்து தலைவருமான முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இம்முகாமில் பெறப்பட்ட ஏராளமான புகார் மனுக்களை முகாமில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகளின் பார்வைக்கும் நடவடிக்கைக்கும் நேரடியாக வழங்கினார். அடிப்படை வசதிகள், முதியோர், விதவை ஊனமுற்றோர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

-----------------
கீழக்கரை நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக கடந்த 25.11.2011 அன்று இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கீழக்கரை நகராட்சி சேர்மன் ரபியதுல் ஃபசரியா நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் செல்வ குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நன்றி.தமுமுக இராமநாதபுரம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக