அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
16 நவம்பர், 2011
Mr மன்மோகன் சிங் அவர்களே இது நியாயமா?
முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவில் விலைவாசி இருக்கிறது. எப்போதும் நம் பிரதமரிடம் இதைப் பற்றி கேட்டால் பல வளர்ந்த நாடுகளை விட நம் நாட்டில்தான் விலைவாசி குறைவு என்பார். இல்லையென்றால் விலைவாசி உயர்கிறது என்றால் நாம் வளர்கிறோம் என்பார். ஒருமுறை இது தற்காலிகம் தான் பணவீக்கம் குறைந்தால் விலைவாசி குறைந்துவிடும் என்பார்.
ஆனால் இம்முறை பதில் வேறு மாதிரி வந்திருக்கிறது. பணவீக்கம் நிலையாக இல்லை, இப்போது இதை கட்டுப்படுத்துவதில் சில காலம் ஆகும் என்கிறார்.
மேலும் விலைவாசி உயர்வைப் பற்றி கூறும்போது அது சந்தை சக்திகளின் கையில் இப்போது மாட்டி இருக்கிறது என்றும் கூறி இருக்கிறார்.
இதோடு இல்லாமல் சில புள்ளி விவரங்களையும் அறிவித்திருக்கிறார். இப்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 முதல் 8 சதவீதம் வரையில் உயர்ந்திருக்கிறது என்றால், நம் தனி நபர் வருமானமும் 6 முதல் 6.5 சதவீதம் வரையில் உயர்ந்திருக்கும் என்கிறார்.
யாருடைய தனி நபர் வருமானத்தை அவர் குறிப்பிடுகிறார்? கார்ப்பரேட் முதலாளிகளின் தனி நபர் வருமானம் கண்டிப்பாக அதிகரித்திருக்கும். ஏழை, நடுத்தர மக்களின் தனி நபர் வருமானம் முன்பை விட குறைந்திருக்கும் என்பதே உண்மை.
மேலும் மானியங்கள் ஒதுக்கீடு தொடர்பான அரசு எடுத்த முடிவு பெட்ரோல் போன்ற எரிபொருள்களின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
எரிபொருட்கள் விலை ஏறினால் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் ஏறும் என்று மக்களும், எதிர்க் கட்சிகளும் போராட்டங்கள் செய்யும் பொது எங்கே போனது இந்த காங்கிரஸ் அரசு. கடந்த வருடம் ஜூன் மாதத்திலிருந்து இன்று வரையில் பதினோரு முறை பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டது பற்றிய எவ்வித உறுத்தலும், இந்த காங்கிரஸ் அரசுக்கு ஏன் இல்லாமல் போனது.
நம் பிரதமர் இப்போது அவர் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு உண்மைகள் சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம், இனி ஒன்றும் செய்ய முடியாது மக்கள் இதற்கெல்லாம் பழகிக் கொள்ளுங்கள் என்கிறாரா? என்ன?
நன்றி.வேடந்தாங்கல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக