சென்னை, நவ.25: சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்திருப்பதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகவெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு இதுவரை இருந்துவந்த உச்சவரம்பை மத்திய அரசு நீக்கியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
இது இந்திய நாட்டின் சில்லறை வியாபாரிகள் நான்கரை கோடி பேரைப் பாதிக்கும் நடவடிக்கையாகும்.
மளிகைப் பொருள்களை பன்னாட்டு நிறுவனங்களும் கொள்முதல் செய்வதற்குத் தடைவிதிக்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக