அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
13 நவம்பர், 2011
கீழக்கரை வரலாற்றில் முதன் முதலாக ஒரு எம்.எல்.ஏ குறை தீர்க்கும் நாள் என ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து இருந்தார்.
கீழக்கரை வரலாற்றில் முதன் முதலாக ஒரு எம்.எல்.ஏ குறை தீர்க்கும் நாள் என ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து அதன் மூலம் மக்கள் பிரச்னைகளை கேட்டு அறிந்து அதற்கான தீர்வையும் பெற்று தர முயற்சித்த எம்.எல்.ஏவுக்கு கீழக்கரை பொது மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் உள்ள அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது .இந்நிகழ்ச்சிக்கு ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ தலைமை வகித்தார். இம்முகாமில் கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை அதிகார் அங்காளரெட்டி,டாக்டர் அசின் ,ராமநாதபுரம் வட்ட வழங்கல் தாசில்தார் செழியன்,மின் வாரியத்துறை போர்மேன் ரிச்சார்ட்,நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன்,காவல்துறை இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,சுகாதாரத்துறை அதிகாரி சரவணன் மற்றும் அதிகாரிகளும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.இதில் பொது மக்கள் தரப்பில் 40க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டது.இதில் பெரும்பாலானவை சுகதார சம்மந்தப்பட்ட புகார்கள் என கூறப்படுகிறது.
இது குறித்து ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ கூறியதாவது, அனைத்து மனுக்களையும் கலெக்டரின் பார்வைக்கு எடுத்து சென்று போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன் என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக