2:223 உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
65:7 தக்க வசதியுடையவர்கள், தம் வசதிக்கேற்ப (இவ்விஷயத்தில்) செலவு செய்து கொள்ளவும்; ஆனால், எவர் மீது அவருடைய உணவு (வசதி) நெருக்கடியாக்கப் பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்து கொள்ளவும்; எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் (மிகையாக செலவு செய்யும் படி) சிரமப்படுத்த மாட்டான்; கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதி சீக்கரத்தில் இலகுவை (சுகத்தை) உண்டாக்கியருள்வான்.
34:39 ““நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்”” என்று (நபியே!) நீர் கூறும்.
அல்லாஹ்வின் பாதையில் நீ செலவழித்த ஒரு பொற்காசு, அடிமையை விடுவிப்பதில் நீ செலவழித்த ஒரு பொற்காசு, ஓர் ஏழைக்கு நீ செலவழித்த ஒரு பொற்காசு, உன் குடும்பத்தாருக்கு நீ செலவழித்த ஒரு பொற்காசு ஆகிய (இந்நான்கு) பொற்காசுகளில் மிகப் பெரும் நற்கூலியைப் பெறும் பொற்காசு உன் குடும்பத்தாருக்கு நீ செலவழித்த பொற்காசுதான். முஸ்லிம்: அபூஹூரைரா(ரலி).
அபூ அப்தில்லாஹ் தவ்பான் பின் புஜ்துது(ரலி) அறிவிக்கிறார்கள், இவர் அபூ அப்திர்ரஹ்மான் என்று அழைக்கப்படுபவர். இவர் அண்ணல் நபி(ஸல்) அவர்களால் உரிமை விடப்பட்டவர். அவர் அறிவிக்கிறார்:
மனிதன் செலவழிக்கும் பொற்காசுகளில் மிக மேலானவை, தன் குடும்பத்தாருக்கு அவன் செலவழிக்கும் பொற்காசு, அல்லாஹ்வின் பாதையில் உள்ள தன் வாகனத்திற்காக அவன் செலவழிக்கும் பொற்காசு, அல்லாஹ்வின் பாதையில் பாடுபடும் தன் தோழர்களுக்காக அவன் செலவழிக்கும் பொற்காசு ஆகியவையாகும். முஸ்லிம்: அபூ அப்தில்லாஹ் தவ்பான் பின் புஜ்துது(ரலி).
அண்ணல் நபி(ஸல்)அவர்களிடம் யா ரஸூலல்லாஹ்! அபூ ஸலமாவின் பிள்ளைகளுக்கு நான் செலவழிப்பதில் எனக்கு நற்கூலி உண்டா? அவர்களை இவ்வாறாக (உணவைத் தேடி அலைபவர்களாக) நான் விட முடியாது. அவர்கள் என் பிள்ளைகள் (முந்திய கணவர் மூலம் நான் பெற்றெடுத்த பிள்ளைகள்)எனக் கூறினேன். அதற்கு அண்ணல் நபி(ஸல்)அவர்கள், ஆம், அப்பிள்ளைகளுக்கு நீ செலவழிப்பதற்காக உமக்கு (அல்லாஹூதஆலாவிடம்) நற்கூலி உண்டு எனப் பகர்ந்தார்கள். புகாரி, முஸ்லிம்: உம்மு ஸலமா(ரலி).
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி நீ செலவழிக்கும் ஒவ்வொரு செலவுக்கும் உமக்கு நற்கூலி கொடுக்கப்படாமல் இல்லை, எந்த அளவிற்கென்றால், உன் மனைவியின் வாயில் நீ ஊட்டும் உணவுக்கவளம் வரை. புகாரி, முஸ்லிம் : ஸஃது பின் அபீ வக்காஸ்(ரலி).
ஒரு மனிதர் தம் குடும்பத்தாருக்காக, ஒரு செலவை நற்கூலியை நாடியவராக செலவழிப்பாரானால், அது அவருக்கு ஸதகாவாகும். (ஸதகாவின் நன்மையை அவர் பெற்றுக் கொள்ளவார்) புகாரி, முஸ்லிம்: அபூ மஸ்வூதில் பத்ரிய்யி (ரலி).
தான் எவர்களுக்கு உணவளிக்க வேண்டுமோ அவர்களுக்கு உணவளிக்காமல் இருப்பது மனிதனுக்கு பாவத்தால் போதுமானது. அபூதாவூது: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி).
மேலான கரம் (கொடுக்கும் கரம்) கீழான கரத்தை (வாங்கும் கரத்தை) விடச் சிறந்தது. (அவ்வாறு வழங்கும் பொழுது) உன் குடும்பத்தாரைக் கொண்டு ஆரம்பிப்பாயாக! தர்மங்களிற் சிறந்தது தன் குடும்பத்தாருக்குத் தேவையானதை ஒதுக்கிக் கொண்டு மீதியை தர்மம் செய்வதாகும். யார் பேணுதலைக் கடைபிக்கிறாரோ அவரை அல்லாஹ் பேணுதல் உடையவராகவே ஆக்கி வைப்பான். யார் பிறரிடம் தேவையாகாது இருக்க விரும்புகிறாரோ அவரை அல்லாஹ் பிறரை விட்டும் தேவையற்றவராக ஆக்குவான். (தன் பரக்கத்துகளை அவருக்கு நிறைவாக வழங்குவான்.) புகாரி: அபூஹூரைரா(ரலி).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக