அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
25 நவம்பர், 2011
ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ மக்கள் குறைகேட்பு!
ராமேசுவரத்தில் நேற்று பொதுமக்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். ஆணையாளர் (பொறுப்பு) ரத்தினவேல், துணை தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். இதேபோல நகரசபை தலைவர் அர்ச்சுனன் அளித்த மனுவில், தெற்கு கரையூர், சேராங்கோட்டை, நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், ஏரகாடு, பொன்னநகர், ராமநாத சாமிநகர் ஆகிய பகுதிகளில் சமுதாயக்கூடம் கட்டவும், எம்.ஆர்.டி நகரில் கலையரங்கம் கட்டவும், கோவில் 4 ரதவீதிகளில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கவும், அரசு மருத்துவமனை பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கவும், சின்னவம்பிள்ளை தெரு முதல், ராமதீர்த்தம் தெற்கு வரை சிமெண்டு சாலை அமைக்கவும் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.1Ð கோடி ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
நன்றி.இந்நேரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக