.இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 16 பேர் கொண்ட மினவர்கள் சவூதி அரேபியா ஜிஸான் என்ற பகுதியில் மீன்பிடி பணிக்கு வந்துள்ளனர் அவர்கள் தனது ஸ்பான்சரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பளம் மற்றும் உணவு தங்குமிடம் போன்ற வசதிகளின்றி மிகவும் கஸ்டப்படுவதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை தொடர்பு கொண்டு உதவி கோரி கோரிக்கை வைத்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் உத்தரவின் பேரில் ரியாத் மத்திய மண்டல தமுமுக உடனடியாக களத்தில் இறங்கியது தூதரகத்தின் துணையுடன் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டு இப்போது அவர்கள் பணிக்குச் செல்கின்றனர்.ரியாத் மத்திய மண்டல பொதுச் செயலாளர் ஹூஸைன்கனியிடம் தொலைபேசியில் கண்ணீர் மல்க நன்றி கூறினர்
நன்றி.மக்கள் மனசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக