#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

04 ஜனவரி, 2012

உ.பி.,யில் காங்கிரசுக்கு ஆதரவு இல்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கருத்து


"ரங்கநாத்மிஸ்ரா கமிஷன் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்திருந்தது. ஆனால், உத்திர பிரதேச சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்படபோவது முஸ்லிம்கள்தான். எனவே ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரசை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம்,' என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.
இது குறித்து, நேற்று டில்லியில் நிருபர்களிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பொதுச் செயலர் பாத்திமா முஜாபர் கூறியதாவது: உத்திர பிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிலைப்பாடு குறித்து இறுதி செய்வதற்காக கடந்த வாரம் உ.பி.,யில் உள்ள மீரட் நகரில் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய சமூகமாக முஸ்லிம் சமுதாயம் திகழ்கிறது. பல ஆண்டுகளாகவே இட ஒதுக்கீடு வழங்கவேண்டுமென்று கோரிக்கை இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை ஆராய்ந்து அறிக்கை அளித்த ரங்கநாத் மிஸ்ரா கமிஷனே கூட சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். அதில் முஸ்லிம்களுக்கு மட்டுமே 10 சதவீதம் வரை வழங்கிட பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால், சில வாரங்களுக்கு முன் மத்திய அரசாங்கம் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத இட ஒதுக்கீட்டை கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வழங்கிட இருப்பதாக அறிவிப்பு செய்தது. இது முஸ்லிம் மக்களை ஏமாற்றும் செயல் இது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்குள்ளேயே உள் ஒதுக்கீடாக 4.5 சதவீதம் என்பது மட்டுமல்ல, சிறுபான்மையினர் அனைவருமே இதற்குள்ளேயே பங்குபோட்டுக் கொள்ள வேண்டும். இது ஏற்கனவே உள்ள கொஞ்ச நஞ்ச வாய்ப்புகளையும் கூட பறிக்கும் செயல். உத்திர பிரதேச சட்டசபைத் தேர்தலுக்காக முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்காலத்தோடு காங்கிரஸ் விளையாடுகிறது. காங்கிரசின் இந்த மோசடி வித்தையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்காது. எனவே, வரும் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரசை ஒருபோதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரிக்காது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கூட்டணி கட்சிகளில் ஒன்றாக எங்கள் கட்சியின் பெயரை காங்கிரஸ் பயன்படுத்துகிறது. அந்த கூட்டணியில் இடம்பெற்று அமைச்சராக உள்ள இ.அகமது அதிகாரப்பூர்வமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர் கேரள மாநில யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவராகவே கருத வேண்டும். தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாத்திமா முஜாபர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக