அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
30 ஜனவரி, 2012
தாழ்த்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒன்று இணைந்தால் மாபெறும் அரசியல் சக்தி,திருமா
பழனி அருகே ஆயக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசினார்.
கூட்டத்தில் மேலும் அவர், பெரியார் பிறந்த மண்ணில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் அமைச்சர் ஆக முடியவில்லை. ஆனால் பெரியார் பிறக்காத மண்ணில் பிறந்த மாயாவதி உத்திரப்பிரதேச மாநிலத்தில் 4 முறை முதல் அமைச்சர் ஆகி உள்ளார்.
தாழ்த்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய மக்கள் ஒன்றிணைந்து அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் அதிகமாக வசிக்கும் தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோரும், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் இஸ்லாமியர்களும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்துவது இல்லை. நமக்கு ஆட்சி அதிகாரத்தை பற்றிய புரிதல் இல்லை. அதிகாரமும் ஒரு சொத்து என்று நினைப்பது இல்லை.
தமிழகத்தில் ஒரு மாற்றம் தேவை. நாம் அரசியல் சக்தியாக எழுச்சி பெற வேண்டும். அரசியல் சக்தியாக உருவெடுத்து ஜனநாயக வாக்குரிமை மூலமாக ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்பது அம்பேத்காரின் கனவு. இந்த கனவு உத்திரப் பிரதேச மாநிலத்தில் நனவாகி உள்ளது. இதே போன்று இஸ்லாமிய மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஒன்றிணைந்து அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தைப் பெற வேண்டும். இவ்வாறு தொல். திருமாவளவன் பேசினார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக