#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

02 ஜனவரி, 2012

மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக புலம்பித் திரியும் பரிதாப நிலை கடலூரில்



கடலூர்: தானே புயலால் சீரழிந்து போயுள்ள கடலூர் மாவட்டத்தில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ. 60க்கு விற்கப்படுவதால் வாங்க முடியாமல் ஏழைகள் பரிதவித்துப் போயுள்ளனர். அதை விடக் கொடுமையாக மெழுகுவர்த்தி கூட கிடைக்காத நிலை காணப்படுகிறது.
புயலால் சிதிலமாகியுள்ள கடலூரில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். அரசு சார்பில் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கூறினாலும் உண்மை நிலை நேர் மாறாக உள்ளது.

மின்சாரம் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை, அதைக்கேட்டு போராட்டம் நடத்தினால் தடியடி கைது என்று போலீஸார் நடந்து கொள்கின்றனர், பால் கிடைக்கவில்லை கிடைத்தாலும் அநியாய விலைக்கு விற்கிறார்கள், மெழுகுவர்த்தி கூட கிடைக்காத நிலை. அதை விடக் கொடுமையாக ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 60 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக புலம்பித் திரியும் பரிதாப நிலை காணப்படுகிறது.
நல்லெண்ணெய் அல்லது வேறு எண்ணெய் கொண்டு விளக்குகளை எரிய வைக்க வேண்டிய நிலை.
செல்போன் டவர்கள் சரிந்து போய் விட்டதால் சிக்னல் பிரச்சினை. இதனால் செல்போனில் பேச முடியவில்லை. லேன்ட் லைன் போன்களும் கூட செய்லபடவில்லை. மின்சாரம் இல்லாததால் செல்போன்களை சார்ஜ் செய்ய முடியவில்லை.
இந்த மாவட்டத்தில்தான் நெய்வேலி மின் நிலையம் உள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இங்கிருந்துதான் மின்சாரம் போகிறது, ஆனால் தனது மாவட்டத்திற்கான மின்சாரத்தை சப்ளை செய்ய முடியாத நிலையில் நெய்வேலி உள்ளது. காரணம் மின் கம்பங்கள் அனைத்தும் சாய்ந்து கிடப்பதால்.
சிதம்பரம் நகரத்தில் மட்டும் நேற்று ஒருசில பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் கிராம பகுதிகள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு மின்சாரம் வருவதற்கு 1 வாரத்துக்கு மேல் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயலால் சேதம் அடைந்த வீடுகளை சீர் செய்வதற்கும் ஆட்கள் கிடைக்கவில்லை. ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், பிளாஸ்டிக் ஷீட் போன்றவையும் கடைகளில் கிடைக்கவில்லை. பல இடங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் கீழே விழுந்து நொறுங்கிவிட்டன. அவையும் கடைகளில் கிடைக்கவில்

 நன்றி.மக்கள் மனசு 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக