#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

12 ஜனவரி, 2012

இது ஒரு தேசிய அவமானச் சின்னம்.!!!

உலகிலேயே போதிய ஊட்டச்சத்து இல்லாக் குழந்தைகளில் 3-ல் ஒரு குழந்தை இந்தியாவை சேந்ததாக  HUNGaMA (Hunger and Malnutrition) என்ற அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறது.

இது நமது நாட்டிற்கு பெரிய அவமானமாகும், இது ஒரு தேசிய அவமானச் சின்னம் என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
(அய்யா பிரதமர் அய்யா.. வெறும் வார்த்தைகளும், அறிக்கைகளும் இத்தகைய குறைகளை போக்காது என்பது உங்களுக்கும் தெரியும். )



நாட்டிலுள்ள உள்ள மிகவும் கீழ் நிலையிலிருக்கிற 9 மாநிலங்களில் நூற்றி பன்னிரண்டு மாவட்டங்களில் 73 ஆயிரம் வீடுகளில் ஆய்வு செய்து தனது அறிக்கையை தயார் செய்திருக்கிறது HUNGaMA என்ற அமைப்பு. 

எத்தனை ஆய்வறிக்கை தயார் செய்தாலும், எத்தனை திட்டங்கள் வகுத்தாலும், கீழ் நிலையிலுள்ள ஒவ்வொரு குடிமகனையும், பாமரனையும், திட்டங்கள் முழுமையாக சென்றடைகிறதா என்பதை கண்காணிப்பதில் எந்த ஒரு அரசும் தவறிவிடுகிறது என்பதுதான் உண்மை.
இதனால்தான் நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவதாக இல்லை. (இப்படி முழுமையாக வறுமையை ஒழித்துவிட்டால் இத்தகைய அரசியல் வாதிகளுக்கு, வாய் சவடால்களையும், அறிக்கைகளையும், வாக்குறுதிகளையும் கொடுத்து ஓட்டு வாங்க முடியாதே..!!)



ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தை
(இந்த மாதிரியான குழந்தை அரசு அதிகாரி வீட்டிலோ, அல்லது அரசியல்வாதிகளின் வீட்டிலோ பிறப்பதற்கு வாய்ப்பில்லை. கடும் ஏழ்மை நிலையில் பாதிக்கப்பட்ட, போதிய ஊட்டம் கிடைக்காமல் பிறந்த குழந்தை.. )

ஒவ்வொரு குழந்தை நலனிலும் அக்கறைக் காட்டக்கூடிய திட்டங்களைத் தீட்டி, எந்த பாகுபாடில்லாமல், எந்த ஒரு சுயநலனும் இல்லாமல், திட்டத்தை கொண்டுபோய் சேர்ப்பதில் முழு அக்கறையுடன் அரசு அதிகாரிகளும், அலுவலர்களும், பணியாளர்களும் செயல்பட்டாலொழிய இத்தகைய குறைகளை களைவது என்பது குதிரை கொம்பே..!!

அரசுப் பணியிலுள்ளவர்கள் யாரேனும் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர்கள் என்று உண்டா..?

எங்கு பார்த்தாலும் இலஞ்சம், ஊழல்..!!

உயர் அதிகாரிகள் முதல், கடை நிலை ஊழியன் வரை கை நீட்டி , கூசாமல் மற்றவர்களின் பணத்தை , பல்லிளித்துக்கொண்டு வாங்கிக்கொள்கிறார்கள். அவர்கள் வாங்கும் அந்த பணத்தில் ஏழை மக்களின் கண்ணீரும், வியர்வையும், அவர்களின் சாபமும் இருக்கிறது என்பதை இத்தகையவர்கள் அறிவார்களா? என்றேனும் எண்ணிப் பார்த்திருப்பார்களா? 

என்ன ஒரு துணிவு..! என்ன ஒரு நெஞ்சழுத்தம்..! இவர்களுக்கு இருந்தால் இப்படி செய்வார்கள்.. ? யார் கொடுத்த இடம்.. ?எப்படி இவர்களுக்கு இந்த தைரியம் வந்தது..? எப்போதாவது எங்காவது ஒரு இப்படிப்பட்ட தவறை செய்த காலம் போய்.. இப்போது பெரும்பாலும் இலஞ்சம் கொடுத்தால் மட்டுமே அரசு சார்ந்த பணிகளை முடித்துக்கொள்ளலாம் நிலை வந்துவிட்டது..இதை ஒரு வாடிக்கையாகவே மாற்றிவிட்டார்கள்.

இலஞ்சம் வாங்குவதிலும் பல நூதன முறைகள் கையாள்கிறார்கள். ஒரு அரசு உயர் அதிகாரி என்றால், அவருக்கு கீழ் இருக்கும் உதவியாளரையோ, அவருக்கு சார்புடைய ஏதாவது ஒரு பணியாளரையோ நியமித்துக்கொள்கிறார். எதற்கு? அரசு நலத்திட்ட பணிகளை செய்து முடிக்கவா? இல்லை இலஞ்சம் வாங்குவதற்காகவே.. இவர்கள் இலஞ்சம் வாங்குவதற்குரிய வழிமுறைகளை சிந்திப்பதற்கு எடுத்துக்கொள்ளும் , காலத்தையும், சிந்தனையையும், திட்டப்பணிகளை செயல்படுத்துவதில் காட்டினால் நிச்சயம் நாடு என்றோ முன்னேறியிருக்கும்.

இந்தியா வல்லரசாகியிருக்கும். 

அப்பாவி மக்களும் , தங்களின் பணி முடிய வேண்டுமே.. என்ற எதிர்பார்ப்பில் , நீண்ட நாட்கள் நடக்க வேண்டுமே, அலைகழிப்புகளை நீக்க, தங்களால் முடிந்ததை அப்போது கொடுக்கிறார்கள்.. இல்லை கொடுக்க வைக்கப்படுகிறார்கள் என்பது உண்மை.(இவர்களும் சளைத்தவர்கள் அல்ல.. இவர்களுக்கு அடுத்த பதிவில் இருக்கிறது ஒரு பெருஞ்சூடு..)

இலஞ்சம் கேட்கிறார்கள் என்று புகார் செய்யப்போனால், நடவடிக்கை எடுக்க அங்கும் இலஞ்சம் கேட்கிறார்கள்.. இப்படி இலஞ்சம் கேட்கிறார்களே என்று நீதி  மன்றம் செல்ல்லாமே என்றால் அங்கும் இலஞ்சம கேட்கிறார்கள். இப்படி சங்கிலித்தொடராக எங்கு பார்த்தாலும் இலஞ்சம், ஊழல் மலிந்துகிடக்கும் நாட்டில், குழந்தைகள் மட்டுமா ஊட்டச்சத்து குறைவாக உள்ளார்கள்.. நம் நாடும் இப்படித்தான் ஊட்டத்ச்சத்து இல்லாமல், ஊழலால் புரையோடி போய் கிடக்கிறது.. 

அதில் புழுக்களாய் நெளிந்து, தின்று கொழுத்து நாட்டையே நாற அடித்துக்கொண்டிருக்கிருக்கும் இத்தகையவர்கள் இருக்கும் வரை , கீழ் மட்டத்திலுள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடென்ன, ?மற்றவைகளும், முன்னேற்றமும் கீழ்மட்டத்திலேயே இருந்துகொண்டிருக்கும்..!!!!

ஆக எந்த ஒரு செயலானாலும், திட்டமானாலும் முழுமையாக செயல்படுத்துவதற்குரிய அனைத்து தகுதிகளும், திறமைகளும் அரசு அதிகாருகளும், அலவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் மட்டமே உரியது என்பதை முழுமையாக அறிந்து சேவை மனப்பான்மையுடன் அவர்கள் செயல்பட்டாலொழிய இத்தகைய குறைபாடுகளை நீக்குவது என்பது கடினமே.!!

ஒரு சில நல்ல அரசு அதிகாரிகளும், அலுவலர்களும், பணியாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இலைமறை காயாக.. இவர்களுக்கு இப்பதிவு பொருந்தாது.. எவன் இலஞ்சம் வாங்குகிறானோ, எவன் ஊழல் செய்கிறானோ, எவன் சட்டத்துக்கு புறம்பான வேலைகளில் ஈடுபடுகிறானோ, அவனுக்குரிய , அவர்களுக்குரிய பதிவுதான் இது.. நன்றி நண்பர்களே.. பதிவைப்பற்றி தங்களுடைய எண்ணங்களையும், விவாதங்களையும் கருத்துரைபெட்டியின் வாயிலாக முன் வைக்கலாம்.. 


நன்றி.தங்கம் பழனி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக