அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
06 ஜனவரி, 2012
அமெரிக்காவின் போர்க் கப்பல் மீண்டும் பாரசீக வளைகுடா பக்கம் வரக் கூடாது.ஈரான் எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணை வழியாக ஓமன் வளைகுடாவுக்குச் சென்றுள்ள அமெரிக்காவின் போர்க் கப்பல் மீண்டும் பாரசீக வளைகுடா பக்கம் வரக் கூடாது என ஈரான் எச்சரிக்கை
பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடைப்பட்ட குறுகலான கடல்வழிப் பாதை ஹோர்முஸ் நீரிணை என அழைக்கப்படுகிறது. இதன் வழியாக உலகின் 20 சதவீத எண்ணெய்க் கப்பல்கள் சென்று வருகின்றன.
ஈரான் மீது அமெரிக்கா சமீபத்தில் அடுத்தடுத்து பொருளாதாரத் தடைகளை விதித்ததை அடுத்து இந்த நீரிணையை மூடப் போவதாக ஈரான் மிரட்டியது. தொடர்ந்து அப்பகுதியில் கடந்த 10 நாட்களாக ஈரானின் கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டது.
இந்த பயிற்சியின் போது தரையில் இருந்து கடலில் உள்ள இலக்கைத் தாக்கும் காதர் ஏவுகணை, குறுகிய தூரம் சென்று தாக்கும் நாசர் ஏவுகணை, தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் நூர் ஏவுகணை ஆகிய மூன்று ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக ஈரான் அறிவித்தது. அதேபோல் அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் அணு எரிபொருள் கம்பிகளையும், உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் தயாரித்து விட்டதாகத் தெரிவித்தது.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் போர் பயிற்சி மேற்கொள்வதாக தெரியவந்தவுடன் பாரசீக வளைகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் யு.எஸ்.எஸ்.ஜான் சி.ஸ்டென்னிஸ் என்ற போர் விமானந்தாங்கிக் கப்பல், ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து ஓமன் வளைகுடாவுக்குச் சென்று விட்டது.
பஹ்ரைன் நாட்டில் அமெரிக்கா தனது ஐந்தாவது கடற்படைத் தளத்தை வைத்துள்ளது. அங்கிருந்தபடி வாரம் அல்லது மாதம் என்ற சுழற்சி முறையில் பாரசீக வளைகுடாவில் அமெரிக்கப் போர்க் கப்பல் ரோந்து மேற்கொள்வது வழக்கம். அதன் படி தான் ஸ்டென்னிஸ் போர்க் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்தது.
ஈரான் கடற்படை தனது 10 நாட்கள் போர்ப் பயிற்சியை முடித்துக் கொண்ட பின் அந்நாட்டு இராணுவ உயர் அதிகாரி அடாவுல்லா சலேஹி நேற்று விடுத்த அறிக்கையில், இந்த பயிற்சி காரணமாகத் தான் அமெரிக்க கப்பல் நீரிணையைக் கடந்து சென்றது. இனிமேல் அந்தக் கப்பல் பாரசீக வளைகுடா பக்கம் வரக் கூடாது. இதுகுறித்து அமெரிக்காவுக்கு ஈரான் அறிவுரை, பரிந்துரை மற்றும் எச்சரிக்கை விடுக்கிறது. ஏனெனில் மீண்டும் மீண்டும் இதுகுறித்து ஈரான் எச்சரிக்கை விடுக்காது என்றார்.
நன்றி.மக்கள் மனசு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக