அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
26 ஜனவரி, 2012
கோவை பள்ளிவாசல் மீது கல்வீச்சு தமுமுக மாவட்ட துணைத்தலைவர் கார் கண்ணாடியையும் கல்லால் தாக்கி உடைப்பு பதட்டம்
கோவை பள்ளிவாசல் மீது கல்வீச்சு தமுமுக மாவட்ட துணைத்தலைவர் கார் கண்ணாடியையும் கல்லால் தாக்கி உடைப்பு பதட்டம்.
கோவை குனியமுத்தூர் மூவேந்தர் நகர் பகுதியில் தாஜீல் இஸ்லாம் ஹனிபி சுன்னத் ஜமாத் கிளை பள்ளிவாசல் உள்ளது.
நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் பள்ளிவாசல் முன்புறம் உள்ள ஜன்னல் கண்ணாடியை கல்வீசி தாக்கினர். பள்ளிவாசலில் தங்கியிருந்த மோதினார் நூர்முகமது சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது சிலர் அங்கிருந்து ஒடியுள்ளனர்.
பள்ளிவாசல் அருகே தமுமுக மாவட்ட துணைத்தலைவர் ரபீக் வீடு உள்ளது. அவரது காரைவீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பள்ளிவாசலில் தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் கார் கண்ணாடியையும் கல்லால் தாக்கி உடைத்துள்ளனர்.தகவல் அறிந்ததும் .தமுமுக மாநில செயலாளர் கோவை உம்மர் தலைமையில் தமுமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பள்ளிவாசல் முன்பு திரண்டனர் தகவல்அறிந்ததும் போலிஸ் கமிஷனர் சுந்தரமுர்த்தி, துணைக்கமிஷனர் ஹேமா கருணாகரன், உதவிகமிஷனர் முத்தரசு, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு
வந்து விசாரித்தனர். வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
இதே பள்ளிவாசலில் 2009 ம் ஆண்டு இதுபோல் ஜன்னல் கண்ணாடியை உடைத்துனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக