அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
29 ஜூன், 2012
புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் காரட்
பொன்நகை அணிபவர்களின் உடல் அந்த நகையோடு சேர்ந்து பளபளப்பாக மின்னுவதைப்போல தினம் ஒரு காரட் உண்பவர்களின் உடலும் தகதக வென மின்னும். இதனாலேயே தாவரத் தங்கம் என்ற அடைமொழியோடு காரட் அழைக்கப்படுகிறது.
காரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்
கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் காரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது.
குஜராத்தில் சுவரொட்டி போர் : நரேந்திரமோடியை கொடுமைக்கார மாமியாராக
குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடிக்கும், மாநிலபாரதீய ஜனதா முன்னாள் பொதுச் செயலாளர் சஞ்சய் ஜோஷிக்கும் பகை இருந்து வருகிறது. குஜராத்தில் மோடியை பிடிக்காதவர்கள் சஞ்சய் ஜோஷி ஆதரவாளர்களாக மாறி மோடிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் சஞ்சய் ஜோஷி ஆதரவாளர்கள் குஜராத்தின் முக்கிய நகரங்களிலும், டெல்லியிலும் மோடிக்கு எதிராக பேனர் மற்றும் சுவரொட்டி வைத்திருந்தனர். அதில், குறுகிய மனப்பான்மை உடையவர் உயர்ந்த பதவிக்கு (பிரதமர்) வர முடியாது என்று மோடியை மறைமுகமாக தாக்கி இருந்தனர்.
28 ஜூன், 2012
இணையதளங்களை தவறாக பயன்படுத்தும் சிறுவர்கள்!
உலக அளவில் இணைய தளத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடு இன்றி இப்போது அனைவரும் இந்த இணைய தளத்தைப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியே.
ஆனால் எந்த அளவிற்கு இணைய தளத்தின் பயன்பாடு அதிகரிக்கிறதோ அந்த அளவிற்கு இணைய தளத்தைத் தவறாக பயன்படுத்துவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
27 ஜூன், 2012
உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்
உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் கத்தார் முதலிடத்தை பிடித்துள்ளது.இது குறித்து சர்வே ஒன்றை அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிகை கருத்து கணிப்பு நடத்தியது. இதில் கத்தார்,துபாய், குவைத் உட்பட 15 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. இதில் 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு தனி நபரின் ஆண்டு வருமானம் சுமார் 88 ஆயிரம் அமெரிக்கக டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது. அதற்குஅடுத்த படியாக ஐக்கிய அரபு குடியரசு 47 ஆயிரத்து 500 அமெரிக்க
இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..? (China Tissue Factory - Photo Gallery)
பாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம், வீடு, டாக்சி, பஸ், ரெஸ்டாரன்ட், மஸ்ஜித்... என எங்கே போனாலும், அங்கே ஒரு உடைத்த டிஷ்யூ பாக்ஸ் வைத்து இருக்கிறார்கள். பொதுச்சேவை..! நாம் அதில் இருந்து டிஷ்யூக்களை வேண்டியமட்டும் உருவிக்கொள்ளலாம்..!
பொதுவாகவே... வியர்வை துடைக்க, முகம்-கை கழுவி (மஸ்ஜிதுகளில் ஒழு செய்து) விட்டு துடைக்க அப்புறம் முக்கியமாக சளி பிடித்து தும்மல் போட்டுக்கொண்டு இருக்கும்போது சுகாதாரமாகவும், சுத்தமாகவும், அசூசை இல்லாமலும்... 'துடைத்டோமா.. வீசிநோமா.. சென்றோமா..' என்று மிகவும் 'டீசண்டான மேட்டராக' மக்களுக்கு உபயோகப்படுவது... கைக்குட்டையை விட எல்லா விதத்திலும் டிஷ்யூ பேப்பர்தான்.
ஆஸ்திரேலியா அருகே அகதிகள் படகு கடலில் மூழ்கியது: 150 பேர் கதி என்ன?
இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வந்து தஞ்சம் அடைகின்றனர்.
இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் ஒரு அகதிகள் படகு பயணம் செய்து கொண்டிருந்தது. அதில் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். இந்தோனேசியாவுக்கும், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கும் இடையே வந்தபோது அந்த படகு கடலில் மூழ்கியது.
இலட்சத்தில் ஒருவர் - ஜெய்னுல் ஆபிதீன்
விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது. கூடவே காற்றும். சாலை எல்லாம் தண்ணீர். சாலை என்றதும் பெரிய நகரம் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும். அதனால் தெரு என்று சொல்லலாம். சிறு சிறு தெருக்கள் உள்ள, வசதிகள் மிகவும் குறைவான, பங்களாதேஷ் நாட்டின் மைமென்சிங் மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏதோ ஒரு கிராமம்.
மரணத்துடன் இறுதிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் தம் தந்தையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார் மகன் ஜெய்னுல் ஆபிதீன்.
26 ஜூன், 2012
மூன்று விடயங்களில் மிகப் பெரிய பொய்யன்:
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
மஸ்ரூக் இப்னு அஜ்த (ரஹ்) அறிவித்தார், நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் “அன்னையே முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ் – விண்ணுலகப் பயணத்தின்போது நேரில்) பார்த்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்துவிட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின?) அவற்றை உங்களிடம் தெரிவிக்கிறவர் பொய்யுரைத்துவிட்டார்.
24 ஜூன், 2012
ஓர் வபாத் செய்தி
கொள்ளுமேடு ....நமதூர் கூபாத்தெருவிலிருக்கும் ரபிக்,மற்றும் முஹம்மது தாரிக் இவர்களின் தகப்பனார் டி கடை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இன்று மாலை வபாத் ஆனார்கள்...
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என. கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
23 ஜூன், 2012
ஜே.எஸ். ரிபாயி அவர்களின் தாயார் வபாத் ஆனார்கள்
தமுமுக - மமக வின் மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்களின் தாயார் இன்று மேலப்பாளையத்தில் வபாத் ஆனார்கள்....
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....
அவர்களின் ஜனாஸா நாளை (ஜூன் 24) காலை 8.30 மணிக்கு மேலப்பாளையத்தில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வெற்றிக்கு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்....
21 ஜூன், 2012
உங்களை கொல்ல வேண்டாம்
1) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
2) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் ஆயுளின் எட்டு நிமிடங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
3) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
2) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் ஆயுளின் எட்டு நிமிடங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
3) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
துணை ஜனாதிபதியாக ஹமீத் அன்சாரி தொடர, பா.ஜ.க. துணை புரியுமா?
டாக்டர் அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதி பொறுப்புக்கு கொண்டு வர, கடும் முயற்சிகள் மேற்கொண்ட பா.ஜ.க, தற்போதைய துணை ஜனாதிபதி, ஹமீத் அன்சாரி அவர்கள் தொடர்ந்து இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட துணை புரியுமா?
1937ம் ஆண்டு, கொல்கத்தாவில் பிறந்த, முஹம்மத் ஹாமித் அன்சாரி, உத்தர பிரதேசம் காசிப்பூர், முதுபெரும் காங்கிரஸ் தலைவர் முக்தார் அஹ்மத் அன்சாரியின் பேரனாவார். சிம்லாவில் "இரட்டை டாக்டர் பட்டம்" பெற்ற ஹமீத் அன்சாரி, பிறகு கொல்கத்தா
இளமையில் சிறைக்கு சென்றவர் முதுமையிலும் போலீஸ் காவலில் சிகிச்சை பெறும் அவலம்
ஹைதராபாத் : பாபர் மசூதி இடிப்புக்கு இரண்டாண்டுகளுக்கு முன், 1990 டிசம்பர் 8 முதல் 12 ந்தேதி வரை, மசூதியை இடிக்க தூண்டும் முகமாக, ஹைதராபாத்தில் கலவரத்தை நிகழ்த்தி 200 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
அப்போது போலீசாருடன் மோதியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர், அப்துல் கதீர். 29 வயது வாலிபராக கைது செய்யப்பட்ட அவர், 14 ஆண்டுகள் கழித்து, கடந்த 2004 ம் ஆண்டுமுதல் முறையாக, 30 நாட்கள் பரோலில் வெளியே வந்த அவர், பல முஸ்லிம்
ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தை கண்டு ரசிக்கும் விண்வெளி வீரர்கள்
விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன வீரர்கள் ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் பார்க்கின்றனர்.
விண்வெளியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகள் இணைந்து விண்ணில் ஆய்வுக்கூடத்தை அமைத்துள்ளன.
|
20 ஜூன், 2012
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி இருக்கக் கூடாது: நிதீஷ்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராக நரேந்திர மோடி இருக்கக் கூடாது என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மறைமுகமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டில் மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக சார்பில் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக |
19 ஜூன், 2012
மருத்துவர்கள் நியமனத்தில் பச்சை துரோகமா?
தமிழக அரசு மருத்துவர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு பச்சை துரோகம் செய்ததா? - பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக தற்காலிகமாக நியமனம் செய்த மருத்துவர்களில் ஒருவர் கூட முஸ்லிம இல்லை என்று முதலில் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மைதீனும் அதன் பின்னர் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களும் அறிக்கை வெளியி்ட்டனர். இவர்களை அடிபிசகாமல் பின்பற்றி சமுதாயத்தில் பொய்யை மூலதனமாக கொண்டு இயங்கும் ஒரு தறுதலை அமைப்பு போராட்டம் கூட நடத்தியது. தமிழக அரசு சமீபத்தில் நியமனம் செய்த தற்காலிக மருத்துவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பது உண்மை தானா என்பதை ஆய்வுச் செய்தோம்.
09 ஜூன், 2012
அதிகமா மேக்கப் போடுறீங்களா? உங்க சருமத்துக்கு ஆபத்து !
இயற்கை அழகை கூடுதலாக அழகு படுத்துகிறேன் என்று கூறி இன்றைக்கு சந்தையில் விற்கும் எண்ணற்ற ரசாயன அழகு சாதன பொருட்களை வாங்கி குவிக்கின்றனர் இளைய தலைமுறைப் பெண்கள். கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு முதல் விரல் நகங்களுக்கு போடும் நெயில்பாலீஸ் வரை அத்தனையும் ரசாயனம்தான். இந்த அழகு சாதனப் பொருட்களினால் ஆபத்துதான் அதிகம் இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
குழந்தைகள் உயரமாக வளர ஆசையா? உளுந்து தைலம் உதவும்!
குழந்தைகள் நன்கு சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக, உயரமாக வளர ஆசைப்படுகிறீர்களா? அப்படி குழந்தைகள் ஆரோக்கியமாக வளர நாம் சிறு வயதிலிருந்தே குழந்தைகளை கவனிக்கும் முறையிலேயே உள்ளது என்று சித்த மருத்துவர் வேலாயுதம் கூறுகிறார். மேலும் அவர் குழந்தைகளின் உயரம் ஒரு சில செயல்களை செய்யாததால் இரத்த ஓட்டமானது சரியாக பாயாததால் உயரமானது தடைபடுகிறது என்றும் கூறுகிறார்.
07 ஜூன், 2012
முஸ்லிம் பெண் பருவமடைந்தால் 15 வயதில் விரும்பியவரை மணக்கலாம் , உயர் நீதிமன்றம்
பருமடைந்திருந்தால் முஸ்லிம் பெண்கள் 15 வயதில் தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.16 வயது மகளை பையன் வீட்டார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டதிச் சென்று க்டடாயத் திருமணம் செய்து வைத்ததாகவும், தங்கள் மகளை தங்களுடனேயே அனுப்பி வைக்குமாறும் கோரி அவரது பெற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
புற்றுநோயை குணமாக்கும் காட்டு ஆத்தாப்பழம்
புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.
05 ஜூன், 2012
மேலப்பாளையத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி தமுமுக - மமக முற்றுகை போராட்டம்
மேலப்பாளையம் ராஜா நகர் (ரெட்டியார்பட்டி ரோடு) ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பங்களுடன் வசித்து வருகிறார்கள். இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளின் பேருந்து நிறுத்தமும் உள்ளது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான மாணவிகள், காலையிலும், மாலையிலும் சென்று வருகிறார்கள்.
உ.பி கலவரம்:2014 மக்களவை தேர்தலில் முஸ்லிம்கள் மாத்தி யோசிக்கவேண்டிய சூழல் உருவாகும் – சமாஜ்வாதிக்கு டெல்லி இமாம் எச்சரிக்கை!
புதுடெல்லி:2014 மக்களவை தேர்தலில் முஸ்லிம்கள் மாத்தி யோசிக்க வேண்டிய சூழல் உருவாகும் என்று டெல்லி ஷாஹி இமாம் செய்யத் புகாரி உ.பியை ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உ.பி கலவரத்தின் பின்னணியில் சமாஜ்வாதி கட்சி தலைவர்!
கோஸிகாலான்(உ.பி):உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கோஸிகாலான் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்தின் பின்னணியில் பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுடன் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள சமாஜ்வாதி கட்சியின் மாவட்டத் தலைவர் கோவிந்த் சிங்கும் செயல்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்
எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடியாக மாபெரும் விளைவை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என இஸ்ரேல், மேற்குலக நாடுகள் சந்தேகம் கொண்டுள்ளதுடன், பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. |
சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு பெரும் வெற்றி
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பல புதிய சாதனைகளை நிகழ்த்த காரணமாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. |
மோடி மீதான ஊழல் புகார்: விசாரணை தொடங்கியது
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி எம்.பி. ஷா தலைமையிலான ஆணையம் தனது விசாரணையை திங்கள்கிழமை தொடங்கியது. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)