அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
27 ஜூன், 2012
இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..? (China Tissue Factory - Photo Gallery)
பாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம், வீடு, டாக்சி, பஸ், ரெஸ்டாரன்ட், மஸ்ஜித்... என எங்கே போனாலும், அங்கே ஒரு உடைத்த டிஷ்யூ பாக்ஸ் வைத்து இருக்கிறார்கள். பொதுச்சேவை..! நாம் அதில் இருந்து டிஷ்யூக்களை வேண்டியமட்டும் உருவிக்கொள்ளலாம்..!
பொதுவாகவே... வியர்வை துடைக்க, முகம்-கை கழுவி (மஸ்ஜிதுகளில் ஒழு செய்து) விட்டு துடைக்க அப்புறம் முக்கியமாக சளி பிடித்து தும்மல் போட்டுக்கொண்டு இருக்கும்போது சுகாதாரமாகவும், சுத்தமாகவும், அசூசை இல்லாமலும்... 'துடைத்டோமா.. வீசிநோமா.. சென்றோமா..' என்று மிகவும் 'டீசண்டான மேட்டராக' மக்களுக்கு உபயோகப்படுவது... கைக்குட்டையை விட எல்லா விதத்திலும் டிஷ்யூ பேப்பர்தான்.
.
ஏற்கனவே, 'பேப்பர் தயாரிக்க மரங்கள் வெட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றனவே' என்ற உலக மக்களின் கவலையில் நாம் ஐக்கியமாகி இருக்க... "கைக்குட்டை" என்ற ஒன்றை இனி மியூசியத்தில்தான் பார்க்க வேண்டிய நிலையை வேண்டுமென்றே உண்டாக்கிவிட்டு, ஏன் இப்படி ஒரேயடியாக மக்கள் தங்கள் தவறான புரிதலால் டிஷ்யூ பேப்பர் பக்கம் சாய்ந்து விட்டார்கள்..?
படுவேகமாக பரவிவரும் இந்த "டிஷ்யூ பேப்பர் கலாச்சாரம்" எதிர்கால மனித நன்மைக்கு ஏற்றதா..?
பேப்பர் செய்ய மரங்கள் வெட்டப்பட்டால் காடுகள் அழிவதால் மழை வருமா..?
Deforestation ஆல் உலக வெப்பமயமாதல் உண்டாகுமே..?
கைக்குட்டை என்ற ஒன்று இருக்க, டிஷ்யூ உபயோகிப்பது வீண் வெட்டி ஆடம்பர செலவு இல்லையா..?
கழிப்பறை சென்று விட்டு தண்ணீர் விட்டு கழுவாமல் ஜஸ்ட் பேப்பரால் துடைப்பதுதான் நாகரீகமா..?
அவசரத்தில் கழுவாமல் அப்படி துடைத்து விட்டு ஓடுவது சுகாதாரக் கேடல்லவா..?
இப்படி ஊரெங்கும் பேப்பர் குப்பைகளை அதிகப்படுத்தும் இந்த டிஷ்யூவால் நேரடி & மறைமுக பாதிப்புகள் என்னவெல்லாம் உள்ளன..?
மிகவும் ஆழ்ந்து ஒரு தனிப்பதிவில் சிந்தித்து அலச வேண்டிய விஷயம் இது..!
இது ஒருபுறம் இருக்க, இந்த டிஷ்யூ பற்றி சில விஷயங்கள் அறிவோம். டிஷ்யூக்களில், Facial tissues, Paper Towels,Toilet Tissues...என்று சில வகைகள் உள்ளன.
மேலே முதல் படத்தில் காட்டப்பட்டுள்ள முதல் வகையான Facial tissues மிக மிக மிருதுவாகவும், மிக மிக எளிதில் நீரை உறிஞ்சக்கூடியதாகவும் இருக்கும். அதனால், முகம் துடைக்க இது பயன்படுகிறது. இதனால், இதில் ஒருவித நறுமண வாசனைகளையும் சேர்த்து இருப்பார்கள். பொதுவாக இவ்வகை கைக்கு அடக்கமான ஒரு ஜான்-அரை ஜான் நீள-அகல அளவு கொண்ட பெட்டிகளில்தான் வருகிறது. ஓர் உருவலில் ஒரு சதுர ஜான் டிஷ்யூவாக மட்டுமின்றி, அதிலேயே இரண்டு அடுக்கு அல்லது மூன்று அடுக்கு என்றும் வருகிறது. மற்ற டிஷ்யூக்களை விட இது விலை சற்று கூட. இதில் மிருதுத்தன்மைக்கும், நறுமனத்துக்கும், வெண்மைக்கும் இரசாயனம் சேர்க்கப்படுகிறது. நீள-அகலம், டிஷ்யூ எண்ணிக்கை மற்றும் மிருது தன்மை இவற்றுக்கு ஏற்ப விலை இருக்கிறது. இதில் மிருதுத் தன்மைக்கும் நறுமணத்துக்கும் வெண்மைக்கும் இரசாயனம் சேர்க்கப்படுகிறது
மற்றொரு வகை Paper Towels. இதுவும் ரோல்களில் சுற்றப்பட்டுத்தான் வருகின்றது. Facial Tissue அளவுக்கு நீரை உறிஞ்சாது என்றாலும் இது ToiletTissueவைவிட சற்று அழுத்தமானது. எளிதில் கிழியாததும் கூட. இதனை "கிச்சன் டவல்" என்றும் கூறுகிறார்கள். கழுவிய பாத்திரங்களை சுத்தப்படுத்தி பளபளப்பாக வைக்க, சமைக்கும் போது அவ்வப்போது கைத்துடைக்க என்று, சமையலறையில் உபயோகப்படுத்த ஏற்ற 'டிஷ்யூ பேப்பர் டவல்'தான்..! இது Facial tissues-ஐவிட மலிவானது..! ஒரு ஜான் அளவு நீள ரோலில் வருகிறது..!
.
அடுத்த Toilet Tissues வகையில், இது ஓரளவுதான் வேகமாக நீரை உறிஞ்சக் கூடியதாக இருக்கும். Facial tissues இல் உள்ளது போல அந்தளவு மிருதுத்தன்மை, நறுமணம் எல்லாம் இருக்காது. பெரும்பாலும் மேலைநாட்டு கழிவறைகளில் தண்ணீருக்கு பதில்' உபயோகிக்கப்படுகிறது. இங்கே ஈரக்கையை துடைக்க பயன்படுகிறது.இவை ரோல்களில் சுற்றப்பட்டு வருகின்றன. அரை ஜான் நீள ரோலில் கிடைக்கிறது.இது மற்றதை விட மலிவானது.
.
இப்படி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பயன்பாட்டு அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. வலதுகையை சாப்பிடவும் பிறருடன் கைகுலுக்கவும் உபயோகித்த மனிதன் தன் இடது கையை கழிவுகளை கழுவ உபயோகித்துக் கொண்டான். ஆனால், நாளடைவில் இடது கையால் சாப்பிடுவதுதான் ஃபேஷன் என்றாகிவிட... பலர் இரண்டு கையாலும் சாப்பிட ஆரம்பிக்க... அந்த கைக்கு கொடுக்கப்பட்டிருந்த வேலையை டிஷ்யூ பேப்பருக்கு தந்துவிட்டான் போலும்..!
விளைவு, துடைத்த டிஷ்யூ பேப்பரை வேஸ்ட் பின்னில் போட முடியாது என்பதால்... ஃபிளஷ் அவுட்டில் தான் அந்த பேப்பரை தண்ணீரோடு அப்புறப்படுத்த இயலும் என்றாகிவிட்ட நிலையில், அது ஃபிளஷ் அவுட் கழிவு குழாயை அடைத்துக்கொண்டு விடாமல், உடனடியாக கரைந்து இலகுவாகி சிதைந்து பிய்ந்து விட வேண்டும். அதற்கு ஏற்பத்தான் அந்த டாய்லட் டிஷ்யூ தயாரிக்க படுகிறது..! இந்நிலையில், 'கழிவுக்கு அனுப்பக்கூடிய பேப்பருக்குப்போய்... நிழலும் மழையும் குளிர்ச்சியும் தரும் சிறப்பு மிக்க மரத்தை அழிப்பதா..?' என்ற எண்ணம் மெத்தப்படித்தோரிடம் மேலோங்க... மேல்நாட்டினர் ஓர் உறுதி பூண்டனர்..!
.
அது என்ன உறுதி என்றால்... "இனி, நேரடியாக மரத்தின் wood pulp இலிருந்து Facial tissues மட்டுமே தயாரிக்கப்படலாம். மற்றபடி, உபயோகப்படுத்தப்பட்ட பழைய வேஸ்ட் பேப்பரில் இருந்துதான் இனி டாய்லட் டிஷ்யூக்கள் (Toilet Tissues) தயாரிக்கப்பட வேண்டும். கழிவை துடைத்து ஃப்ளஷ் அவுட் பண்ண பயன்படும் பேப்பர் செய்யவெல்லாம்... cellulose wood pulp வேண்டி மரங்கள் வெட்டபப்பட்டு அழிக்கப்படுவதை இனி ஒப்புக்கொள்ள / ஏற்க முடியாது" என்று ஒரு மனதாக முடிவு செய்து விட்டனர்..!
இம்முடிவு... விலை மலிவாகவும், எளிதில் கரையக்கூடியதாகவும், மரத்தை பாதுகாக்கவும் டாய்லட் டிஷ்யு செய்ய பயன்படுவதால் உலகம் முழுக்க டாய்லட் டிஷ்யூ உற்பத்தியில் Waste Paper Recycling முறை பின்பற்றப் படுகிறது..!
இந்நிலையில், மரங்களை அழித்து, அதிலிருந்து நேரடி Wood Pulp பயன்படுத்தப் பட்டு தயாரிக்கப் படுவதால் "Virgin Tissue Paper" என்று "பெருமையோடு"(!)வேறு கூறிக்கொள்ளும்... முகம் தொடைக்க என்று ஒதுக்கப்பட்ட இந்த Facial tissues Box தீர்ந்து விட்டால், அல்லது... அது விலை அதிகம் என்று வாங்காமல்... விலை குறைந்த டாய்லட் டிஷ்யூக்களை (தொழுகைக்கு ஒழு செய்து) முகம் தொடைக்க அல்லது மூக்கு சிந்த என்று சிலர் "இதுதாங்க சுத்தமானது..!" என்று பயன் படுத்துவார்கள்..! ஆனால்... எந்த டிஷ்யூ ஆனாலும், 'அவை எப்படி தயாரிக்க படுகின்றன, மெய்யாலுமே "Virgin Tissue Paper" தானா...' என்று... துவைத்து கைக்குட்டை உபயோகிப்போரை தூய்மை அற்றவர்கள் போல நினைக்கும் இவர்கள் அறிவார்களா..? :-)))
அவர்களுக்காக.... சுத்தம் என்று சொல்லி, இந்த 'டாய்லட் டிஷ்யூ'விலா முகம் துடைக்கிறீர்கள்..? என்ற கேள்வியுடன் சைனா வில் உள்ள ஒரு டாய்லட் டிஷ்யூ ஃபேக்டரி... photo gallery..!
நன்றி pinnoottavaathi
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக