அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
21 ஜூன், 2012
துணை ஜனாதிபதியாக ஹமீத் அன்சாரி தொடர, பா.ஜ.க. துணை புரியுமா?
டாக்டர் அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதி பொறுப்புக்கு கொண்டு வர, கடும் முயற்சிகள் மேற்கொண்ட பா.ஜ.க, தற்போதைய துணை ஜனாதிபதி, ஹமீத் அன்சாரி அவர்கள் தொடர்ந்து இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட துணை புரியுமா?
1937ம் ஆண்டு, கொல்கத்தாவில் பிறந்த, முஹம்மத் ஹாமித் அன்சாரி, உத்தர பிரதேசம் காசிப்பூர், முதுபெரும் காங்கிரஸ் தலைவர் முக்தார் அஹ்மத் அன்சாரியின் பேரனாவார். சிம்லாவில் "இரட்டை டாக்டர் பட்டம்" பெற்ற ஹமீத் அன்சாரி, பிறகு கொல்கத்தா
யுனிவெர்சிட்டியில் "பி.ஹெச்.டி" மேற்படிப்பை முடித்தார். 1961ல் "ஐ.எப்.எஸ்" தேர்ச்சி பெற்ற அவர், ஐக்கிய நாடுகளின் சபையின் பிரதிநிதியானார். பிறகு "இந்திய ஹைகமிஷனராக" ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, ஈரான் மற்றும் ஆப்கான் உள்ளிட்ட பல நாடுகளில், திறம்பட செயலாற்றியவர். 1984ல், உயரிய விருதான "பத்மஸ்ரீ " விருதும் கிடைத்தது. தொடர்ந்து, "பஞ்சாப்" மற்றும் அலிகர் பல்கலைக்கழகங்களின் "துணை வேந்தராகவும்" இருந்துள்ளார். கடந்த 2007ல் நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்வான அவர், மாநிலங்களவை தலைவராகவும் கடந்த 5 ஆண்டுகள் திறம்பட சபையை நடத்தியவர். 2012 ஆரம்பத்தில், ஜனாதிபதி பதவிக்கே ஹமீத் அன்சாரி பெயர் தான் பரிசீலக்கப்பட்டு வந்தது. அவர் காங்கிரசுக்கு தீவிர விசுவாசியாக இருக்க மாட்டார் என்பதுடன், கம்யூனிச தலைவர்களுக்கு நெருக்கமான, அவரை ஜனாதிபதியாக்க "மம்தா பானர்ஜி" ஆதரவளிக்க மாட்டார், என்பன காரணங்களை முன் வைத்து, ஜனாதிபதி தேர்தலில் அவரை பின்னுக்கு தள்ளி விட்டு "பிரணாப் முகர்ஜி"யை கொண்டு வந்தது, காங்கிரஸ். தற்போது, பிரனாபையும் மம்தா ஆதரிக்கவில்லை என்பது வேறு விஷயம். எனவே, ஹமீத் அன்சாரி, மீண்டும் "துணை ஜனாபதி"யாக தொடர வழி வகுக்கலாம். குறிப்பாக, அப்துல் கலாம் என்ற முஸ்லிமை நாங்கள் முன்னிறுத்துகிறோம் என்று கூறும் பாஜகவினர், அப்துல் கலாமை போலவே, பல சிறப்பம்சங்களும் கொண்ட ஹமீத் அன்சாரியை துணை ஜனாதிபதி பதவிக்கு முன்னிருத்துவார்களா? அல்லது அப்துல் கலாமை தவிர, எந்த முஸ்லிமுக்கும் நாங்கள் எதிரானவர்கள் தான், என்பதை பதிவு செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். துணை ஜனாதிபதியாக, ஹமீத் அன்சாரி தேர்ந்தெடுக்கப்படுவதில் இப்போதுள்ள ஒரே பின்னடைவு, அவர் மேற்கு வங்கத்தை சார்ந்தவர் என்பது தான், ஜனாதிபதி வேட்பாளர், பிரணாப் முகர்ஜியும் மேற்கு வங்கம், துணை ஜனாதிபதியும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவரா? என்பதே. ஆனால், ஹமீத் அன்சாரியின் பூர்வீகம், உத்தர பிரதேசம் என்பதை கருத்தில் கொண்டால், காங்கிரஸ் உள்ளிட்ட எந்த பிராந்திய கட்சிகளும் எதிர்க்கப்போவதில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக